என் மலர்tooltip icon

    இந்த வார விசேஷங்கள்

    19.12.2017 முதல் 25.12.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    19-ந்தேதி (செவ்வாய்) :

    * சகல விஷ்ணு ஆலயங் களிலும் திருப்பல்லாண்டு உற்சவம் ஆரம்பம்.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் வேதபிரான் பட்டர் மாளிகையில் பச்சை பரப்பி கடாசித்து கோபால விலாசம் எழுந்தருளல்.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் திருமொழி திருநாள் தொடக்கம்.
    * கீழ்நோக்கு நாள்.

    20-ந் தேதி (புதன்) :

    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள், காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆகிய தலங்களில் பகல்பத்து உற்சவ சேவை.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் ராஜாங்க சேவை.
    * கீழ்நோக்கு நாள்.

    21-ந் தேதி (வியாழன்) :

    * பெருஞ்சேரி வாகீஸ்வரர் புறப்பாடு கண்டருளல்.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் சேர்த்தியில் வேணுகான கண்ணன் திருக்கோலமாய் பல்லக்கில் எழுந்தருளல்.
    * மதுரை கூடலழகர், திருமோகூர் காளமேகப்பெருமாள் ஆகிய தலங்களில் பகல் பத்து சேவை.
    * மேல்நோக்கு நாள்.

    22-ந் தேதி (வெள்ளி) :

    * சதுர்த்தி விரதம்.
    * திருவோண விரதம்.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் ஆண்டாள் திருக்கோலம், பல்லக்கில் வீணை மோகனி அலங்காரமாய் காட்சியளித்தல்.
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் ஆகிய தலங்களில் திருமொழி திருநாள் உற்சவ சேவை.
    * இன்று சகல ஆலயங்களிலும் விநாயகப் பெருமானை வழிபடுதல் நன்று.
    * மேல்நோக்கு நாள்.



    23-ந் தேதி (சனி) :

    * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் உற்சவம் ஆரம்பம்.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் காளிங்க நர்த்தனம்.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்- ரெங்கமன்னார், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆகிய தலங்களில் பகல் பத்து உற்சவ சேவை.
    * திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் சிறப்பு ஆராதனை.
    * மேல்நோக்கு நாள்.

    24-ந் தேதி (ஞாயிறு) :

    * ஸ்ரீவிநாயகர் சஷ்டி.
    * சஷ்டி விரதம்.
    * திருச்செந்தூர், திருநெல்வேலி, மதுரை, சிதம்பரம், சுசீந்திரம், செப்பரை ஆகிய கோவில்களில் திருவாதிரை உற்சவம் ஆரம்பம்.
    * திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் பவனி.
    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர், திருவள்ளூர் வீரராகவர் ஆகிய தலங்களில் பகல் பத்து உற்சவம் ஆரம்பம்.
    * மேல்நோக்கு நாள்.

    25-ந் தேதி (திங்கள்) :

    * கிறிஸ்துமஸ் பண்டிகை.
    * ஆவுடையார் கோவில் மாணிக்கவாசகர், முதலமைச்சர் திருக் கோலத்துடன் இரவு பூத வாகனத்தில் பவனி.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் கஜேந்திர மோட்ச லீலை.
    * குடந்தை சாரங்கபாணி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் ஆகிய தலங்களில் பகல் பத்து உற்சவம்.
    * சிதம்பரம் சிவபெருமான் காலை சந்திர பிரபையிலும், இரவு அன்ன வாகனத்திலும் வீதி உலா.
    * கீழ்நோக்கு நாள்.
    12.12.2017 முதல் 18.12.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    12-ந்தேதி (செவ்வாய்) :

    * சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    * குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு கண்டருளல்.
    * சமநோக்கு நாள்.

    13-ந் தேதி (புதன்) :

    * முகூர்த்த நாள்.
    * திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.
    * சமநோக்கு நாள்.

    14-ந்தேதி (வியாழன்) :

    * முகூர்த்த நாள்.
    * சர்வ ஏகாதசி.
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
    * திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    * சமநோக்கு நாள்.

    15-ந்தேதி (வெள்ளி) :

    * பிரதோஷம்.
    * வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் தெப்ப உற்சவம்.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
    * சகல சிவன் கோவில்களிலும் இன்று மாலை நந்தீஸ்வரர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயத்தில் சுவாமி வீதி உலா.
    * கீழ்நோக்கு நாள்.



