search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் (24.10.2017 முதல் 30.10.2017 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள் (24.10.2017 முதல் 30.10.2017 வரை)

    24.10.2017 முதல் 30.10.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    24-ந்தேதி (செவ்வாய்) :

    * சிக்கல் சிங்காரவேலவர் ஆலயத்தில் ரத உற்சவம், இரவு உமா தேவியாரிடம் சக்திவேல் வாங்குதல்.
    * குமாரவயலூர் முருகப்பெருமான் சிங்கமுக சூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல், இரவு வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா.
    * உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு.
    * சமநோக்கு நாள்.

    25-ந்தேதி (புதன்) :

    * கந்த சஷ்டி.
    * திருச்செந்தூர் சுப்பிர மணியர் கோவில் உள்பட அனைத்து முருகப்பெருமான் ஆலயங்களிலும் சூரசம்ஹாரம்.
    * சிக்கல் சிங்கார வேலவர் கோவிலில், அசுரர்களை அழித்து மயில் வாகனம் மற்றும் சேவல் கொடியுடன் முருகப் பெருமான் இந்திர விமானத்தில் பவனி.
    * குமாரவயலூர் முருகப்பெருமான் சக்திவேல் வாங்குதல்.
    * கீழ்நோக்கு நாள்.

    26-ந்தேதி (வியாழன்) :

    * சகல முருகப்பெருமான் கோவில்களிலும், தெய்வானை திருக்கல்யாண உற்சவம்.
    * சிக்கல் சிங்காரவேலவர் சூர்ணோற்சவம், மாலை தங்கக் குதிரையில் இரவு தேவ சேனாவை மணந்து வெள்ளி ரதத்தில் பவனி.
    * திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    * கீழ்நோக்கு நாள்.



    27-ந் தேதி (வெள்ளி) :

    * முகூர்த்த நாள்.
    * சிக்கல் சிங்காரவேலவர் வள்ளி தேவியை மணந்து இந்திர விமானத்தில் பவனி வரும் காட்சி.
    * வள்ளியூர் முருகப்பெருமான் ஏக சிம்மாசனத்தில் பவனி.
    * திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு கண்டருளல்.
    * மேல்நோக்கு நாள்.

    28-ந் தேதி (சனி) :

    * திருவோண விரதம்.
    * திருக்கோட்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை.
    * சிக்கல் சிங்கார வேலவர் விடையாற்று உற்சவம்.
    * திருவனந்தபுரம், திருவட்டாறு ஆகிய தலங் களில் சிவபெருமான் ஆராட்டு விழா.
    * மேல்நோக்கு நாள்.

    29-ந் தேதி (ஞாயிறு) :

    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
    * திருக்கோட்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை.
    * உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு.
    * மேல்நோக்கு நாள்.

    30-ந் தேதி (திங்கள்) :

    * முகூர்த்த நாள்.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    * மேல்நோக்கு நாள்.
    Next Story
    ×