search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விருச்சிக ராசி
    X
    விருச்சிக ராசி

    விருச்சிக ராசிக்காரர்களின் திருமண யோகமும், வழிபட வேண்டிய கடவுளும்

    குரு பகவான் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு மிக சிறப்பான இடத்துக்கு வந்திருக்கிறார். இதன் காரணமாக பொருளாதாரம் மேம்படும். குடும்பத்தில் மங்கலகரமான சூழல் ஏற்படும்.
    குரு பகவான் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு மிக சிறப்பான இடத்துக்கு வந்திருக்கிறார். கடந்த ஒரு வருடமாக ஜென்ம ராசியில் இருந்த குரு தற்போது இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளார். இதன் காரணமாக பொருளாதாரம் மேம்படும். புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றியை தேடி தரும். இவை சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கு உதவியாக அமையும். குடும்பத்தில் மங்கலகரமான சூழல் ஏற்படும்.

    இரண்டாம் இடம் என்பது தன ஸ்தாபனம் ஆகும். இந்த தன ஸ்தாபனத்தில் குரு சஞ்சரிக்கும்போது அதிகப்படியான பலன்களை வாரி வழங்குவார். என்றாலும் பொது இடங்களில் விருச்சிகம் ராசிக்காரர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடாமல் அமைதி காப்பது நல்லது. குறிப்பாக சுப நிகழ்ச்சிகள் பற்றி பேசும்போது கவனமாக பேச வேண்டும்.

    விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் 5, 7, 9&ம் இடத்து பார்வைகள் சிறப்பாக அமைந்துள்ளன. இவை ஒருங்கி ணைவதால் திட்டமிட்டபடி சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். இதற்கு அனு கூலமான சூழ் நிலையை உருவாக்க சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாத்தி வழிபடலாம். குரு வழிபாடும் சிறப்பான பலன்களை தரும். விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் இறுதிக்கட்டம் நடப்பதால் சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை அவசியம் வழிபட வேண்டும். ஆஞ்சநேயரை நீங்கள் எந்த அளவுக்கு வழிபடுகிறீர்களோ அந்த அளவுக்கு சனி தொல்லை நீங்கி குரு பகவானின் அருள்பார்வைக்கு நன்மை கிடைக்கும்.

    ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டகசனி, அர்த்தாஷ்டம சனியால் அவதிப்படுபவர்கள் அனுமனை சரணடைய சனிதோஷம் நீங்கும். எவர் ஒருவர் ஸ்ரீராமரையோ அல்லது ஆஞ்சநேயரையோ மனமுருகி வேண்டினாலும் அவர்களைக் காக்கும் பெரும் பொறுப்பை அனுமன் ஏற்பார். வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமன் விரதம் இருப்பது சிறப்பானது. எல்லா நாட்களையும் விட அனுமன் ஜெயந்தியில் அவரை வேண்டி விரதம் இருப்பது சகல சவுபாக் கியங்களையும் பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை. அவருக்குப் பிடித்தமான உணவுகளை படைத்து வழிபடலாம்.

    மலையில் அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். வசதி இருந்தால் வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு சாற்றி வணங்கலாம். அனுமன் உணவுப்பிரியர். நன்றாக சாப்பிடுவார் அவருக்கு பொரி, அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர், பழங்கள், வாழைப்பழம் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம்.

    ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றினால் நம் துன்பங்கள் சூரியனைக் கண்டு உரு கும் வெண்ணை போல உருகி விடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். துளசி மாலை சாற்றினால் பாவங்களில் இருந்து நிவர்த்தியும், வடை மாலை சாற்றினால் வழக்குகளில் வெற்றியும் கிட்டும் என்பது நம்பிக்கை. அவருக்கு வெற்றிலை மாலை சாற்றினால் தடை நீங்கி கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக் கும். அவருக்கு ஸ்ரீராம ஜெயம் எழுதி மாலை சூட்டிப் போட்டால் அனைத்துச் செயல்களும் வெற்றியடையும் தோஷம் நீங்கும்.