    16-ந்தேதி (சனி) :

    * மாத சிவராத்திரி.
    * தனுர் மாத பூஜை ஆரம்பம்.
    * சகல ஆலயங்களிலும், திருப்பள்ளி எழுச்சி பூஜை தொடக்கம்.
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தலங்களில் சுவாமி புறப்பாடு கண்டருளல்.
    * குச்சானூர் சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சிறப்பு ஆராதனை.
    * இன்று கருட தரிசனம் நன்மை தரும்.
    * சமநோக்கு நாள்.

    17-ந்தேதி (ஞாயிறு) :

    * அமாவாசை.
    * நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பூர்ணாபிஷேகம்.
    * சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் உள்ள அனுமனுக்கு சிறப்பு ஆராதனை.
    * கீழ்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் உள்ள அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
    * திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள், விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
    * சமநோக்கு நாள்.

    18-ந்தேதி (திங்கள்) :

    * அனுமன் ஜெயந்தி.
    * அமாவாசை சோமவாரம்.
    * மதுரை கூடலழகர் ஆலயத்தில் கருடோற்சவம்.
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருநெடு தாண்டவம்.
    * கீழ்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    * சமநோக்கு நாள்.
    28.11.2017 முதல் 4.12.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    28-ந்தேதி (செவ்வாய்) :

    * திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் காலை வெள்ளி யானை வாகனத்தில் அறுபத்து மூவருடன் வீதி உலா, இரவு வெள்ளி ரதத்தில் சுவாமியும், வெள்ளி இந்திர விமானத்தில் அம்மனும் பவனி.
    * சுவாமிமலை முருகப்பெருமான் பஞ்ச மூர்த்திகளுடன் வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
    * கீழ்நோக்கு நாள்.

    29-ந்தேதி (புதன்) :

    * முகூர்த்த நாள்.
    * சுமார்த்த ஏகாதசி.
    * திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தேரோட்டம்.
    * திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் திருவீதி உலா.
    * மேல்நோக்கு நாள்.

    30-ந்தேதி (வியாழன்) :

    * முகூர்த்த நாள்.
    * வைஷ்ணவ ஏகாதசி.
    * கைசிக ஏகாதசி.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.
    * திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் வெள்ளி விமானத்திலும், இரவு குதிரை வாகனத்திலும் திருவீதி உலா.
    * சுவாமிமலை முருகப்பெருமான் காமதேனு வாகனத்தில் பவனி.
    சமநோக்கு நாள்.

    1-ந்தேதி (வெள்ளி) :

    * பிரதோஷம்.
    * பரணி தீபம்.
    * திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் காலையில் கண்ணாடி விமானத்தில் பவனி, இரவு கயிலாச வாகனத்திலும், அம்மன் காமதேனு வாகனத்திலும் வீதி உலா.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயத்தில் பட்டாபிஷேகம், தங்கக் குதிரையில் இறைவன் புறப்பாடு.
    * ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.
    * கீழ்நோக்கு நாள்.



    2-ந்தேதி (சனி) :

    * திருக்கார்த்திகை தீபம்.
    * திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி, ஜோதி ரூபமாய் மகா தீப தரிசனம்.
    * குரங்கணி முத்துமாலையம்மன் ஆலயத்தில் நாராயணசுவாமி விசேஷ அலங்காரம்.
    * திருப்பரங்குன்றம், சுவாமிமலை தலங்களில் முருகப்பெருமான் ரத உற்சவம்.
    * கீழ்நோக்கு நாள்.

    3-ந்தேதி (ஞாயிறு) :

    * பவுர்ணமி பூஜை.
    * திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தெப்ப உற்சவம்.
    * நத்தம் மாரியம்மன் ஆலயத்தில் லட்ச தீபக் காட்சி.
    * கீழ்திருப்பதி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
    * கீழ்நோக்கு நாள்.

    4-ந்தேதி (திங்கள்) :

    * திருவண்ணாமலை அபிதகுசாம்பிகை சமேத அருணாசலேஸ்வரர் கயிலாச கிரி பிரதட்சணம், பராசக்தி அன்னை தெப்ப உற்சவம்.
    * திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் ஆகிய தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கொலு தர்பார் காட்சி.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
    * மேல்நோக்கு நாள். 
    21.11.2017 முதல் 27.11.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    21-ந்தேதி (செவ்வாய்) :

    ரம்பா திருதியை.
    சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    கீழ்நோக்கு நாள்.

