என் மலர்
கிறித்தவம்
எடப்பாடியில் உள்ள வெள்ளாண்டிவலசை தூய செல்வநாயகி ஆலயத்தில் பாஸ்கு திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் திருப்பலி பூஜைகள் நடந்தன.
எடப்பாடியில் உள்ள வெள்ளாண்டிவலசை தூய செல்வநாயகி ஆலயத்தில் பாஸ்கு திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் திருப்பலி பூஜைகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான உலக மீட்பர் என்னும் ஒலி-ஒளி காட்சி 20 மேடைகளில் 300 நடிகர்களை கொண்டு நடத்தப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு வீரமாமுனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட யானை தந்தத்தால் ஆன தூயசெல்வ நாயகியின் ஆடம்பர தேர் பவனி வாண வேடிக் கைகளுடன் நடந்தது. இதில் ஆயிரக் கணக்கான கிறிஸ் தவர்கள் கலந்து கொண்டு பாடல்கள் பாடியவாறு சென்றனர். இதையடுத்து நேற்று அதிகாலை சேலம் மறை மாவட்ட ஆயர் சிங்கராயன் தலைமையில் திருப்பலி பூஜை நடந்தது. விழா ஏற்பாடுகளை பீட்டர் ஜான்பால் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

கோவை ராமநாதபுரத்தில் உள்ள உயிர்த்த ஆண்டவர் ஆலய தேர் பவனி நேற்று நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோவை ராமநாதபுரத்தில் உயிர்த்த ஆண்டவர் ஆலயம் உள்ளது. மிகவும் புகழ்வாய்ந்த இந்த ஆலயத்துக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்துவிட்டு செல்கிறார்கள்.
இந்த ஆலய தேர்த்திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடந்து வந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
ஆலயத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று இரவு நடந்தது. முன்னதாக நேற்று காலையில் கோவை மறைமாவட்ட ஆயர் எல்.தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து புதுநன்மை, உறுதி பூசுதல் மற்றும் சிறப்பு காணிக்கை பவனியும் நடந்தது.
பின்னர் இரவில் தேர் பவனி நடந்தது. இதில் தேர் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
தேர் பவனியை திருப்பூர் பிஷப் உபகாரசாமி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஹென்றி டேனியல் தொடங்கி வைத்தார்.
ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கிய தேர், பாரதி நகர் 6-வது வீதி, வ.உ.சி. நகர், சர்ச் தெரு வழியாக மீண்டும் ஆலயத்தை வந்து அடைந்தது. பின்னர் நற்கருணை ஆசீர்வாதத்துடன் விழா முடிந்தது.
இதில் ஆலய பங்குகுரு கனகராஜ், பங்குபேரவை துணை தலைவர் பீட்டர், செயலாளர் சேவியர் ராஜன் மற்றும் எல்.ஜோ, கே.ஆர்.தாமஸ் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மலையடிப் பட்டியில் உள்ள மலைத்திருத்தலத்தில் தூயதோமையார் ஆலய தேர்பவனி நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மலையடிப் பட்டியில் உள்ள மலைத்திருத்தலத்தில் தூய தோமையார் ஆலயம் உள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 17-ந் தேதி மாலை தூய தோமையார் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. கடந்த 20-ந் தேதி ஏசுவின் பாடுகளின் பாஸ்கா தூம்பா பவனி விழாவும், அதைத் தொடர்ந்து 21-ந் தேதி ஏசுவின் உயிர்ப்பு பாஸ்கா ரதபவனியும், தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு தூய தோமையார் ரதம் மலையில் இருந்து கீழே கொண்டு வரப்பட்டு மலையடிப்பட்டி நடுவீதியில் உயிர்த்த ஆண்டவர் தூய தோமையார் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பெரிய தேர் பவனி நேற்று மாலை நடைபெற்றது. தேர் பவனியை மந்திரித்து சிறப்பு வழிபாடுகள் நடத்திய பின்னர் உயிர்த்த ஏசு மற்றும் தோமையார் சொரூபங்கள் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர் பவனியை பங்குத்தந்தைகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். நிலையில் இருந்து புறப்பட்ட தேர் ஊரைச் சுற்றி மீண்டும் நிலையை வந்தடைந்தது.

குற்றம் இல்லாமல் வாழ அனைவரும் முயற்சி எடுப்போம். இயேசு பிரானின் கோட்பாடுகளை ஏற்று நடக்க உறுதி பூணுவோம். இதுவே நல்வாழ்வு வாழ வழி வகுக்கும்.