    முடிந்தவர்கள் சனிக்கிழமை தோறும் விர தம் இருக்கலாம். ஒரு தடவை திருநள்ளாறு தலத்துக்கு சென்று சனீஸ்வர பகவானை வழிபட்டு வரலாம். முடியாதவர்கள் தினமும் மதியம் உணவு அருந்தும் முன்பு காகத் துக்கு உணவு வைத்து விட்டு சாப்பிட்டால் நல்லது. அடுத்த ஆண்டு குரு பகவான் பூராடம் நட்சத்திரத்தில் வக்கிர கதி அடைவதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும். அந்த காலக்கட்டத்தில் சுப காரிய பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டால் வெற்றி உண்டாகும்.

    முருகப்பெருமானை வழிபடுவதும் நன்மை தரும். குறிப்பாக கிருத்திகை நட்சத்திர நாட்களில் முருகனை வழிபட வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து பட்டாடை அணிவித்து ஆராதனை செய்து வந்தால் மனதில் உற்சாகம் பிறக்கும். பணம் வரவும் அதிகரிக்கும். இவை இரண்டும் சுப நிகழ்ச்சிகளை எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடத்தி முடிக்க கை கொடுக்கும்.

    இரண்டில் குரு வந்தால் இனி எல்லாமே வெற்றிதான் என்று சொல்வார்கள். எனவே உங்கள் வாரிசுகளின் திருமண பேச்சுவார்த்தைகளை துணிச்சலுடன் மேற் கொள்ளுங்கள். திருவண்ணாமலைக்கு பவுர்ணமி கிரிவலம் சென்று வருவதும் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த சீசனில் பயன் உள்ளதாக இருக்கும். கிரிவலம் செல்ல இயலாதவர்கள் பிரதோஷ காலத்தில் நந்திக்கு அபிஷேகம் செய்வதற்கு பொருட் கள் வாங்கி கொடுத்து வழிபாடுகள் செய்யலாம். இதனால் திருமண யோகம் உள்பட அனைத்து யோகங்களும் தேடி வரும்.

    பெண்களுக்கு சுப காரிய பேச்சு வார்த்தைகள் படிப்படியாக முன்னேற்றம் தந்து வெற்றியை கொடுக்கும். இரண்டில் கேது, எட்டில் ராகு இருப்ப தால் சர்ப்பதோஷ நிவர்த்தி பரிகாரம் அவசியம் செய்ய வேண்டும். எனவே ராது&கேது தலங்களில் சிறப்பு வழிபாடு செய்யுங்கள். அப்படி ராகு-கேதுவுக்கு பூஜை செய்யும்போது கூடவே குரு பகவானுக்கும் சேர்த்து பூஜை செய்ய வேண்டும். இதுதான் திருமண யோகத்தை முந்திக் கொண்டு வந்து தரும்.

    விருச்சிகம் ராசியில் விசாகம் (4&ம் பதம்), அனுஷம், கேட்டை ஆகிய 3 நட்சத்திரங்கள் உள்ளன. விசாகம் நட்சத்திரக் காரர்கள் ஆலங்குடி குருபகவானை வழிபட வேண்டும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர் கள் திருப்பைஞ்சலியில் உள்ள ஞானேஸ்வரர்& விசாலாட்சி அம்மனை வழிபட வேண்டும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருநள்ளாறு சனி பகவானை வழிபட்டால் உங்களுக்கு கிடைக்கும் அபரிதமான மங்கலயோகங்களை யாராலும் தடுக்க முடியாது.
    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஒரு நாள் தங்கி இருந்து சுவாமியை வழிபடுவது நல்லது.