    22-ந்தேதி (புதன்) :

    சதுர்த்தி விரதம்.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் ஆலயத்தில் ரத உற்சவம்.
    திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.
    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சுவாமி புறப்பாடு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
    தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்பாடு கண்டருளல்.
    கீழ்நோக்கு நாள்.

    23-ந்தேதி (வியாழன்) :

    முகூர்த்த நாள்.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் பஞ்சமி தீர்த்தம்.
    திருவண்ணாமலை அருணா சல நாயகர் உற்சவம் ஆரம்பம், காலை வெள்ளி விமானத்தில் சுவாமி வீதி உலா, இரவு அதிகார நந்தியில் சுவாமியும், அன்ன

    வாகனத்தில் அம்பா ளும் பவனி வருதல்.
    பழனி மலை முருகப்பெருமான் கோவிலில் உற்சவம் தொடக்கம்.
    மேல்நோக்கு நாள்.

    24-ந்தேதி (வெள்ளி) :

    முகூர்த்த நாள்.
    சஷ்டி விரதம்.
    திருவோண விரதம்.
    திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் கோவிலில் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
    திருவண்ணாமலை அருணாச லேஸ்வரர் ஆலயத்தில் காலை சூரிய பிரபையிலும், இரவு இந்திர விமானத்திலும் இறைவன் வீதி உலா.
    உப்பிலியப்பன் கோவில் சீனி வாசப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
    மேல்நோக்கு நாள்.



    25-ந்தேதி (சனி) :

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் காலை பூத வாகனத்தில் சுவாமி வீதி உலா, இரவு சுவாமி சிம்ம வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன
    வாகனத்திலும் பவனி.
    சுவாமிமலை முருகப்பெருமான் இடும்ப வாகனத்தில் பவனி வரும் காட்சி.
    பழனி முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.
    திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
    மேல்நோக்கு நாள்.

    26-ந்தேதி (ஞாயிறு) :

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
    பழனி பாலதண்டாயுதபாணி புறப்பாடு கண்டருளல்.
    திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அன்ன வாகனத்தில் பவனி வருதல்.
    திருவண்ணாமலை அருணாச லேஸ்வரர் கோவிலில் காலை சேஷ வாகனத்தில் இறைவன் வலம் வருதல், இரவு கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமியும்,
    காமதேனு வாகனத்தில் அம்மனும் பவனி வரும் காட்சி.
    மேல்நோக்கு நாள்.

    27-ந்தேதி (திங்கள்) :

    சுவாமிமலை முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் காலை விருட்ச வாகனத்திலும், இரவு பெரிய விருட்ச வாகனத்திலும் வீதி உலா.
    திருவெண்காடு, திருக்கழுக் குன்றம், திருவாடானை, திருக்கடவூர் ஆகிய தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
    திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் கொலு தர்பார் காட்சி.
    மேல்நோக்கு நாள்.
    14.11.2017 முதல் 20.11.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    14-ந்தேதி (செவ்வாய்) :

    * சர்வ ஏகாதசி.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்மனுக்கு அதிகாலை திருக்கல்யாணம்.
    * திருஇந்துளூர் பரிமள ரங்கராஜர் திருக்கல்யாண உற்சவம், இரவு வெள்ளி ரத காட்சி.
    * தென்காசி உலகம்மை ஊஞ்சல் சேவை.
    * குரங்கணி முத்துமாலை அம்மன் புறப்பாடு கண்டருளல்.
    * மேல்நோக்கு நாள்.

    15-ந்தேதி (புதன்) :

    * பிரதோஷம்.
    * மாயவரம் கவுரி மாயூரநாதர் ரத உற்சவம்.
    * திருச்சானூர் பத்மாவதி தாயார் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
    * திருஇந்துளூர் பரிமள ரங்கராஜர் வெண்ணெய் தாழி சேவை, இரவு குதிரை வாகனத்தில் திருவீதி உலா.
    * தூத்துக்குடி பாகம்பிரியாள், தென்காசி உலகம்மை ஆகிய தலங்களில் ஊஞ்சல் சேவை.
    * மதுரை இன்மையில் நன்மை தருவார் கோவிலில் நந்தீஸ்வரர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
    * சமநோக்கு நாள்.