அக்காலத்தில் இயேசு பிரான் ‘ஒலிவ மலை’ என்ற இடத்திற்குச் சென்றார். இரவு அங்கு தங்கி இருந்தார். பொழுது விடிந்தது. அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவர்களைக் கண்டு மகிழ்ந்தார். அவர்களோடு அமர்ந்து அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.
மறைநூல் அறிஞர்களும், பரிசேயர்களும், விபசாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருத்தியை அவர்களோடு அழைத்து வந்தனர். அந்தப் பெண்ணை கூட்டத்தின் நடுவில் நிறுத்தினார்கள்.
பிறகு அவர்கள் இயேசு பிரானைப் பார்த்து, “போதகரே! இந்தப் பெண் விபசாரத்தில் ஈடுபட்டவள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது, ‘மோசே’ நமக்குக் கொடுத்த திருக்கட்டளை ஆகும். இது குறித்து நீர் என்ன சொல்கிறீர்?” என்று கேட்டனர்.
இயேசு பிரானின் மேல் குற்றம் சுமத்த, ஏதாவது கேட்க வேண்டும் என்பதற்காக, இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு சோதித்தனர். அவர் தரையைப் பார்த்து குனிந்து கொண்டு, தனது விரலால் தரையில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். அவர்கள் அவரை விட்டபாடில்லை. விடாமல் தொடர்ந்து வினாவை தொடுத்த வண்ணம் இருந்தனர்.
அவர் அவர்களை நிமிர்ந்து பார்த்து, “உங்களுள் பாவம் இல்லாதவர், முதலில் இவள் மீது கல் எறியட்டும்” என்றார்.
மீண்டும் தரையில் குனிந்து எழுதிக் கொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி, அனைவரும் ஒருவர் பின் ஒருவராக நகர்ந்து சென்று விட்டனர். இறுதியாக இயேசு மட்டும் அங்கே இருந்தார். அந்தப் பெண் அங்கு நின்று கொண்டிருந்தாள்.
இயேசு நிமிர்ந்து பார்த்தார். அப்பெண்ணைப் பார்த்து, “அம்மா! அவர்கள் எங்கே? உன்னைக் குற்றவாளி என்று அவர்கள் தீர்ப்பிடவில்லையா?” என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண், “இல்லை ஐயா” என்று பதில் கூறினாள். உடனே இயேசு பிரான், அவளைப் பார்த்து, “நானும் தீர்ப்பிடவில்லை. நீ போகலாம். இனி பாவம் செய்யாதே” என்றார்.
இந்தச் சம்பவத்தில் இருந்து நாம் என்ன உணர்கிறோம்? குற்றமற்றவர் என்று ஒருவர் கூட இருக்க முடியாது. உலகத்தில் உதித்த எல்லோரும் பாவச்சேற்றில் உழன்று கொண்டுதான் இருக்கிறோம். பாவம் செய்தவர்களைத் திருந்தி வாழ வேண்டும் என்று கூறுவதுதான் சிறந்த அறிவுரை ஆகும். யாரும் யாரையும் தீர்ப்பிட முடியாது. காரணம் யாரும் யாரையும் தீர்ப்பிடமுடியாத அளவுக்கு, அனைவரின் வாழ்க்கையும் ஏதோ ஒரு வழியில்-ஏதோ ஒரு வகையில் பாவ வாழ்க்கையாகத்தான் இருக்கிறது.

ஒருவரைத் தீர்ப்பிடுவதும், தீர்ப்புக்கு உள்ளாக்குவதும் அக்காலத்தில் சர்வ சாதாரணமாக இருந்திருக்கிறது. தன் குற்றத்தைப் பார்க்காமல், பிறர் குற்றத்தையே காணும் பழக்கம் மனித சமுதாயத்தில் மலிந்து கிடக்கிறது.
போதிக்கக் கூடியவர்களைக் கேள்வி கேட்பதும் வழக்கமாகி விட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு பிரான் வாழ்க்கையில் இப்படி எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந் திருக்கின்றன. விபசாரம் செய்யும் பெண்களுக்கு இப்படி கொடூர மான தண்டனைகளை வழங்கி இருக்கிறார்கள்.