    முதலில் திருநள் ளாறு நளதீர்த்தம் சென்று அந்த தீர்த்தக்குளத்தை மானசீகமாக வணங்கி குளத்தின் நடு வில் இருக்கும் நளச்சக்கரவர்த்தி-தமயந்தி மற்றும் குழந்தைகளின் உருவச்சிலைகளை வணங்கி வழிபடுதல் வேண்டும். பிறகு நல்லெண் ணையை தலையில் தேய்த்துக்கொண்டு வடக்கு முகமாகவோ அல்லது கிழக்கு முக மாகவோ ஒன்பது முறை குளித்து தலைமுழுக்காட வேண்டும். பின்னர் பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் ஆகிய திருக் குளங்களுக்கும் சென்று தண்ணீர் தெளித்துக்கொள்ள வேண்டும். பிறகு கோவிலுக்குள் வந்து விநாயக பெருமானை வணங்கி, தர்பாரண் யேஸ்வரர், சனீஸ்வரரை வணங்கி, பிரணாம்பிகை அம்மனை வணங்கி தற் போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள வழி தடத்தின்படி வழிபாடு செய்வது நன்மையை தரும்.

    அவரவர் வசதிக்கும், சக்திக்கும் ஏற்றபடி சனிபகவானுக்கு அர்ச்சனை, அபிஷேகம், ஜபம், ஹோமம், தர்ப்பணம், ரக்ஷை தானம், பிரிதீ நவ நமஸ்காரம், நவபிரதட்சணம் முத லியவற்றை செய்யலாம். காலை, மாலை இரு வேளைகளிலும் சனிபகவானை நவ பிரதட்சணம் செய்வதும் நல்ல பயன்தரும்.
    திருநள்ளாறு சனீஸ்வரபகவானுக்கு உகந்த எள்ளை துணியில் முடிச்சாக கட்டி நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபடுவதற்கு தில தீபம் என்று பெயர். கோவில் சார்பாக ரூ.5 கட்டணத்தில் தில தீபம் வழங்கப்படுகிறது.

    அனைத்து ராசிக்காரர்களும் தில தீப வழிபாடு செய்வது சகல தோஷங்களையும் நீக்கும். நவக்கிரகங்களில் வலிமையான கிரக மாகத் திகழ்பவர் சனி பகவான். சனியைப் போல் கொடுப்பவருமில்லை; சனியைப் போல் கெடுப்பவருமில்லை என்பர். எனவே சனிக்கிரக தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்யக் கூடிய முக்கியத் தலமாகத் திகழ் வது திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயம் மட்டுமே.

    இங்கே கோயில் கொண்டு அருள் புரியும் சனி பகவானை வழிபடுபவர்களுக்கு சனி தோஷ நிவர்த்தி கிடைக்கப் பெற்று எல் லாத் துன்பங்களையும் சனிபகவான் போக்குவதுடன் அவர்களுக்கு நீண்ட ஆயுளைத் தருவார். திருமண யோகம் உள் ளிட்ட விரும்பிய பலன்களை அளிப்பார் என்பது புராண வரலாறு மூலம் தெரிய வருகிறது.

    திருநள்ளாறு தலத்தில் வீற்றிருக்கும் சனி பகவான் ‘ஈசுவர பட்டம்’ பெற்று அனுக்கிரக மூர்த்தியாக காட்சி தந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.
    காரைக்காலிலிருந்து 5 கி.மீ. தூரமுள்ளது. பேரளம் என்ற இடத்திலிருந்து கிழக்கு முகமாகச் சென்றால் 18 கி.மீ. தூரம் உள்ளது இக்கோயில். மேலும், கும்பகோணம், காரைக்கால், மயிலாடுதுறை வழியாகவும் திருநள்ளாறு கோயிலுக்கு பேருந்து மூலமாகச் செல்லலாம்.

    சஷ்டி திதி நாட்களில் விரதம் இருந்தால் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பண நெருக்கடியே வராது. சுப நிகழ்ச்சிகளை திறம்பட நடத்துவதற்கு தினமும் கந்தசஷ்டி படித்து வரலாம். இந்த ராசி இளம்பெண்கள் இதுவரை திருமணம் தாமதமாகி கொண்டே வந்தால் கந்தசஷ்டி படிப்பது மூலம் அந்த குறையை நிவர்த்தி செய்ய முடியும். வாய்ப்பு இருப்பவர்கள் ஒரு தடவை திருச்செந்தூர் முருகன் தலத்துக்கு சென்றுவருவது நல்லது.

    Next Story
    ×