என் மலர்

  ஆன்மிகம்

  கும்பாபிஷேகம் நடைபெற உள்ள மாகாளியம்மன் கோவிலை படத்தில் காணலாம்.
  X
  கும்பாபிஷேகம் நடைபெற உள்ள மாகாளியம்மன் கோவிலை படத்தில் காணலாம்.

  தொங்குட்டிபாளையம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 29-ந் தேதி நடக்கிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொங்கலூர் அருகே தொங்குட்டிபாளையத்தில் உள்ள மாகாளியம்மன்கோவில் கும்பாபிஷேகம் 29-ந் தேதி நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
  பொங்கலூர் அருகே உள்ள தொங்குட்டிபாளையத்தில் விநாயகர், மாகாளியம்மன் மற்றும் காமாட்சியம்மன் கோவில் உள்ளன. இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆனதால் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த ஊர் பெரியவர்கள் முடிவு செய்தனர். அதன்அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. கோவில் கோபுரங்களுக்கு வண்ணங்கள் தீட்டப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்றது. இந்த பணிகள் முடிந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த தேதி முடிவு செய்யப்பட்டது.

  அதன்படி 29-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதற்காக யாகசாலை அமைக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவின் முதல் நாளாக இன்று(சனிக்கிழமை) காலை 8 மணிக்கு விநாயகர் பூஜை, காலை 10.45 மணிக்கு தீபாராதனையும், மாலை 4 மணிக்கு வாஸ்து சாந்தியும், இரவு 8.30 மணிக்கு முதற்கால யாக பூஜையும் நடைபெறுகிறது.

  நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு 2-ம் காலை யாக பூஜையும், மாலை 6 மணிக்கு 3-ம் கால யாக பூஜையும் நடைபெறுகிறது. 29-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு 4-ம் கால யாக பூஜையும், காலை 6.30 மணிக்கு கலசங்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகிறது.

  பின்னர் காலை 7 மணிக்கு கோவில் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து விநாயகர், மாகாளியம்மன் மற்றும் காமாட்சியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேம் நடத்தப்படுகிறது. காலை 10 மணிக்கு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
  Next Story
  ×