இயேசு பிரான் இந்த நிகழ்வை எப்படிக் கையாள்கிறார் பார்த்தீர்களா? ‘உங்களில் குற்றமில்லாதவன்’ என்ற வரிதான் வந்தவர்களைச் சிந்திக்க வைக்கிறது.
யாரும், யாரையும் தீர்ப்பிடக்கூடாது என்ற கருத்தும், குற்றமில்லாதவர் யார்? என்ற வினாவும் எந்தக் காலத்திற்கும் பொருந்தக் கூடிய ஒன்றாக இருக்கிறது.
நாம் வாழும் இந்தக் காலத்திலும் இக்கருத்தைப் பற்றி சிந்திப்போம். நம்மைச் சுற்றி ஓர் உலகம் இயங்குகிறது. இந்த உலகத்தில் பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். பல்வேறு சமயத்தையும் சாதிகளையும் சார்ந்தவர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். சாதிகளுக்குள் சண்டை; சமயங்களுக்குள் பகைமை என்பதெல்லாம், புரையோடி இருக்கிறது. இந்த நிலையில் அரசியல் வேறு மனித சமுதாயத்தை அலைக்கழிக்கிறது. எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் மனித சமுதாயம் மாண்புடன் திகழும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் வேண்டியவர்களுக்கு ஒரு நீதி; வேண்டாதவர் களுக்கு ஒரு நீதி என்பதெல்லாம் இவ்வுலகத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்டு செயலாக்கம் பெறுகிறது.
தவறு செய்வது மனித சமூகத்தில் இயல்பானதுதான். அந்த இயல்பை மாற்றி அமைப்பதற்குத்தான், மதம் என்னும் மார்க்கம் இருக்க வேண்டுமே தவிர, பகைமையை உருவாக்கக் கூடியதாக இருக்கக் கூடாது. விபசாரம் செய்து விட்டாள்; இவளைக் கல்லால் எறிய வேண்டும் என்று ஒரு கூட்டம் ஓடி வந்ததைக் கண்டோம். அந்தக் கூட்டத்தை ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டு, சிந்திக்க வைக்கிறார், இயேசு பெருமான்.
‘உங்களில் குற்றமில்லாதவன், முதல் கல்லை எறியட்டும் என்கிறார். அக்காலத்தில் பெண் தவறு செய்தால், பெரிய தவறாகச் சித்தரிப்பார்கள். இந்தக் காலத்திலும் அதே நிலைதான் நீடிக்கிறது. ஆணாதிக்க சமுதாயமாக அன்றிருந்த நிலைதான் இன்றும் தொடர்கிறது.
ஆகவே சிந்திக்கத் தொடங்குவோம். இயேசு பிரான் சொன்னதைப்போல, யாரும் யாரையும் தீர்ப்பிடும் நிலையில் இல்லை என்பதை உணர்வோம். குற்றம் இல்லாமல் வாழ அனைவரும் முயற்சி எடுப்போம். சாதி, சமய பகைமையை ஒழித்து, நல்லுறவைப் பேணி வளர்ப்போம். இயேசு பிரானின் கோட்பாடுகளை ஏற்று நடக்க உறுதி பூணுவோம். இதுவே நல்வாழ்வு வாழ வழி வகுக்கும்.
செம்பை சேவியர்.

விசுவாசத்தோடு உங்கள் வியாதிகளையும் பெல வீனங்களையும் தேவனிடத்தில் தெரியப்படுத்துங்கள். இயேசு என்னை குணமாக்குவார் என விசுவாசியுங்கள். நிச்சயம் உங்கள் வியாதி உங்களை விட்டு நீங்கும்.
ஒவ்வொரு வருடமும் நம் அருமை ஆண்டவருடைய பாடுகளையும், மரணத்தையும் நினைவு கூர்ந்து வருகிறோம். அந்த வகையில் விலைமதிக்க முடியாத சிலுவையின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதனுக்கும் நம் அருமை ஆண்டவர் வாழ்வளிக்கிறார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
வேதம் சொல்லுகிறது, “அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்” (யோவான் 19:17).
உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியாக நம் அருமை ஆண்டவர் பார சிலுவையை தம் தோளின் மேல் சுமந்தார். அவர் தம்முடைய சிலுவையை சுமந்ததினால் நாம் ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்கிற ஆசீர்வாதங்களை உங்களுக்காக எழுத விரும்புகிறேன். ஜெபத்தோடு வாசித்து சிலுவையின் ஆசீர்வாதங் களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
பாவங்களைச் சுமந்தார்
“அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்து கொள்வார்” (ஏசா 53:11).
“அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்” (ஏசா 53:12).
சிலுவையில் நம் அருள்நாதர் நம் ஒவ்வொருவருக்காக அவர் செய்த மகா பெரிய தியாகம் என்னவெனில் எந்த ஒரு மனிதனும் பாவத்தோடு வாழ்வது தேவசித்தமில்லை. எல்லா மதத்திலும் பாவத்திற்கு பரிகாரம் செய்ய வேண்டுமென்று சொல்லப்படுகிறது. நமது ஆண்டவரோ நம் எல்லாருடைய பாவங்களைத் தம் மேல் ஏற்றுக்கொண்டு பரிகாரியாக மாறினார். அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்தபடியால் நாம் சுமக்க வேண்டிய அவசியமில்லை. அவருடைய சமூகத்தில் மனத்தாழ்மையாய் நம்முடைய சகல குற்றங்களையும் அறிக்கைச் செய்வதால் நம்முடைய எல்லா பாவங்களையும் மன்னித்து பாவ மன்னிப்பின் நிச்சயத்தை அதாவது இரட்சிப்பின் சந்தோஷத்தை நிச்சயம் அவர் நமக்குத் தருவார்.
“நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன். என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன். தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்” (சங். 32:5).
இன்றுவரை உங்களுக்கு பாவமன்னிப்பின் நிச்சயம் இல்லையென்றால் மனதார உங்களுடைய சகல பாவங்களையும் தேவனுடைய சமூகத்தில் அறிக்கையிடுங்கள். நிச்சயம் உங்களுக்கு இரட்சிப்பை அளித்து சந்தோஷப்படுத்துவார்.
துக்கங்களைச் சுமந்தார்
“மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்” (ஏசா 53:4)
இந்த உலகம் பலவிதமான துக்கங்களில் மூழ்கிபோயிருக்கிறது. குடும்ப கவலை, தீராத வியாதி, கடன் பிரச்சினை, சமாதானமில்லாமை போன்ற பலவிதமான கஷ்டங்களில் அநேகர் சிக்கி துக்கத்தோடு வாழ்ந்து வருகிறார்கள்.

துக்கம் மன வேதனையையும், மனவேதனை பலவிதமான பிரச்சினைகளுக்கு நேராகவும் நம்மைக் கொண்டு போய்விடுகிறது. ஆனால், ஏதோ ஒரு துக்கம் உங்களைச் சூழ்ந்து இருக்குமென்றால் நம் அருமை ஆண்டவர் உங்கள் துக்கங்களை சிலுவையில் சுமந்து இருக்கிறார். ஆகவே நீங்கள் சுமக்க வேண்டிய அவசியமில்லை. எனவே உங்கள் எதிர்கால வாழ்வை ஆண்டவராகிய இயேசுவின் கையில் அர்ப்பணித்து விடுங்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் சகல துக்கங் களையும் சிலுவையில் சுமந்த இயேசுவை முதலாவது விசுவாசியுங்கள். மேலும், உங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு அர்ப்பணியுங்கள். நிச்சயம் “உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்” (யோவான் 16:20)
நோய்களைச் சுமந்தார்
“அவர்தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு நம்முடைய நோய்களைச் சுமந்தார்” (மத் 8:17)
உங்கள் சகல நோய்களை இயேசு சிலுவையில் சுமந்து தீர்த்தார். இந்நாட்களில் மனிதனோடு போராடுகிற மிக முக்கியமான பிரச்சினை வியாதியாகும். மருத்துவர் களால் குணப்படுத்தக்கூடிய வியாதியும் உண்டு, குணமாக்க முடியாத வியாதியும் உண்டு. இன்னும் அநேக வியாதிகளுக்கு மருந்துகள் கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில் மருத்துவம் திணறி வருகிறது.
வேதம் சொல்லுகிறது, ‘நம்முடைய சகல நோய்களையும் இயேசு சிலுவையில் சுமந்தார்’ என்று. அப்படியானால், ‘நாம் வியாதிகளை சுமக்க வேண்டிய அவசியமில்லை. அவரே நம்முடைய பரிகாரி, அவருடைய தழும்பு களால் குணமாகிறோம்” என ஏசாயா 53:5 கூறுகிறது.
