search icon
என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    அன்னை அகிலாண்டேவரி
    X
    அன்னை அகிலாண்டேவரி

    திருவானைக்காவல் அன்னை அகிலாண்டேவரி பாடல்

    கருணை பொழிகின்ற இத்திருமுகநாயகி, வழிபடும் அன்பருக்கெல்லாம் அட்டமாசித்திகள் அருளித் திகழ்கின்றாள். அன்னை அகிலாண்டநாயகியை வணங்கி வழிபட்ட தாயுமானவர்.

    அன்னை அகிலாண்டேவரி அகிலாண்டகோடி ஈன்ற அன்னையே என்றாலும், பின்னரும் கன்னி என மறைபேசும் ஆனந்த வடி மயிலாக விளங்குகின்றாள். கருணை நோக்குடன் கருவறையில் காட்சியளிக்கும் அன்னையின் எதிரில், சங்கராச்சாரிய சுவாமிகள் வைத்த விநாயகர், உள்ளார். அன்னையின் திருவுருவம் நல்ல கம்பீரமான திருத்தோற்றம்.

    கருணை பொழிகின்ற இத்திருமுகநாயகி, வழிபடும் அன்பருக்கெல்லாம் அட்டமாசித்திகள் அருளித் திகழ்கின்றாள். அன்னை அகிலாண்டநாயகியை வணங்கி வழிபட்ட தாயுமானவர்.

    “அட்டசித்தி நல் அன்பருக்கு அருள
    விருது கட்டிய பொன் அன்னமே!
    அண்டகோடி புகழ்காவை வாழும்
    அகிலாண்டநாயகி என் அம்மையே”

    என்று அன்னையின் அருள் நிலையைப போற்றுகின்றார். அன்னை அகிலாண்ட நாயகியைக் கண்ணாரக் கண்டு வழிபட்ட மற்றொரு கவிஞன்.

    “அளவறு பிழைகள் பொறுத்தருள் நின்னை
    அணிஉருப் பாதியில் வைத்தான்
    தளர்பிழை மூன்றே பொறுப்பவள் தன்னைச்
    சடைமுடி வைத்தனன் அதனால்
    பிளவியல்மதியம் சூடிய பெருமான்
    பித்தன் என்றொருபெயர் பெற்றான்
    களமர்மொய் கழனி சூழ்திரு ஆனைக்
    கா அகிலாண்ட நாயகியே”

    என்று பாடிப் போற்றுகின்றான்.

    அகிலம் ஈன்ற அன்னையாகிய அகிலாண்ட நாயகியை (உமையை) ஒரு பாகத்தில் வைத்து கங்கையாகிய மங்கையைச் சடைமுடியில் வைத்துக்காட்சி தருபவன் இறைவன். அன்னையைக் கண்டு வழிபட்ட அக் கவிஞன், அம்மையே! அகிலாண்ட நாயகியே என் போன்ற அடியார்கள் புரியும் எண்ணிறந்த பிழைகளைப் பொருத்தருள் புரியும் அன்னையாகிய உன்னை ஒரு பாகத்தில் வைத்த பரமன் மூன்று பிழைகட்கு மேல் பொறுக்காத ஒரு மங்கையைத் தன் சடைமுடியின் மேல் ஏற்றிவைத்தானே! இதனால் அன்றே பித்தன் என்ற ஒரு பெயரையும் பெற்றான் என்று பாடுவதன் வாயிலாக, அகிலாண்ட நாயகியின் அருட்சிறப்பினைப் போற்றுகின்றான்.

    இங்ஙனம் அருள்பாலிக்கும் வகையில் சிறந்து விளங்குகின்ற அன்னை அகிலாண்டேசுவரி, மிகப்பெரிய தனித் திருக்கோவிலில், அடர்ந்த தென்னந் தோப்பினுள் திருச் சந்நிதி கொண்டு தனிப் பொலிவுடன் திகழ்கின்றாள். அன்னை சந்நிதிக்குச் செல்லும் வழியில் பெரிய தூண் ஒன்றில் ஏகபாத மூர்த்தி காணப்படுகின்றது. மும்மூர்த்திகளையும் தமது திருமேனியில் படைத்து, பிறகு அவர்களைத் தமது திருமேனியிலே ஒடுக்கி விடுகின்றார். சிவபெருமான் என்பதை ஏகபாத மூர்த்தி சிற்பம் உணர்த்துகின்றது. அன்னை சந்நிதியின் தென்மேற்கு மூலையில் பஞ்ச முக விநாயகர் விளங்குகின்றார். அவருக்குத்தலைமேல் ஒரு முகமும். இரு காது புறமும் இரு முகங்களும், பின்புறமாக ஒரு முகமும் சேர்ந்து ஐந்து முகங்களுடன் காட்சி தருகின்றார்.
    Next Story
    ×