என் மலர்

  ஆன்மிகம்

  திருப்பரங்குன்றத்தில் பங்குனி தேரோட்டம்
  X

  திருப்பரங்குன்றத்தில் பங்குனி தேரோட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பரங்குன்றம் கோவிலில் பங்குனி பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
  தமிழ் கடவுள் முருகப்பெருமான் குடிகொண்டு அருள் ஆட்சி புரியும் அறுபடை வீடுகளில் முதற் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் தினமும் காலையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்க சப்பரத்திலும், இரவு 7 மணி அளவில் தங்க மயில், தங்க குதிரை, வெள்ளி பூத வாகனம், ஆட்டுக்கிடா வாகனம், யானை வாகனம் என்று வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 16-ந்தேதி கைப்பார நிகழ்ச்சியும், 20-ந்தேதி பங்குனி உத்திரமும், 22-ந்தேதி பட்டாபிஷேகமும், நேற்று முன்தினம் திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது.

  இந்தநிலையில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று மகா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதனையொட்டி கோவில் வாசல் முன்பு 5 அடுக்குகளாக வண்ணமயமான அலங்கார துணியை கொண்டு அலங்கரிக்கப்பட்டு பெரிய தேர் தயாரானது. அந்த தேரை இழுத்துச் செல்வது போல மரத்திலான 4 குதிரைகள் இணைக்கப்பட்டு இருந்தது.

  தேரோட்டத்தையொட்டி அதிகாலை 5.40 மணிக்கு உற்சவர் சன்னதியில் இருந்து மேள தாளங்கள் முழங்க தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு காவல் தெய்வமான கருப்பசாமி சன்னதிக்கு வந்தார். அங்கு சிறப்பு பூஜை நடந்தது. இதனையடுத்து தெய்வானையுடன் முருகப்பெருமான் பெரிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் தேரின் சக்கரத்தில் தேங்காய் சூறைவிடப்பட்டது.  அதன்பிறகு கோவில் முதல் ஸ்தானிகர் சுவாமிநாதன் தேரில் ஏறி நின்று வெள்ளை துணியை வீசினார். காலை 6.18 மணி அளவில் நிலையில் இருந்து தேர் புறப்பட்டது. அப்போது அங்கு திரளாக கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா’ என்று கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் தேரின் வடத்தை பிடித்து இழுத்தனர்.

  விநாயகர் எழுந்தருளிய சிறிய சட்டத்தேரானது பெரிய தேருக்கு முன்பாக சென்றது. அதை ஏராளமான பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். சிறிய சட்டத்தேரும், பெரிய தேரும் ஒன்றன்பின் ஒன்றாக கிரிவல பாதையில் ஆடி, அசைந்து பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது. அவை கண்கொள்ளா காட்சியாக இருந்தது. 3 கி.மீ. சுற்றளவு கொண்ட கிரிவல பாதையில் 5 மணி நேரம் வலம் வந்த தேர்கள், காலை 10.55 மணி அளவில் நிலைக்கு வந்தன. உடனே பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக வாழைப்பழங்களை சூறைவிட்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
  Next Story
  ×