விசுவாசத்தோடு உங்கள் வியாதிகளையும் பெல வீனங்களையும் தேவனிடத்தில் தெரியப்படுத்துங்கள். இயேசு என்னை குணமாக்குவார் என விசுவாசியுங்கள். நிச்சயம் உங்கள் வியாதி உங்களை விட்டு நீங்கும். நீங்கள் ஆரோக்கியமடைவீர்கள். இயேசு கிறிஸ்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செய்த சகல அற்புதங்களையும் இன்றும் செய்கிறார்.
ஆகவே மேற்கண்ட சிலுவையின் ஆசீர்வாதங்களை நீங்கள் அனைவரும் பெற்றுக் கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதே தேவசித்தம்.
சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.

நாகர்கோவில் புன்னைநகர் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நாகர்கோவில் புன்னைநகர் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 30-ந்தேதி வரை 10 நாட்கள் குடும்ப விழாவாக கொண்டாடப்படுகிறது.
நாளை மாலை 5.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலையும், 6 மணிக்கு திருக்கொடியேற்றமும், திருப்பலியும் நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் ஆல்பர்ட் ஜார்ஜ் அலெக்சாண்டர் தலைமை தாங்க, அருட்பணியாளர் ஆரோக்கிய ஆன்றோ மறையுரையாற்றுகிறார். தினமும் மாலை செபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடக்கிறது. 23-ந்தேதி காலை 6 மணிக்கு அருட்பணியாளர் பெஞ்சமின் திருப்பலிக்கு தலைமை தாங்க, அருட்பணியாளர் ஜெரி வின்சென்ட் மறையுரையாற்றுகிறார்.
காலை 8 மணி முதல் மாலை 3.30 மணி வரை நற்கருணை ஆராதனையும், 4 மணிக்கு நற்கருணை ஆசீரும், 5.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலை திருப்பலியும் நடைபெறுகிறது. இதற்கு அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சலூஸ் தலைமை தாங்க, அருட்பணியாளர் ஜான் குழந்தை மறையுரையாற்றுகிறார். இரவு 8 மணிக்கு மறைக்கல்வி ஆண்டு விழா நடக்கிறது.

29-ந்தேதி காலை 6 மணிக்கு நடைபெறும் முதல் திருவிருந்து திருப்பலிக்கு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி, மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு ஆடம்பர மாலை ஆராதனை நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் மரிய அல்போன்ஸ் தலைமை தாங்க, அருட்பணியாளர் ஸ்டான்லி சகாய சீலன் மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.
30-ந்தேதி காலை 6 மணிக்கு பெருவிழா திருப்பலிக்கு அருட்பணியாளர் சாலமோன் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 5 மணிக்கு நற்கருணை ஆசீர், 5.30 மணிக்கு பொதுக்கூட்டம், 6.30 மணிக்கு நடனப்போட்டி நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், பங்கு அருட்பணிப்பேரவை, பங்குத்தந்தை ஆகியோர் செய்து வருகிறார்கள்.

பொதுவாக மனித சமுதாயத்தில் தாழ்ச்சி, கீழ்ப்படிதல் போன்ற பண்புகள் குறைந்து வரும் நிலையில், இந்த நற்செய்தி வாசகத்தைப் படிப்போம்; இயேசு பிரான் நடந்து காட்டிய வழியில் நடப்போம்.
‘பாஸ்கா’ விழா தொடங்கி இருந்தது. இந்த உலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்து விட்டது என்பதை இயேசு பிரான் அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தம் சீடர்களிடம் அன்பு கொண்டிருந்த அவர், அவர்கள் மேல் இறுதி வரை அன்பு செலுத்தினார்.
இயேசு பிரானைக் காட்டிக் கொடுக்கும் எண்ணத்தை ‘சாத்தான்’, சீமோனின் மகனாகிய ‘யூதாசு’க்கு ஏற்படுத்தி இருந்தது.
இரவு உணவு நேரத்தில் தந்தை, அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும், கடவுளிடம் இருந்து வந்தது போல், மீண்டும் அவரிடமே செல்ல வேண்டும் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.
இயேசு பந்தியில் இருந்து எழுந்தார். தன் மேல் உடையைக் கழற்றினார். ஒரு ‘துண்டை’ எடுத்து, தன் இடுப்பில் கட்டிக் கொண்டார். பிறகு ஒரு குவளையில் தண்ணீர் எடுத்தார். தன் சீடர்களின் கால்களைக் கழுவி, துண்டால் துடைக்கத் தொடங்கினார்.
