என் மலர்

  ஆன்மிகம்

  ஸ்ரீரங்கம் கோவிலில் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் நாளை தொடங்குகிறது
  X

  ஸ்ரீரங்கம் கோவிலில் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் நாளை தொடங்குகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஸ்ரீரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் நாளை (சனிக்கிழமை) தொடங்கி வருகிற 24-ந்தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.
  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நிகழ்வு டோலோத்ஸவம் என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்ரீரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் நாளை (சனிக்கிழமை) தொடங்கி வருகிற 24-ந்தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.

  ஊஞ்சல் உற்சவத்தையொட்டி நாளை மாலை 5.30 மணிக்கு ஸ்ரீரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்து சேருகிறார்.

  அங்கு ரெங்கநாச்சியார் இரவு 7 மணி முதல் 8 மணிவரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் 8.45 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். ஊஞ்சல் உற்சவ நாட்களில் மாலை 3 மணிமுதல் 5 மணிவரை மூலவர் சேவை கிடையாது.
  Next Story
  ×