search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ranganathaswamy temple"

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    மொகலாய மன்னர்களின் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் கோவில் உற்சவர் நம்பெருமாள் விக்ரகம் அவர்களிடம் சிக்காமல் இருக்க திருப்பதியில் 40 ஆண்டுகள் வைத்து பாதுகாக்கப்பட்டது. இதை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆடி மாதம் 1-ந் தேதி வஸ்திர மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலிருந்து திருப்பதிக்கு எடுத்துச்செல்லப்படும் வஸ்திரங்கள், குடைகள், அனைத்து வகை மலர்கள், பழங்கள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்கலப்பொருட்கள் அனைத்தும் கோவில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.


    திருப்பதி ஏழுமலையானுக்கு அனுப்பப்பட்ட வஸ்திர மரியாதை பொருட்களை படத்தில் காணலாம்.

    தொடர்ந்து மங்கல பொருட்கள் உள்ள ஒரு தட்டை யானை மீது வைத்தும், மற்ற தட்டுகளை அதிகாரிகள், கோவில் ஊழியர்கள் கையில் எடுத்து கொண்டும் ஊர்வலமாக வந்து பின்னர் கோவிலுக்கு உள்ளே வந்தனர். பின்னர் இரவில் வஸ்திர மரியாதையை திருப்பதிக்கு காரில் எடுத்து சென்றனர்.

    இவர்கள் திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை அளித்து விட்டு ஸ்ரீரங்கம் திரும்புவார்கள். நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், தலைமை அர்ச்சகர்்கள், அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். 
    ×