search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    துலாம் ராசி
    X
    துலாம் ராசி

    துலாம் ராசிக்காரர்களின் திருமண யோகமும், வழிபட வேண்டிய கடவுளும்

    குரு பகவான் துலாம் ராசியில் மூன்றாம் இடத்துக்கு வந்து இருக்கிறார். நீங்கள் எந்த அளவுக்கு குலதெய்வ வழிபாட்டை செய்கிறீர்களோ அந்த அளவுக்கு சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் வெற்றிகளை பெற முடியும்.
    குரு பகவான் உங்கள் ராசியில் மூன்றாம் இடத்துக்கு வந்து இருக்கிறார். கடந்த ஆண்டு போல இந்த ஆண்டு பலன்களை எதிர்பார்க்க முடியாது. எனவே துலாம் ராசிக்காரர்கள் குல தெய்வ வழிபாட்டை அதிகளவு செய்ய வேண்டும். நீங்கள் எந்த அளவுக்கு குலதெய்வ வழிபாட்டை செய்கிறீர்களோ அந்த அளவுக்கு சுப காரிய பேச்சுவார்த்தைகளில் வெற்றிகளை பெற முடியும்.

    மூன்றாம் இடம் என்பது பொருளாதார ரீதியாகவும் திருப்தியாக அமையாது. எனவே அந்த குறையை நிவர்த்தி செய்ய தினமும் வீட் டில் காலையும், மாலையும் விளக்கேற்றி குல தெய்வத்தை மனதில் நினைத்து வழிபட வேண்டும். குல தெய்வம் தெரியாதவர்கள் அம்மன் வழிபாட்டை மேற்கொள்ள வேண் டும். அம்மன் அம்சங்களில் ரேணுகா பர மேஸ்வரியை வழிபடுவது நல்லது.

    குறிப்பாக வேலூர்-திருவண்ணாமலை வழித்தடத்தில் உள்ள படைவீடு ரேணுகா பரமேஸ்வரி ஆலயத்துக்கு ஒரு தடவை சென்று வழிபட்டு வரலாம். இந்த வழிபாடு காரணமாக தடைப்பட்டு நிற்கும் சுப காரிய பேச்சுவார்த்தைகளில் வெற்றி உண்டாகும். பவுர்ணமி நாட்களில் அம்மனுக்கு விளக் கேற்றி வழிபட்டால் நினைத்தது நடக்கும்.

    அம்மன் அருள்பெற வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் விரதம் இருக் கலாம். சப்தகன்னியர்களுக்கு பால், இளநீர் அபிஷேகம் செய்து வழிபட்டால் பெண்களுக்கு நினைத்த இடத்தில் திருமணம் நடைபெறும். அம்மன் வழிபாடு குரு பார்வையில் மேம்படும். இதனால் திருமண யோகம் கைகூடி வரும். 7.7.2020 முதல் 30.7.2020 வரை குரு பகவான் தனுசு ராசியில் (உத்திராடம் 1-ம் பாதம்) வக்கிரம் அடைகிறார். இந்த கால கட்டத்தில்தான் இதுவரை தடைப்பட்ட அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். திருமண வயதில் உள்ள பெண்கள் பெற்றோருடன் வாக்குவாதத்தை தவிர்த்தால் உடனடி சுப காரியத்துக்கு வாய்ப்புள்ளது.

    குரு பகவான் உங்களின் 7-ம் வீட்டை பார்ப்பதால் ஆன்மீக ரீதியாக பல புதிய தொடர்புகள் கிடைக்கும். அவர்கள் மூலமும் சுப காரிய பேச்சுவார்த்தைகளை நடத்தலாம். சிலருக்கு வசதிக்கும், அந்தஸ்துக்கும் தகுந்த மணமகன் கிடைக்க வாய்ப்புள்ளது. குரு பெயர்ச்சியின் சில அம்சங்கள் உங்களது முயற்சிகளில் சில பின்னடைவுகளை உருவாக்கலாம். ஆனால் திட்டமிட்டு பணியாற்றினால் அந்த பின்னடைவுகளை உடைத்து சுப காரியங் களில் வெற்றி காண முடியும்.

    குரு வழிபாடு காரணமாக திரு மணத்தை முன் நின்று நடத்தும் பாக்கியத்தை பெற முடியும். இந்த அந்தஸ்தை பெறு வதற்கு சென்னையில் இருப்பவர்கள் திருவடி சூலத்தில் அமைந்துள்ள பைரவர் ஆலயத்துக்கு சென்று வழிபடலாம். திருவடிசூலம் பைரவர் ஆலயத்தில் சுபகாரிய பிரார்த்தனைக்காக பல்வேறு வழிபாடுகள் உள்ளன. அவற்றை தெரிந்து கொண்டு பைரவரை வழிபட்டால் பலன் கிடைப்பதை அனுபவப்பூர்வமாக உணர முடியும்.

