search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவன் கோவில்களில் முக்கனி அபிஷேகம் 28-ந்தேதி நடக்கிறது
    X

    சிவன் கோவில்களில் முக்கனி அபிஷேகம் 28-ந்தேதி நடக்கிறது

    தமிழ் மாதத்தில் ஒவ்வொரு பவுர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதன்படி ஆனி மாத பவுர்ணமியையொட்டி வருகிற28-ந் தேதி சிவபெருமானுக்கு முக்கனி அபிஷேகம் செய்யப்படுகிறது.
    தமிழ் மாதத்தில் ஒவ்வொரு பவுர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதன்படி ஆனி மாத பவுர்ணமியையொட்டி வருகிற 28-ந் தேதி(வியாழக் கிழமை) சிவபெருமானுக்கு முக்கனிகளான மா, பலா, வாழையால் பூஜை, அபிஷேகம் செய்யப்படுகிறது. சிவபெருமானால் பல திருவிளையாடல் நடத்தப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மூலவரான சொக்கநாத பெருமானுக்கு உச்சிகால வேளையில் முக்கனி பூஜை, அபிஷேகம் நடைபெறவுள்ளது.

    அதற்கு முன்னதாக நாளை அருணகிரி நாதர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. அன்று இரவு ஆவணி மூல வீதிகளில் அருணகிரி நாதர் புறப்பாடு நடைபெறும். மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 19-ந் தேதி முதல் நடைபெற்று வரும் ஆனி ஊஞ்சல் உற்சவம் 28-ந் தேதி நிறைவடைகிறது, 7-ம் நாளான நேற்றும் 100-கால் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சலில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவிழா காலங்களில் தங்க தேர் உலா, உபயதிருக்கல்யாணம் போன்றவை நடைபெறாது.

    ஆனி பவுர்ணமி அன்று மதுரை இன்மையில் நன்மை தருவார், முக்தீஸ்வரர், திருவாப்புடையார், தென் திருவாலவாய, பழைய சொக்கநாதர் ஆகிய கோவில்களிலும், திருவாதவூர், திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி, சோழவந்தான், திருமங்கலம் போன்ற பல பகுதிகளிலும் உள்ள சிவன் கோவில்களில் உச்சி காலத்தில் முக்கனி பூஜை, அபிஷேகம் நடைபெறுகிறது. மாலையில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறும். 
    Next Story
    ×