    16-ந்தேதி (வியாழன்) :

    * மாத சிவராத்திரி.
    * கடை முழுக்கு.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் திருவனந்தல் ஆரம்பம்.
    * மாயவரம் கவுரிநாதர் கோவிலில் கடைமுக தீர்த்தம்.
    * திருஇந்துளூர் பரிமள ரங்கராஜர் கோவிலில் ரத உற்சவம்.
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
    * திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    * சமநோக்கு நாள்.

    17-ந்தேதி (வெள்ளி) :

    * மாயவரம் கவுரிநாதர் கோவிலில் முடவன் முழுக்கு.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு.
    * சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் நாள்.
    * தென்காசி, தூத்துக்குடி, சங்கரன்கோவில், வீரவ நல்லூர், திருநெல்வேலி ஆகிய தலங்களில் அம்மன் விருட்ச சேவை.
    * திருஇந்துளூர் பரிமள ரங்கராஜர் தீர்த்தவாரி.
    * வில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.
    * சமநோக்கு நாள்.



    18-ந்தேதி (சனி) :

    * அமாவாசை.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
    * திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் புறப்பாடு கண்டருளல்.
    * திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு காண்பித்தருளல்.
    * இன்று விஷ்ணு ஆலய வழிபாடு சிறப்பு தரும்.
    * கீழ்நோக்கு நாள்.

    19-ந்தேதி (ஞாயிறு) :

    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
    * இன்று கண்ணூறு கழித்தல் சிறப்பு தரும்.
    * சமநோக்கு நாள்.

    20-ந்தேதி (திங்கள்) :

    * திருப்பாப்புலியூர் ஆலயத்தில் சங்காபிஷேகம், வெள்ளி இந்திர விமானத்தில் சுவாமி வீதி உலா.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
    * திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் ஆகிய தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கொலு தர்பார் காட்சி.
    * சமநோக்கு நாள்.
    7-11-2017 முதல் 13-11-2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    7-ந் தேதி (செவ்வாய்)

    * சங்கடஹர சதுர்த்தி.
    * மாயவரம் கவுரிநாதர் கடைமுக உற்சவ ஆரம்பம்.
    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் இந்திர விமானம்.
    * தென்காசி உலகம்மை ஆலயத்தில் சுவாமி புறப்பாடு.
    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் புறப்பாடு, சிறப்பு அபிஷேகம்.
    * சமநோக்கு நாள்.

    8-ந் தேதி (புதன்)

    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் அன்ன வாகனத்தில் வீதி உலா.
    * திருஇந்துளூர் பரிமள ரங்கராஜர் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
    * உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு.
    * வீரவநல்லூர் மரகதாம்பிகை பவனி வரும் காட்சி.
    * மாயவரம் கவுரி மாயூரநாதர் புறப்பாடு கண்டருளல்.
    * மேல்நோக்கு நாள்.

    9-ந் தேதி (வியாழன்)

    * முகூர்த்த நாள்.
    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் தவழும் கண்ணன் அலங்காரத்துடன் இரவு காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.
    * திருஇந்துளூர் பரிமள ரங்கராஜர் சந்திர பிரபையில் பவனி வரும் காட்சி.
    * பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு கண்டருளல்.
    * உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் பஞ்சமூர்த்திகளுடன் பவனி.
    * சமநோக்கு நாள்.

    10-ந் தேதி (வெள்ளி)



    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் கோலாட்ட அலங்காரம், இரவு தங்க கிளி வாகனத்தில் பவனி.
    * கோவில்பட்டி செண்பக வள்ளியம்மன் திருவீதி உலா.
    * திருஇந்துளூர் பரிமள ரங்கராஜர் சேஷ வாகனத்தில் வலம் வரும் காட்சி.
    * மாயவரம் கவுரி மயூரநாதர் பவனி.
    * மேல்நோக்கு நாள்.

    11-ந் தேதி (சனி)

    * மாயவரம் கவுரிநாதர் ரிஷப வாகனத்தில் உலா.
    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் மாலை சிவபூஜை செய்தல், இரவு சப்தாவர்ண பல்லக்கில் வீதி உலா.
    * தூத்துக்குடி பாகம்பிரியாள் பவனி வரும் காட்சி.
    * திருஇந்துளூர் பரிமள ரங்க ராஜர் கருட வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
    * கீழ்நோக்கு நாள்.

