search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தாமிரபரணி ஆற்றில் 149 தீர்த்தக் கட்டங்கள்
    X

    தாமிரபரணி ஆற்றில் 149 தீர்த்தக் கட்டங்கள்

    தாமிரபரணி ஆற்றில் சுவாமிக்கு தீர்த்தவாரி நடைபெறக்கூடிய படித்துறைகள் அனைத்தும் தீர்த்தக்கட்டம் என்று அழைக்கப்படுகின்றன. தாமிரபரணி ஆற்றில் 149 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன.
    தாமிரபரணி ஆற்றில் சுவாமிக்கு தீர்த்தவாரி நடைபெறக்கூடிய படித்துறைகள் அனைத்தும் தீர்த்தக்கட்டம் என்று அழைக்கப்படுகின்றன. இந்த தீர்த்தக்கட்டங்கள் அனைத்திலும் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. தாமிரபரணி ஆற்றில் 149 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு முதல் புன்னக்காயல் வரை பாய்ந்து ஓடும் தாமிரபரணி ஆற்றில் படித்துறைகளில் பூஜைகள் நடக்கிறது. முறப்பநாடு, ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ஏரல், முக்காணி, ஆத்தூர், சேர்ந்தப்பூமங்கலம் ஆகிய இடங்களில் புஷ்கர விழா பூஜைகள் நடக்கிறது.

    இந்த படித்துறைகளில் அந்தந்த ஊர் மக்கள் சார்பில் தினமும் புஷ்கர பூஜைகள், சிறிய அளவிலான ஹோமங்கள் நடத்தப்படுகிறது. தினமும் மாலையில் தாமிரபரணி நதிக்கு ஆரத்தி எடுக்கும் நதி ஆராதனை நிகழ்ச்சி நடக்கிறது.

    முறப்பநாட்டில் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் அமிர்த மிருத்ஞ்சய ஹோமம் நடக்கிறது. பிரமாண்டமான அதிருத்ர பெருவேள்வி நடக்கிறது. மக்கள் தாமிரபரணிக்கு விளக்கு ஏற்றி ஆராதனை செய்யும் வகையில் தீபலட்சுமி பூஜை நடக்கிறது. இதில் மக்கள் தீபங்களை ஏற்றி ஆராதனை செய்யலாம்.

    விழாவின் நிறைவுநாளான 24-ந் தேதி 5,004 திருவிளக்கு பூஜை நடக்கிறது. விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கப்படுகிறது. அதே போன்று போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து உள்ளனர். 
    Next Story
    ×