search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சவுந்தரநாயகி உடனாய ஜடாயுபுரீஸ்வரர் கோவில் - மன்னார்குடி
    X
    சவுந்தரநாயகி உடனாய ஜடாயுபுரீஸ்வரர் கோவில் - மன்னார்குடி

    சவுந்தரநாயகி உடனாய ஜடாயுபுரீஸ்வரர் கோவில் - மன்னார்குடி

    மன்னார்குடி அருகிலுள்ள கழுவத்தூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    மன்னார்குடி அருகிலுள்ள கழுவத்தூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவாலயம் உள்ளது. சீதையை ராவணன் கடத்திச் சென்றபோது பறவைகளின் அரசனான ஜடாயு அவனை மறித்தார். ராவணனோ அவரது இறக்கையை வெட்டி வீழ்த்தினான். காயத்துடன் கிடந்த அவர் ராமனிடம் ராவணன் சீதையைக் கடத்தி செல்லும் விஷயத்தைச் சொல்லி உயிர் விட்டார் அவருக்கு ராமன் ஈமக்கிரியை செய்து வைத்தார். ஜடாயு இந்தப்பகுதியில் தங்கியிருந்தபோது பூஜித்த சிவலிங்கத்திற்கு ஜடாயுபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.1

    இந்தக் கோயில் குறித்து கல்வெட்டு ஆய்வாளர் கூறுவதாவது. 11 நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கற்கோயில் இது : சோழ மண்டலத்து அருமொஃஸி தேவ வள நாட்டு புறங்கறம்பை நாட்டுக் கெழுவத்தூர் என ராஜராஜசோழனின் கல்வெட்டில் இந்த ஊரின் பெயர் உள்ளது. அம்பாளின் பெயர் சவுந்திர நாயகி. கோயில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டதாம். முழுமையாக சிதிலமடைந்து விட்டது. இருப்பினும் மூலவர் சிலைகள் விக்னேஸ்வரர் சண்முகர்  சண்டிகேஸ்வரர் அம்மன் சன்னதி கோபுரங்கள் நவக்கிரக மண்டபம் சகஸ்ரலிங்கம் ஆகியவை அப்படியே இருந்தன. இதையடுத்து இவற்றை மீண்டும் பிரதிஷ்டை செய்ய திருப்பணி நடந்து வருகிறது.

    வேலைப்பாடு மிக்க கருங்கல் நந்தி மண்டபம் இங்குள்ளது. இங்குள்ள நர்த்தன வினாயகர் மான் மழு ஏந்திய அதிகார நந்தி அவரது மனைவி சயஸ் சிறகுகளுடன் மனித வடிவிலுள்ள ஜடாயு சிற்பங்கள் சிறப்பானவை. கருவறையில் தெற்கில் தட்சிணா மூர்த்தி வீற்றிருக்கிறார். இவர் அமர்ந்துள்ள பாறையின் கீழ் பாம்பு புலி சிங்கம் பறவைகள் படுத்த நிலையில் காளை இருப்பது வித்தியாசமானது.

    மன்னார்குடியில் இருந்து பெருகவாழ்ந்தான் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கழுகத்தூர். இங்கு சவுந்தரநாயகி உடனாய ஜடாயுபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் பிரகாரத்தில் 12 ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ராஜ சிம்மாசனத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இங்கு ஒரு ராசியைக் கூறி அர்ச்சனை செய்தால், 12 ராசிகளுக்கும் அர்ச்சனை செய்த பலன் கிடைக்கும்.

    செல்லும் வழி   மன்னார்குடி முத்துப்பேட்டை ரோட்டில் 20 கிமீ தூரத்தில் கழுவத்தூர்.
    Next Story
    ×