    அடுத்து தாராபலம் உள்ள நாட்களை தெரிந்து கொண்டு அந்த நாட்களில் உங் களுக்கு பிடித்த இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த வழிபாடும் சுப காரி யங்களை விரைந்து நிறைவேற்ற உதவியாக இருக்கும். உங்கள் ராசிப்படி குரு பகவான் மூன்று, ஆறு இடங்களுக்கு அதிபதியானவர். இது பரிவர்த்தனை யோகம் மற்றும் நீச்சபங்க ராஜயோகத்தை தரும். இது குடும்பத்தில் சுப காரியத்தை தானாகவே உருவாக்கும். ஏழாம் இடத்தில் குரு பார்வை பதிவதால் அந்த இல்லறம் இனிமையானதாக மாறும். அதற்கு குரு வழிபாடு அவசியமாகும். வியாழக்கிழமை தோறும் மறக்காமல் குரு வழிபாட்டை செய்து வந்தால் திருமண ஏற்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும்.

    இது தவிர திங்கட்கிழமைகளில் சிவ பெருமானுக்கு உகந்த பூஜையை செய்யலாம். வில்வ அர்ச்சனை செய்வது நல்லது. துலாம் ராசியில் சித்திரை (3, 4-ம் பாதம்) சுவாதி, விசாகம் (1, 2, 3-ம் பாதம்) ஆகிய மூன்று நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும்.

    சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முருகனை வழிபட வேண்டும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆலங்குடி குரு பகவானை வழிபடுவது நல்லது.
    துலாம் ராசிக்காரர்கள் இந்த காலக் கட்டத்தில் காலபைரவரை வழிபடுவது நல்லது. தேய்பிறை அஷ்டமி தினத்தன்று கால பைரவருக்கு விளக்கேற்றி வழிபட்டால் பின்னடைவுகள் தானாக விலகிவிடும். வாய்ப்பு இருப்பவர்கள் மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் உள்ள சேத்திரபாலபுரம் எனும் ஊரில் இருக் கும் கால பைரவர் கோவிலுக்கு சென்று வரலாம்.

    சிவபெருமானின் திருக்கோல வடிவங்களில் பைரவர் திருக்கோல வடிவமும் ஒன்றாகும். ஒவ்வொரு மாதமும், தேய்பிறை அஷ்டமி திதியானது பைரவருக்கு மிகவும் உகந்த நாளாகும். ஞாயிறு அன்று ராகு கால வேளையில், எலுமிச்சம் பழ மாலை சாற்றி விபூதியால் அபிஷேகம் செய்து பின்பு வடைமாலை சாற்றி எள் கலந்த அன்னம் இனிப்புப் பண்டங்கள் சமர்ப்பித்து வழிபட வேண்டும். திங்கள் அன்று ராகு கால வேளையில் அல்லி மலர் புனுகு சாற்றி பாகற்காய் கலந்த அன்னம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.

    செவ்வாய் அன்று ராகு கால வேளையில் செவ்வரளி மாலை சாற்றி .துவரம் பருப்பு கலந்த அன்னம் நைவேத்தியம் செய்ய வேண்டும். புதன் கிழமை ராகு கால வேளையில், மருக்கொழுந்து மாலை சாற்றி பயிற்றம் பருப்பு கலந்த அன்னம் நைவேத் தியம் செய்ய வேண்டும். வியாழக்கிழமை ராகு கால வேளையில் மஞ்சள் நிறமுடைய மலர்களை மாலையாகச் சாற்றி பால் பாயாசம், சுண்டல் ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். வெள்ளிக் கிழமையன்று ராகு கால வேளையில் தாமரை மலர்கள் சாற்றி, கேசரி பானகம் சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். சனிக் கிழமை ராகு கால வேளையில் நாகலிங்கப்பூ சமர்ப்பித்து, பால் பாயாசம், எள் கலந்த அன்னம், கருப்பு திராட்சை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும்.

    பைரவருக்கு பல கோவில்களில் பரிவார சன்னிதிகள் இருந்தாலும், அவருக்கென்று தனிக்கோவில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் உள்ள ஷேத்திரபாலபுரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆனந்த கால பைரவராக வீற்றிருக்கும் பைரவர் முற்றிலும் மாறுபட்ட கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு அவருக்கு நாய் வாகனம் இல்லை. கரத்தில் சூலத்தை ஏந்தி, சிரித்த முகத்துடன் தாமரை மலர் மீது நின்ற கோலத்தில் ஆனந்தமாக காட்சி தருகிறார்.

    பைரவருக்கு ஷேத்திரபாலர் என்ற பெயரும் உண்டு. அவருடைய பெயரால் இவ்வூர் ஷேத்திரபாலபுரம் என்று அழைக் கப்படுகிறது. பைரவருக்கு, தொலைந்து போன ஆனந்தம் இத்தலத்தில் கிடைக்கப் பெற்றதால் ‘ஆனந்தகால பைரவர்’ என்று அழைக்கப்படுகிறார். இவரை காசியில் உள்ள காலபைரவருக்கு மேலானவர் என்று கூறுகிறார்கள்.

