search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சனிபகவானின் தாக்கத்திலிருந்து நம்மை காக்கும் பரிகாரம்
    X
    சனிபகவானின் தாக்கத்திலிருந்து நம்மை காக்கும் பரிகாரம்

    சனிபகவானின் தாக்கத்திலிருந்து நம்மை காக்கும் பரிகாரம்

    சனிக்கிழமைகளில் காகத்திற்கு எள் சாதம் வைப்பதோடு விட்டுவிடாமல், தினந்தோறும் நீங்கள் சமைக்கும் சாதத்தை சாப்பிடுவதற்கு முன்பு, எச்சில் படாமல் அந்த காகத்திற்கு வைப்பது பொதுவாக அனைத்து விதமான தோஷத்திற்கும் நல்லது.
    பொதுவாக ஏழரைச் சனியால் ஏற்படும் சனிபகவானின் தாக்கத்திலிருந்து நம்மால் முழுமையாக தப்பித்துவிட முடியாது. ஆனால் அவரை மனதார நினைத்து வழிபடுவதன் மூலம், பாதிப்பை குறைத்துக்கொள்ள முடியும். இதற்கு முதலில் வாரம்தோறும் சனிக்கிழமையில் நவகிரக கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி நவக்கிரகத்தை ஒன்பது முறை பிரதக்ஷிணம் செய்து அந்த சனி பகவானை மனதார நினைத்து வேண்டிக் கொள்ள வேண்டும். ‘நீ தரும் துன்பங்கள் அனைத்தும் என் வாழ்க்கையின் நலனுக்காகத்தான் என்று மனதார ஏற்றுக் கொள்கின்றேன்’. என்று கூறி வழிபடுவது நல்லது.

    ஏழரைச் சனியின் பாதிப்பில் உள்ளவர்கள் முதலில் சனிபகவானை திட்டுவதை நிறுத்த வேண்டும். சனிபகவான் நமக்கு செய்யும் கெடுதல்கள் ஏதோ ஒரு வகை நன்மைக்காகத்தான் என்பதை முதலில் உணர வேண்டும். இதுவே முதல் பரிகாரம். அடுத்ததாக நம் வீட்டில் சனிக்கிழமைதோறும் வெள்ளை சாதத்துடன் எள் கலந்து காலை வேளையில் அந்த காகத்திற்கு வைக்க வேண்டும்.

    வீட்டு பூஜை அறையில் ஒரு விளக்கினை ஏற்றி வைத்து சனி பகவானை மனதார வேண்டி எள் சாதத்தை கொண்டு காகத்திற்கு வைப்பது மிகவும் நல்லது. இப்படி வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தவறாமல் செய்து வர வேண்டும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் கஷ்டங்கள் குறைவதை உங்களாலேயே உணர முடியும்.

    சனியின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள மற்றொரு வழியும் உள்ளது. எவரொருவர் பொய் சொல்லாமல், நேர்மையாக வாழ்கிறாரோ அவர்கள் சனிபகவானின் தாக்கத்திலிருந்து நிச்சயமாக தப்பித்துக் கொள்ளலாம் என்பது சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள உண்மை. ஏனென்றால் பிரச்சினைகள் ஏற்படும்போது பிரச்சனைக்காக பயந்தவர்கள் பொய் கூறினாலும் அல்லது பிரச்சினையில் இருந்து தப்பித்துக் கொள்ள குறுக்கு வழியில் சென்றாலும் தான் பாதிப்புக்கள் அதிகமாகும். நீங்கள் செய்த தவறை ஒத்துக் கொண்டும், பிரச்சினை ஏற்பட்டாலும் நேர்வழியில் தான் செல்வேன் என்று செயல்பட்டு பாருங்கள், உங்களுக்கு பாதிப்பானது தானாகவே குறைந்துவிடும். சனிக்கிழமைகளில் எள் சாதம் வைப்பதோடு விட்டுவிடாமல், தினந்தோறும் நீங்கள் சமைக்கும் சாதத்தை சாப்பிடுவதற்கு முன்பு, எச்சில் படாமல் அந்த காகத்திற்கு வைப்பது பொதுவாக அனைத்து விதமான தோஷத்திற்கும் நல்லது.
    Next Story
    ×