    12-ந் தேதி (ஞாயிறு)

    * திருஇந்துளூர் பரிமள ரங்கராஜர் அனுமன் வாகனத்தில் புறப்பாடு.
    * கோவில்பட்டி செண்பக வள்ளியம்மன் பவனி வரும் காட்சி.
    * மாயவரம் கவுரி மாயூரநாதர் திருவீதி உலா.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
    * கீழ்நோக்கு நாள்.

    13-ந் தேதி (திங்கள்)

    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் அதிகாலை தபசுக் காட்சி.
    * தென்காசி, தூத்துக்குடி, சங்கரன்கோவில், கோவில்பட்டி, வீரவநல்லூர் ஆகிய தலங்களில் அம்மன் திருக்கல்யாணம்.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.
    * திருஇந்துளூர் பரிமள ரங்கராஜர் யானை வாகனத்தில் பவனி.
    * கீழ்நோக்கு நாள்.
    31.10.2017 முதல் 6.11.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    31-ந் தேதி (செவ்வாய்) :

    * சர்வ ஏகாதசி.
    * மதுரை கள்ளழகர் சயனக் கோலத்தில் காட்சியருளல்.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்க மன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.
    * திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை.
    * திருமோகூர் காளமேகப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
    * கீழ்நோக்கு நாள்.

    1-ந் தேதி (புதன்) :

    * முகூர்த்த நாள்.
    * பிரதோஷம்.
    * வள்ளியூர் சுப்பிரமணியர் கோவிலில் வள்ளி திருக்கல்யாணம்.
    * மதுரை கள்ளழகர் மலை மேல் தொட்டிக்கு எழுந்தருளி, எண்ணெய் காப்பு உற்சவம் கண்டருளல்.
    * திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
    * திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள், ஊஞ்சல் உற்சவ சேவை.
    * மேல்நோக்கு நாள்.

    2-ந்தேதி (வியாழன்) :

    * முகூர்த்த நாள்.
    * திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    * கோவில்பட்டி செண்பக வள்ளியம்மன் கோவில் உற் சவம் ஆரம்பம்.
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
    * திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை.
    * சமநோக்கு நாள்.



    3-ந்தேதி (வெள்ளி) :

    * பவுர்ணமி பூஜை.
    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் திருக்கல்யாண உற்சவம் ஆரம்பம்.
    * மதுரை சுந்தரேஸ்வரர் கோவில் அன்னாபிஷேகம்.
    * தென்காசி உலகம்மை, வீரவ நல்லூர் மரகதாம்பிகை, தூத்துக்குடி பாகம்பிரியாள், சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆகிய தலங்களில் உற்சவம் தொடக்கம்.
    * கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் பவனி வருதல்.
    * சமநோக்கு நாள்.

    4-ந்தேதி (சனி) :

    * கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் கோவிலில் விருட்ச சேவை.
    * திருப்போரூர் முருகப்பெருமான் அபிஷேகம்.
    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் காலை வெள்ளி சப்பரத்திலும், இரவு கமல வாகனத்திலும் திருவீதி உலா.
    * தென்காசி உலகம்மை ஆலயத்தில் அம்மன் வீதி உலா.
    * உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி புறப்பாடு.
    * கீழ்நோக்கு நாள்.

    5-ந்தேதி (ஞாயிறு) :

    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் காலை கமல வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் பவனி.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.
    * தூத்துக்குடி பாகம்பிரியாள் திருவீதி உலா.
    * இன்று சூரிய வழிபாடு நன்மை தரும்.
    * கீழ்நோக்கு நாள்.

    6-ந்தேதி (திங்கள்) :

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா.
    * கீழ்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு கண்டருளல்.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    * மேல்நோக்கு நாள்.
    24.10.2017 முதல் 30.10.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    24-ந்தேதி (செவ்வாய்) :

    * சிக்கல் சிங்காரவேலவர் ஆலயத்தில் ரத உற்சவம், இரவு உமா தேவியாரிடம் சக்திவேல் வாங்குதல்.
    * குமாரவயலூர் முருகப்பெருமான் சிங்கமுக சூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல், இரவு வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா.
    * உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு.
    * சமநோக்கு நாள்.

