search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தாமிரபரணி அன்னைக்கு நடந்த தீர்த்தவாரியில் பங்கேற்ற பக்தர்கள்.
    X
    தாமிரபரணி அன்னைக்கு நடந்த தீர்த்தவாரியில் பங்கேற்ற பக்தர்கள்.

    தாமிரபரணி புஷ்கரம்: நெல்லை, தூத்துக்குடியில் 23 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்

    நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் மொத்தம் 22 லட்சத்து 80 ஆயிரத்து 493 பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.
    தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தாமிரபரணி ஆற்றின் தீர்த்தக்கட்டங்கள், படித்துறைகளில் தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். இது தொடர்பாக போலீசார் எடுத்த கணக்கெடுப்பு விவரம் வருமாறு:-

    நெல்லை புறநகர் மாவட்டத்தில் உள்ள 25 தீர்த்தக்கட்டம் மற்றும் படித்துறைகளில் 4 லட்சத்து 85 ஆயிரத்து 693 ஆண்களும், 6 லட்சத்து 9 ஆயிரத்து 800 பெண்களும் என 10 லட்சத்து 95 ஆயிரத்து 493 பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். இதேபோல் நெல்லை மாநகரில் உள்ள 4 படித்துறைகளில் மட்டும் 2¼ லட்சம் பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 27 படித்துறைகளில் மொத்தம் 9 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.

    நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் மொத்தம் 22 லட்சத்து 80 ஆயிரத்து 493 பக்தர்கள் புனித நீராடி உள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×