search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்
    X

    ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

    ரமலான் மாதத்தின் ஜகாத் எனும் ஏழை வரியை முதலில் உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் வழங்கி நமது சொத்தினை பாதுகாத்து கொள்ளும் கேடயமாக ஆக்கி கொள்வோமாக.
    உலகத்தை படைத்து, அனைத்து உயிரினங்களையும் படைத்து அவைகளை பரிபாலிக்கும் அளவற்ற அருளாளனும் அன்புடையோனுமாகிய, இறைவனுக்கே எல்லா புகழுமாகிய அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் அனைத்து சமுதாய மக்களுக்கும் ஈத் (ரம்ஜான்) பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

    சமத்துவம், சகோதரத்துவம், சமாதானம் கொண்ட இஸ்லாம் மதத்தில் ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பை நோற்று பசியின் தன்மையை உணர்ந்து பசியால் வாடும் ஏழை, எளிய மக்களின் பசியினை போக்க நம்மை ஆக்கி வைப்பார்களாக.

    ரமலான் மாதத்தின் ஜகாத் எனும் ஏழை வரியை முதலில் உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் வழங்கி நமது சொத்தினை பாதுகாத்து கொள்ளும் கேடயமாக ஆக்கி கொள்வோமாக.

    ரமலான் மாதத்தில் சதக்கா என்னும் தர்மத்தினை உரியவருக்கு வழங்கி நம்மை நோய் நொடியிலிருந்து காப்பாற்றி பெருவாழ்வு வாழ இறைவன் அருள் புரிவானாக. இஸ்லாமிய மக்கள் மீது கடமையாக்கப்பட்ட பித்ரா என்னும் தர்மத்தினை பணமாகவோ, பொருளாகவோ ஈத் பெருநாள் தொழுகைக்கு முன்னர் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கி இந்த ஈத் பெருநாளை சிறப்புமிக்க பெருநாளாக கொண்டாட அருள்புரிவானாக.

    இந்த புனித ரமலான் அடுத்த வருடம் வரும்போது மேற்கண்ட பாக்கியங்கள் செய்ய நம் அனைவருக்கும் அருள்புரிவானாக.

    அனைத்து இன மக்களும் சகோதரர்களாகவும் ஒற்றுமையுடன் வாழவும், அனைவரும் தொழில்களில் முன்னேற்றம் அடையவும், நோயின்றி நல் ஆயுளுடன் வாழவும் அருள் புரிவானாக.

    மேற்கண்ட துவாவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துவா பரகத்தால் கபூல் செய்யும்படி இறைவனை வேண்டிக் கொள்வதுடன் எங்களுக்காகவும், எங்களின் குடும்பங்களுக்காகவும் இறைவனிடம் துவா செய்யுங்கள். ஆமீன், ஆமீன் யாரப்பில் ஆலமீன்.

    கே.யூசுப் பாஷா சேர்மன் கே.எம்.பி. குரூப்ஸ்
    Next Story
    ×