    25-ந்தேதி (புதன்) :

    * கந்த சஷ்டி.
    * திருச்செந்தூர் சுப்பிர மணியர் கோவில் உள்பட அனைத்து முருகப்பெருமான் ஆலயங்களிலும் சூரசம்ஹாரம்.
    * சிக்கல் சிங்கார வேலவர் கோவிலில், அசுரர்களை அழித்து மயில் வாகனம் மற்றும் சேவல் கொடியுடன் முருகப் பெருமான் இந்திர விமானத்தில் பவனி.
    * குமாரவயலூர் முருகப்பெருமான் சக்திவேல் வாங்குதல்.
    * கீழ்நோக்கு நாள்.

    26-ந்தேதி (வியாழன்) :

    * சகல முருகப்பெருமான் கோவில்களிலும், தெய்வானை திருக்கல்யாண உற்சவம்.
    * சிக்கல் சிங்காரவேலவர் சூர்ணோற்சவம், மாலை தங்கக் குதிரையில் இரவு தேவ சேனாவை மணந்து வெள்ளி ரதத்தில் பவனி.
    * திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    * கீழ்நோக்கு நாள்.



    27-ந் தேதி (வெள்ளி) :

    * முகூர்த்த நாள்.
    * சிக்கல் சிங்காரவேலவர் வள்ளி தேவியை மணந்து இந்திர விமானத்தில் பவனி வரும் காட்சி.
    * வள்ளியூர் முருகப்பெருமான் ஏக சிம்மாசனத்தில் பவனி.
    * திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு கண்டருளல்.
    * மேல்நோக்கு நாள்.

    28-ந் தேதி (சனி) :

    * திருவோண விரதம்.
    * திருக்கோட்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை.
    * சிக்கல் சிங்கார வேலவர் விடையாற்று உற்சவம்.
    * திருவனந்தபுரம், திருவட்டாறு ஆகிய தலங் களில் சிவபெருமான் ஆராட்டு விழா.
    * மேல்நோக்கு நாள்.

    29-ந் தேதி (ஞாயிறு) :

    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
    * திருக்கோட்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை.
    * உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு.
    * மேல்நோக்கு நாள்.

    30-ந் தேதி (திங்கள்) :

    * முகூர்த்த நாள்.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    * மேல்நோக்கு நாள்.
    (17.10.2017 முதல் 23.10.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    17-ந் தேதி (செவ்வாய்) :

    பிரதோஷம்.
    சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    திருக்குற்றாலம் சிவ பெருமான் திருவீதி உலா.
    குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு கண்டருளல்.
    கீழ்நோக்கு நாள்.

    18-ந் தேதி (புதன்) :

    தீபாவளி பண்டிகை.
    மாத சிவராத்திரி.
    திருச்செந்தூர் சுப்பிர மணியர் தீர்த்த அபிஷேகம்.
    வள்ளியூர் முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம், வெள்ளி மயில் வாகனத்தில் வீதி உலா.
    மதுரை மீனாட்சி அம்மன் வைர கிரீடம் சாத்தி அருளல்.
    மேல்நோக்கு நாள்.

    19-ந் தேதி (வியாழன்) :

    கேதார கவுரி விரதம்.
    அமாவாசை.
    திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் உற்சவம் ஆரம்பம்.
    வள்ளியூர் முருகப்பெருமான் காலையில் கலைமான் கிடா வாகனத்திலும், இரவு ஏக சிம்மாசனத்திலும் பவனி வரும் காட்சி.
    உத்திரமாயூரம் தட்சிணாமூர்த்தி கயிலாச பர்வத வாகனத்திலும், கங்கை அம்மன் மகர வாகனத்திலும் காவேரிக்கு எழுந்தருளல்.
    சமநோக்கு நாள்.

    20-ந் தேதி (வெள்ளி) :

    சகல முருகன் கோவில் களிலும் கந்தசஷ்டி உற்சவம் தொடக்கம்.
    சிக்கல் சிங்கார வேலவர் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
    குமாரவயலூர் முருகப்பெருமான் கோவில் தெய்வானை சமேத முருகப்பெருமான் பச்சை சாத்தி மயில் வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
    வள்ளியூர் முருகப்பெருமான் பூத வாகனத்திலும், அம்மன் கிளி வாகனத்திலும் புறப்பாடு.
    சமநோக்கு நாள்.