‘சீமோன் பேதுரு’ என்ற சீடரிடம் வந்தபோது, “ஆண்டவரே! நீரா என் கால்களைக் கழுவப் போகிறீர்?” என்று கேட்டார்.
இயேசு மறுமொழியாக, “நான் செய்வது இன்னது என்று இப்பொழுது உனக்குத் தெரியாது. பிறகுதான் தெரிந்து கொள்வாய்” என்றார்.
‘பேதுரு’ என்ற சீடர் அவரைப் பார்த்து, “என் கால்களைக் கழுவ விட மாட்டேன்” என்றார்.
அப்படியானால், “என்னோடு உனக்கு பங்கில்லை” என்றார், இயேசு.
உடனே அந்தச் சீடர் அவரைப் பார்த்து, “ஆண்டவரே! என் கால்களை மட்டும் அல்ல; என் கைகளையும், தலையையும் கூடக் கழுவியருளும்” என்றார்.
இயேசு பிரான் சீடர்களை நோக்கி, “குளித்து விட்டவர் கால்களை மட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மையாகி விடுவார். நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள். ஆனால் அனைவரும் தூய்மையாய் இல்லை” என்றார்.

தம்மைக் காட்டிக் கொடுக்கப் போகிறவர் யார்? என்பதை அவர் முன்கூட்டியே அறிந்திருந்தார். எனவேதான் ‘அனைவரும் தூய்மையாய் இல்லை’ என்று கூறினார்.
சீடர்களின் கால்களைக் கழுவிய பிறகு, இயேசு தன் மேல் உடையை அணிந்து கொண்டார். மீண்டும் பந்தியில் அவர் களோடு அமர்ந்தார். பின்னர் சீடர்களைப் பார்த்து, “நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? நீங்கள் என்னைப் போதகர் என்றும், ஆண்டவர் என்றும் அழைக்கிறீர்கள்.
அவ்வாறு அழைப்பது சரிதான். நான் போதகர்தான்; ஆண்டவர்தான். ஆண்டவரும் போதகருமான நான், உங்களுடைய கால்களைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவர் மற்றொருவருடைய கால்களைக் கழுவ கடமைப்பட்டு இருக்கிறீர்கள். நான் செய்தது போல், நீங்களும் செய்ய வேண்டும் என்பதற்காக ‘முன்மாதிரி’ காட்டினேன்” என்றார்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியை உற்றுக் கவனியுங்கள். எவ்வளவு பெரியவராக இருந்தாலும் ‘தாழ்ச்சி’ என்ற பண்பு இருக்க வேண்டும் என்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது. பிறருக்கு ‘முன் மாதிரி’யாகத் திகழ வேண்டும் என்பதையும் இது எடுத்துரைக்கிறது.
இயேசு பிரான் இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் எல்லாவற்றையும் உணர்ந்தவராக இருந்தார். மனிதர்கள் ஏற்று வாழ வேண்டிய நற்பண்புகளை அவர்களின் மனதில் விதைத்தார்.
நாம் இப்படி வாழ்கிறோமா என்பதை ஒருகணம் எண்ணிப் பார்ப்போம். பெற்றோரை மதித்தல், பெற்றோரைக் காத்தல், உற்றார் உறவினர்களை அணைத்தல் போன்றவற்றைக் கைக்கொள்ள வேண்டும்.
‘எல்லோருக்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து’ என்பது திருக்குறள்.

எல்லோருக்கும் பணிவு என்பது இருக்க வேண்டும். செல்வம் பெற்றவர்களுக்கு அந்தப் பணிவு என்பது கூடுதல் தகுதியானது என்பதே இதன் பொருளாகும்.
செல்வம் பெற்றவர்கள் பணிவை மேற்கொள்வது சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, வள்ளுவப் பெருந்தகை இப்படிச் சிந்தித்து இருக்கிறார்.
பணிவு என்பது சிறியவர்களிடம் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். அப்படியல்ல. பெரியவர்கள் அத்தகைய பண்பை விதைக்க வேண்டும் என்ற கருத்து இதன் மூலம் வெளிப்படுகிறது. இறைவன் மனிதனாக இவ்வுலகில் பிறந்தார். நமக்காக வாழ்ந்தார்; நமக்காக மரித்தார் என்பதுதான் கிறிஸ்தவத்தின் அடிப்படை கோட்பாடு ஆகும்.
