என் மலர்
ஆன்மிகம்

மகா சிவராத்திரியையொட்டி மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 4-ந்தேதி மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 4-ந் தேதி மகா சிவராத்திரி விழா நடக்கிறது. இதையொட்டி அன்று இரவு முழுவதும் கோவில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
சுந்தரேசுவரர் சன்னதி, மீனாட்சி அம்மன் சன்னதி மற்றும் உற்சவர் சன்னதிகளில் இரவு முழுவதும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இந்த பூஜைகள் மறுநாள்(5-ந் தேதி) காலை வரை நடக்கிறது.
எனவே பொதுமக்களும், பக்தர்களும் அபிஷேக பொருட்களான பால், தயிர், இளநீர், பன்னீர், பழவகைகள், தேன், மஞ்சள்பொடி, எண்ணெய், நெய் போன்ற பொருட்களை 4-ந் தேதி மாலைக்குள் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் உள்ள உள்துறை அலுவலகத்தில் வழங்கலாம். அன்றைய தினம் இரவு முழுவதும் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த தகவலை கோவில் இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

Next Story