    21-ந் தேதி (சனி) :

    சிக்கல் சிங்கார வேலவர் ஆலயத்தில் சுவாமிக்கு நாகாபரண காட்சி, இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் திருவீதி உலா.
    வள்ளியூர் முருகப்பெருமான் காலை ஏக சிம்மாசனத்திலும், இரவு வெள்ளி மயில் வாகனத்திலும் புறப்பாடு.
    குச்சனூர் சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சிறப்பு ஆராதனை.
    சமநோக்கு நாள்.

    22-ந் தேதி (ஞாயிறு) :

    வள்ளியூர் முருகப்பெருமான் காலை கேடய சப்பரத்திலும், இரவு பூங்கோவில் சப்பரத்திலும் பவனி.
    சிக்கல் சிங்கார வேலவர் காலை மோகன அவதாரத்தில் காட்சி அருளல், இரவு தங்க மயில் வாகனத்தில் வீதி உலா.
    கீழ்நோக்கு நாள்.

    23-ந் தேதி (திங்கள்) :

    சதுர்த்தி விரதம்.
    நெல்லை கெட்வேல் ஆஞ்சநேயர் கோவிலில் வருசாபிஷேகம்.
    குமாரவயலூர் முருகப்பெருமான் கஜமுக சூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல்.
    சிக்கல் சிங்கார வேலவர் வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சி அருளல்.
    வள்ளியூர் முருகப்பெருமான் ஏக சிம்மாசனத்தில் புறப்பாடு கண்டருளல்.
    உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு.
    சமநோக்கு நாள்.
    10.10.2017 முதல் 16.10.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    10-ந்தேதி (செவ்வாய்) :

    * மன்னார்குடி ராஜ கோபால சுவாமி புறப்பாடு.
    * சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    * பாபநாசம் சிவபெருமான் புறப்பாடு கண்டருளல்.
    * மேல்நோக்கு நாள்.

    11-ந்தேதி (புதன்) :

    * முகூர்த்த நாள்.
    * பாபநாசம் சிவபெருமான் பவனி வரும் காட்சி.
    * திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபி ஷேகம்.
    * சகல முருகன் ஆலயங்களிலும், முருகப்பெருமானை வழிபடுதல் நன்று.
    * சமநோக்கு நாள்.

    12-ந்தேதி (வியாழன்) :

    * குற்றாலம் சிவபெருமான் திருவீதி உலா புறப்பாடு.
    * திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    * சுவாமிமலை முருகப் பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    * மேல்நோக்கு நாள்.



    13-ந்தேதி (வெள்ளி) :

    * பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு.
    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் பவனி.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
    * சமநோக்கு நாள்.

    14-ந்தேதி (சனி) :

    * ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலையில் சீனிவாச பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா.
    * குற்றாலம் சிவபெருமான் புறப்பாடு கண்டருளல்.
    * திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
    * இன்று கருட தரிசனம் நன்மை தரும்.
    * இன்று விஷ்ணு ஆலய வழிபாடு செய்தால் நலன்கள் வந்து சேரும்.
    * மேல்நோக்கு நாள்.

    15-ந்தேதி (ஞாயிறு) :

    * சர்வ ஏகாதசி.
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
    * பாபநாசம் சிவபெருமான் புறப்பாடு.
    * இன்று சூரிய வழிபாடு செய்வது சிறப்பு தரும்.
    * கீழ்நோக்கு நாள்.

    16-ந்தேதி (திங்கள்) :

    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
    * திருவம்பல் சிவபெருமான் பவனி.
    * கீழ்நோக்கு நாள்.
    3.10.2017 முதல் 9.10.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    3-ந்தேதி (செவ்வாய்) :

    * பிரதோஷம்.
    * சகல சிவன் கோவில்களிலும் இன்று மாலை நந்தீஸ்வர பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.
    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் லட்சார்ச்சனை வைபவ காட்சி.
    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    * மேல்நோக்கு நாள்.

    4-ந்தேதி (புதன்) :

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.
    * திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.
    * கீழ்நோக்கு நாள்.

