search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விஷ்ணு
    X
    விஷ்ணு

    ஸ்ரீ விஷ்ணுயின் அருளை பெற சொல்ல வேண்டிய ஸ்துதி

    மிகவும் பலன் தரக்கூடிய இந்த தியான ஸ்லோகத்தை பக்தி சிரத்தையுடன் தியானித்தால் ஸ்ரீயின் நாயகனான எம்பெருமானின் அருளைப் பெறலாம்.
    குருக்ஷேத்ர போர்களத்தில் அம்புப் படுக்கையில் தனது இறுதி நாட்களில் இருந்த பீஷ்மர் தருமருக்கு அருளிய விஷ்ணு சகஸ்ரநாமத்தில்,‘தியான’ பகுதியில் வரும் ஸ்லோகத்தை இப்பதிவில் காணலாம். மிகவும் பலன் தரக்கூடிய இந்த தியான ஸ்லோகத்தை பக்தி சிரத்தையுடன் தியானித்தால் ஸ்ரீயின் நாயகனான எம்பெருமானின் அருளைப் பெறலாம்.

    சாந்தாகாரம் புஜகசயநம் பத்மநாபம் ஸுரேசம்
    விச்வாதாரம் ககன ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்
    லசஷ்மீகாந்தம் கமலநயனம் யோகிஹ்ரு த்யான கம்ய
    வந்தே விஷ்ணும் பவபயகரம் ஸர்வலோகைக நாதம

    பொருள்:

    அமைதியான சொரூபம் கொண்டவர் திருமால். ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருக்கும் அவருடைய நாபியில் தாமரை பூத்திருக்க… தேவர்களுக்கு  தலைவராகவும், உலகங்களுக்கு ஆதாரமாகவும், ஆகாயத்தைப் போன்று எங்கெங்கும் பரந்து இருப்பவருமாகத் திகழ்கிறார் அவர்.

    மேகம் போன்று கருநீலம் கொண்டவரும், மங்கலத் திருமேனியரும், மகாலட்சுமியின் நாயகனும், தாமரை போன்ற கண்களைக் கொண்டவரும், யோகியரின் சிந்தையில் உறைபவரும், பிறப்பு- இறப்பு பற்றிய அச்சத்தை போக்குபவருமான ஸ்ரீமகாவிஷ்ணுவை வணங்குகிறேன்.
    Next Story
    ×