    ஆதிகாலத்தில் சிவபெருமானுக்கு ஐந்து தலைகள் இருந்தன. அதே போன்று பிரம் மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் சிவனை விட தானே சிறந்தவர் என்ற எண்ணம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது. அதனால் தேவர்களும், முனிவர்களும் தன்னையே வணங்க வேண்டும் என்று கட்டளையிட்டார். பிரம்மனின் ஆணவத்தை அடக்க எண்ணிய பரமேஸ்வரன் பைரவரை தோற்றுவித்தார். பைரவர் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டார்.

    இதனால் பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அதில் இருந்து விடுபட என்ன செய்வது என்று சிவபெருமானிடம் கேட்டார். அதற்கு சிவன், ‘நீ பூலோகம் சென்று பிச்சை எடுத்து எம்மை வழிபடு. உரிய காலத்தில் உன்னை பிடித்த பிரம்மஹத்தி தோஷம் விலகும்’ என்று கூறினார். இதை அருகில் இருந்து கவனித்த மகாவிஷ்ணு தென்னாட்டில் காவிரி பாயும் திருத்தலத்தில் உமது பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்று குறிப்பால் உணர்த்தினார்.

    பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததால் ஆனந் தம் தொலைந்த மனதுடன் பூமிக்கு வந்த பைரவர், உலகம் முழுவதும் பிச்சை எடுத்த வண்ணம் சுற்றித் திரிந்தார். காசி, காஞ்சீபுரம், சீர்காழி, சிதம்பரம், திருவெண்காடு, மயிலாடுதுறை, திருவையாறு உள்ளிட்ட பல தலங்களுக்கு சென்று பரமனை வணங்கினார்.
    திருவலஞ்சுழி என்ற திருத்தலத்தில் வந்து வேத விநாயகரை வணங்கினார். அவரது அருளால் பல ஆண்டுகளாக பைர வரை தொல்லைப்படுத்தி வந்த பிரம்மஹத்தி அவரை விட்டு விலகியது. தொலைந்து போன ஆனந்தம் திரும்ப கிடைக்கப்பெற்ற பைரவர், அத்தலத்து வேத விநாயகரை வணங்கினார்.

    அப்போது வானில் ஒரு அசரீரி கேட்டது. பைரவரை அத்தலத்தில் குறிப்பிட்ட காலம் தவம் செய்யும் படியும், பின்னர் அவர் கரத்தில் உள்ள சூலாயுதத்தை கிழக்கு நோக்கி எறியும் படியும், அது எந்த இடத்தில் விழுகிறதோ அந்த இடத்தில் ஆனந்த கால பைரவர் என்ற நாமத்தை ஏற்று தனிக்கோவில் கொண்டு அருள்புரியும்படியும் கூறியது.

    அசரீரி கூறியபடி திருவலஞ்சுழியில் குறிப்பிட்ட காலம் தவம் செய்த பைரவர், தன் சூலாயுதத்தை கிழக்கு நோக்கி செலுத் தினார். அது சென்று விழுந்த இடமே இன்றைய ஷேத்திரபாலபுரம் ஆகும். காவிரி தீர்த்தத்தில் ஒருநாள் நீராடினால், காசி தீர்த்தத்தில் மூன்று நாள் நீராடிய பலன் கிட்டும் என்று தலபுராணம் கூறுகிறது. காலை 8 மணிக்குள் காவிரியில் நீராடி விட்டு, 10.30 மணிக்குள் சூல தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின்னர் 11 மணியில் இருந்து மதியம் 12 மணிக்குள் கால பைரவரை வழிபடுதல் நலம் அளிக்கும்.

    வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை விசேஷ தினமாகும். தினந்தோறும் மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, ஒருகால பூஜை நடக்கிறது. சித்ரா பவுர்ணமியில் காவடி உற்சவமும், கார்த்திகை கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று சந்தனக்காப்பு வைபவமும் நடைபெறும். காசிக்கு செல்ல முடியாதவர்கள் இந்தத் தலத்தில் உள்ள காலபைரவரை வணங்கினால் காசிக்கு சென்ற பலன் கிடைக்கும்.

    ஷேத்திரபாலபுரம் ஆனந்த கால பைரவர் கோவில் நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகாவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 9 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த கோவில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து நகர பஸ் வசதியும் உண்டு. கோமல் ரோடு பஸ் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து 100 மீட்டர் தூரம் நடந்து சென்றால் கோவிலை சென்று அடையலாம். கும்பகோணத்தில் இருந்து செல்பவர்கள் மயிலாடுதுறை செல்லும் பஸ்சில் ஏறி 28 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் கோவிலை சென்று அடையலாம். 
    Next Story
    ×