search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீனிவாச பெருமாள்
    X
    ஸ்ரீனிவாச பெருமாள்

    தொழிலில் லாபம் பெருக ஸ்ரீனிவாச பெருமாள் ஸ்லோகம்

    திருப்பதியில் கோயில் கொண்டிருக்கும் வெங்கடாசலபதி ஆன ஸ்ரீனிவாச பெருமாளுக்கு உரிய ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் தொழில் மற்றும் வியாபாரங்களில் லாபங்கள் பெருகும். வறுமை நிலை நீங்கும். புதன், சனி கிரக பாதிப்புகளும் விலகும்.
    திருப்பதியில் கோயில் கொண்டிருக்கும் வெங்கடாசலபதி ஆன ஸ்ரீனிவாச பெருமாளுக்கு உரிய ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் தொழில் மற்றும் வியாபாரங்களில் லாபங்கள் பெருகும். வறுமை நிலை நீங்கும். புதன், சனி கிரக பாதிப்புகளும் விலகும்.

    ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
    ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
    ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்
    ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே

    பொருள்: திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீனிவாசப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம் என்பதே இந்த ஸ்லோகத்தின் பொதுவான பொருளாகும்.

    திருப்பதியில் கோயில் கொண்டிருக்கும் வெங்கடாசலபதி ஆன ஸ்ரீனிவாச பெருமாளுக்கு உரிய ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் 27 முறை துதிப்பது நன்மைகளைத் தரும். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு தீபமேற்றி, இனிப்பு நைவேத்தியம் வைத்து, இந்த மந்திரத்தை 108 முறை அல்லது 1008 முறை உரு ஜெபித்து வழிபடுவதால் உங்கள் தொழில் மற்றும் வியாபாரங்களில் லாபங்கள் பெருகும். வறுமை நிலை நீங்கும். புதன், சனி கிரக பாதிப்புகளும் விலகும்.
    Next Story
    ×