என் மலர்

  ஸ்லோகங்கள்

  நித்யா தேவி
  X
  நித்யா தேவி

  தோஷங்கள் அகல சொல்ல வேண்டிய சர்வாத்மிகா தேவி மந்திரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த தேவியை வழிபாடு செய்து வந்தால் தொல்லைகள் அனைத்தும் நீங்கும். தடைகள் விலகும். தோஷங்கள் அகலும். சகல சவுபாக்கியங்களும், ஐஸ்வரியங்களும் வந்தடையும்.
  காலத்தைக் குறிப்பிடும் வடிவான தேவி இவள். ‘சர்வாத்மிகா’ என்ற திருநாமம் கொண்ட இத்தேவி பொருட்களை இயக்கும் சக்தியாய்த் திகழ்கிறாள். எங்கும் நிறைந்தவள். உதய நேரத்தில் இருக்கும் சூரியனின் நிறம் கொண்டு பிரகாசிப்பவள். மந்தகாசமான திருமுகத்தைக் கொண்டவள். பிரகாசமான மகுடம் தரித்து தன் திருக்கரங்களில் பாசம், அங்குசம், புத்தகம், ஜெபமாலை, புஷ்பபாணம், கரும்பு - வில், வாள், கேடயம், கபாலம், சூலம் ஏந்தி அபய -வரத முத்திரை தாங்கியிருப்பவள்.

  கணக்கில்லாத சக்திகள் அவளை ஓர் முழுமையான வட்டவடிவில் சூழ்ந்துள்ளன. சவுந்தர்ய ரூபவதியான இவள், அன்பர்களின் மனதிற்கு இனியவள். மங்களங்கள் தருபவள். நீலகண்டனின் இதயத்தில் வாழ்பவள். இந்த தேவியை வழிபாடு செய்து வந்தால் தொல்லைகள் அனைத்தும் நீங்கும். தடைகள் விலகும். தோஷங்கள் அகலும். சகல சவுபாக்கியங்களும், ஐஸ்வரியங்களும் வந்தடையும்.

  வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை தசமி, தேய்பிறை சஷ்டி

  மந்திரம்:-

  ஓம் நித்யா பைரவ்யை வித்மஹே
  நித்யா நித்யாயை தீமஹி
  தன்னோ யோகிநி ப்ரசோதயாத்
  Next Story
  ×