search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஏகாதசியன்று ஏன் விரதம் இருக்க வேண்டும்?
    X

    ஏகாதசியன்று ஏன் விரதம் இருக்க வேண்டும்?

    நம் முன்னோர்கள் ஏகாதசி தினத்தன்று விரதம் இருக்கும் அருமையான முறையை கொண்டு வந்து அதை ஆன்மீகத்துடன் ஐக்கியப்படுத்தி உள்ளனர்.
    அமாவாசை அல்லது பவுர்ணமிக்கு பிறகு சந்திரன் பூமியை சுற்றி வரும்போது ஒரு நாளைக்கு 12 டிகிரி என்ற அளவில் விலகிச் சென்று ஏகாதசியன்று சுமார் 120 டிகிரிலியிருந்து 132 டிகிரியில் இருக்கும். அப்போது பூமி, சூரியன் சந்திரன் ஆகியவை ஒரு முக்கோண நிலையை அடைகிறது. அப்போது மற்ற நாட்களை விட அதிக அளவு பூமியின் மீதும், பூமியில் உள்ள தண்ணீர் மீதும், சந்திரனின் ஈர்ப்பு சக்தியால் பாதிப்பு உண்டாகிறது.

    மனித உடலிலும் 70 சதவீதம் நீர் நிறைந்திருப்பதால் ஏகாதசி தினத்தன்று மனித உடலும் சந்திரனின் ஆகர்ஷண சக்தியால் பாதிக்கப்படும். அதன் காரணமாக நமது உடம்பில் உள்ள ஜீரண உறுப்புகள் சரிவர வேலை செய்யாது. அத்தகைய சூழ்நிலையில் நாம் உணவருந்தினால் சரியாக ஜீரணமாவது கடினம்.

    சந்திரனின் ஆகர்ஷண சக்தியால் கடல் நீர் பொங்கி எழுந்து அலைக்கழிக்கப்படுவதைப் போல மனித உடலிலும் உள்ள தண்ணீரிலும் பாதிப்பு உண்டாகி, ஜீரண சக்தியை இழந்து விடுகிறது. மாதம் இருமுறை வரும் ஏகாதசி நாட்களில் தொடர்ந்து உணவை உட்கொண்டு வருபவர்களுக்கு அஜீரணம் உண்டாகலாம்.

    அஜீரணமானவுடன் மருந்து உட்கொள்வதும், சாப்பிட்ட உணவை பலவந்தமாக ஜீரணிக்க முயற்சி செய்வதும் இயற்கைக்கு விரோதமான செயலாகும். இதன் விளைவாகத்தான் சிறிய சிறிய நோய்கள் உண்டாகிறது. அந்த நோய்கள் பெரிய நோய்களாக மாறி விடக்கூடாது என தடுக்கவே நம் முன்னோர்கள் ஏகாதசி தினத்தன்று விரதம் இருக்கும் அருமையான முறையை கொண்டு வந்து அதை ஆன்மீகத்துடன் ஐக்கியப்படுத்தி உள்ளனர்.
    Next Story
    ×