search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நல்ல காரியங்களை ஆடிப்பெருக்கு அன்று தொடங்கலாம்
    X

    நல்ல காரியங்களை ஆடிப்பெருக்கு அன்று தொடங்கலாம்

    பொதுவாக ஆடி மாதத்தை ‘நிலையற்ற மாதம்’ என்பர். அட்சயத் திருதியை போலவே ஆடிப் பெருக்கும் நல்ல காரியங்கள் துவங்குவதற்கு உகந்த நாள்.
    அட்சயத் திருதியை போலவே ஆடிப் பெருக்கும் நல்ல காரியங்கள் துவங்குவதற்கு உகந்த நாள். பொதுவாக ஆடி மாதத்தை ‘நிலையற்ற மாதம்’ என்பர். அந்த மாதத்தில் எந்த ஒரு காரியம் செய்தாலும், அது ஆடிப் போய் விடும் என்று சொல்லப்படும். ஆனால், இந்த ஆடி மாதத்தில் ஆடிப்பெருக்கு தினம் விதிவிலக்கு.

    ஆடி 18-ஆம் தேதி அன்று எந்த நட்சத்திரம், திதி வந்தாலும் கவலை வேண்டாம். அன்றைய தினம் புதிய தொழில், புது முயற்சி, வியாபார முன்னேற்றம் போன்றவற்றை தாராளமாக மேற்கொள்ளலாம் என்கிறார்கள் அருளாளர்கள். இந்த தினத்தில் துவக்கப்படுகிற எந்த ஒரு நற்செயலும் பன்மடங்கு விருத்தி அடைந்து, கூடுதல் நன்மை அளிக்கும். இன்றைக்குத் துவங்குகிற வங்கிக்கணக்குகள், சேமிப்புகள் போன்றவை பன்மடங்கு பெருகும்.

    வீட்டுக்குத் தேவையான ஜவுளிகள், நகைகள், இதர பொருட்கள் வாங்க உகந்த தினம். என்றும் மங்களம் தரும் பொருட்கள் வாங்கலாம். உதாரணத்துக்கு மஞ்சள், குங்குமம், நாட்டுச் சர்க்கரை போன்றவை.

    வெண்மை நிறம் கொண்ட பொருட்களை வாங்கினால், வீட்டில் சுபிட்சம் வளரும். குறைந்த பட்சம் உப்பு, அரிசி. படிக்கின்ற குழந்தைகளுக்கு எழுது பொருட்கள், பாடம் தொடர்பான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கலாம்.

    எனவே, இன்றைய தினம் நதி தேவதைகளை - பெண் தெய்வங்களை வணங்கி நம் மனதில் இருக்கிற மாசுகள் அகல பிரார்த்தித்துக் கொள்வோம்.

    ஆடி 18-க்கு என்ன சிறப்பு?

    இந்து சமயம் தொடர்பான பண்டிகைகளும் பெருவிழாக்களும் பெரும்பாலும் நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டே கொண்டாடப்படுகின்றன. ஆனால், பல லட்சக்கணக்கானோர் கொண்டாடும் இந்த ஆடிப்பெருக்கு மட்டும் ஆடி மாதத்தின் 18-ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. அன்றைக்கு என்ன நட்சத்திரம், என்ன திதி - இப்படி எதுவும் பார்ப்பது கிடையாது.
    Next Story
    ×