    5-ந்தேதி (வியாழன்) :

    * பவுர்ணமி விரதம்.
    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் புஷ்பாஞ்சலி.
    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    * திருவண்ணாமலை அருணாச்சல நாயகர் கோவிலில் கிரிவல பிரதட்சணம்.
    * திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

    6-ந்தேதி (வெள்ளி) :

    * தேவகோட்டை ரெங்கநாதர் கோவிலில் சுவாமி புறப்பாடு.
    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் பவனி.
    * சங்கரன்கோவில் கோமதிஅம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு.
    * திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகனத்தில் வீதி உலா.
    * சமநோக்கு நாள்.



    7-ந்தேதி (சனி) :

    * ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலையில் சீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் பவனி.
    * திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சனீஸ்வரருக்கு சிறப்பு ஆராதனை.
    * சமநோக்கு நாள்.

    8-ந்தேதி (ஞாயிறு) :


    * சங்கடஹர சதுர்த்தி.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
    * திருப்போரூர் முருகப்பெருமான் கோவிலில் அபிஷேகம்.
    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சுவாமி புறப்பாடு, சிறப்பு அபிஷேக ஆராதனை.
    * கீழ்நோக்கு நாள்.

    9-ந்தேதி (திங்கள்) :

    * கார்த்திகை விரதம்.
    * திருக்குற்றாலம், பாபநாசம், திருவம்பல் ஆகிய தலங் களில் சிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.
    * திருச்செந்தூர் முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
    * சங்கரன்கோவில் கோமதி அம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    * கீழ்நோக்கு நாள்.
    26.9.2017 முதல் 2.10.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    26-ந்தேதி (செவ்வாய்) :

    * சஷ்டி விரதம்.
    * திருப்பதி திருவேங்கடமுடையான் காலை கற்பக விருட்ச வாகனத்திலும், இரவு சர்வ பூபாள வாகனத்திலும் பவனி.
    * மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காலை கஜேந்திர மோட்சம், மாலை கருட வாகனத்தில் திருவீதி உலா.
    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
    * சமநோக்கு நாள்.

    27-ந்தேதி (புதன்) :

    * திருப்பதி வேங்கடேசப் பெருமாள் இரவு மகர கண்டியில் லட்சுமிகார ஆபரணங்களுடன் கருடோற்சவம்.
    * மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காளிங்க நர்த்தனம், மாலை சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா.
    * மதுரை மீனாட்சி நவராத்திரி கொலு மண்டபத்தில் அலங்கார காட்சி.
    * கன்னியாகுமரி பகவதி அம்மன் பவனி வருதல்.
    * சமநோக்கு நாள்.

    28-ந்தேதி (வியாழன்) :

    * துர்காஷ்டமி.
    * திருப்பதி திருவேங்கடமுடையான் காலை அனுமன் வாகனத்தில் வசந்த உற்சவம், இரவு யானை வாகனத்தில் திருவீதி உலா.
    * மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காலை ராஜாங்க அலங்காரம், மாலை மோகன அவதார காட்சி.
    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
    * கீழ்நோக்கு நாள்.

    29-ந்தேதி (வெள்ளி) :

    * சரஸ்வதி பூஜை.
    * திருப்பதி ஏழுமலையப்பன் காலை சூரிய பிரபையிலும், இரவு புஷ்ப விமானத்திலும் பவனி.
    * கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாண உற்சவம்.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் கண்ணாடி சப்பரத்தில் பவனி.
    * தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அம்மன் வீதி உலா.
    * கீழ்நோக்கு நாள்.



    30-ந்தேதி (சனி) :

    * விஜயதசமி.
    * குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா பெருவிழா.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் குதிரை வாகனத்தில் பவனி.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலையில் சீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் பவனி.
    * கன்னியாகுமரி பகவதி அம்மன் பாரி வேட்டைக்கு எழுந்தருளிய காட்சி.
    * மேல்நோக்கு நாள்.

    1-ந்தேதி (ஞாயிறு) :

    * முகரம் பண்டிகை.
    * முகூர்த்த நாள்.
    * சர்வ ஏகாதசி.
    * சகல விஷ்ணு ஆலயங்களிலும் பெருமாள் கருட சேவை.
    * மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், உப்பிலியப்பன் சீனிவாசப் பெருமாள், கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் ஆகிய கோவில்களில் ரத உற்சவம்.
    * குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் ஆலயத்தில் பாலாபிஷேகம்.
    * மேல்நோக்கு நாள்.

    2-ந்தேதி (திங்கள்) :

    * காந்தி ஜெயந்தி.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    * மேல்நோக்கு நாள்.
    ×