மனிதனாகப் பிறந்த அவர் துன்பப்படுகிறார்; துயரப்படுகிறார். இறுதியில் சிலுவைத் துன்பத்தை ஏற்கிறார். மனிதர் செய்த பாவத்திற்காகத் தன்னையே தியாகம் செய்கிறார்.
பாதங்களை இயேசு பிரான் கழுவியபோது அதைச் சீடர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இயேசு பிரானை கூடவே இருந்து கவனித்த அவர்கள், பாவமில்லாத ஒருவர், பாவிகளாகிய நம்முடைய பாவங்களைக் கழுவுகிறாரே என்று துன்பப்படுகின்றனர். அனைவருக்குமே அந்த எண்ணம் இருந்திருக்கும். அதில் ஒரு சீடர் மட்டும் துணிவாக இந்த வினாவைத் தொடுக் கிறார். என் கால்களைக் கழுவ விட மாட்டேன் என்று தடுக்கிறார். ‘என்னோடு உனக்குப் பங்கில்லை’ என்று இயேசு பிரான் கூறிய பிறகே அதை ஏற்கிறார். இதன் மூலம் ‘தாழ்ச்சி’ என்ற பண்பை சீடர்கள் மூலமாக உலகத்திற்கு எடுத்துரைக்கிறார்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ஏறக்குறைய 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிலுவையில் உயிர்விட்ட ஏசு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு 3-ம் நாள் உயிர்த்து எழுந்த உயிர்ப்பு நிகழ்ச்சியை ஈஸ்டர் பெருவிழாவாக உலகில் உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர்.
கிறிஸ்தவர்கள் கொண்டாடும் திருவிழாக்களிலேயே மிக முக்கிய திருவிழாவாக ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் ஈஸ்டர் பெருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு நாகை மாவட்டம், வேளாங் கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக பாஸ்கா திருவிழிப்பு சடங்கு நடந்தது.
இதில் ஏசு உயிர்த்தெழுவதை உணர்த்தும் வகையில் “பாஸ்கா ஒளி” ஏற்றப்பட்டது. தொடர்ந்து பாஸ்கா அறிக்கை, இறைவார்த்தை வழிபாடு, நற்கருனை வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 11.50 மணிக்கு மின்னொளி அலங்காரத்துடன் பேராலய கலையரங்கின் மேற்கூரையில் சிலுவை கொடியை கையில் தாங்கியவாறு ஏசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது.
பின்னர் பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதில் பேராலய பங்கு தந்தை சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் ஜோதிநல்லப்பன், ஆரோக்கியசுந்தரம் மற்றும் அருள்சகோதரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் ஈஸ்டர் பெருவிழா பிரார்த்தனைகளில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.
ஆங்காங்கே பெரிய திரைகள் அமைக்கப்பட்டு, பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன. ஈஸ்டர் பெருவிழாவையொட்டி பேராலயத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதைதொடர்ந்து மாலை 6.45 மணிக்கு தேர்பவனியும், 7.45 மணிக்கு திவ்விய நற்கருணை ஆசீரும் நடைபெற்றது.

பிரியமானவர்களே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்! உங்களுக்காக மிகுந்த பாரத்தோடும், ஜெபத்தோடும் இச்செய்தியை எழுதியுள்ளேன்.
‘‘கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்கு பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்’’ (ஏசா.25:4)
பிரியமானவர்களே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்! உங்களுக்காக மிகுந்த பாரத்தோடும், ஜெபத்தோடும் இச்செய்தியை எழுதியுள்ளேன். இச்செய்தி நிச்சயம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும். தற்போது உள்ள உங்கள் சூழ்நிலையை வைத்து ‘கர்த்தர் எங்களோடு இல்லை என்றும், எனக்கு அவர் அற்புதங்களைச் செய்ய மாட்டார் என்றும் சோர்வான வார்த்தையைக் கூறாமல் எந்தவித பாதகமான சூழ்நிலையையும் அவர் எனக்காக சாதகமாக மாற்றுவார்’ என்ற விசுவாச எண்ணத்தோடு இச்செய்தியை வாசியுங்கள்.
‘‘மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும், அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம்பண்ண வந்தார்கள். சிலர் வந்து, யோசபாத்தை நோக்கி: உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் கடலுக்கு அக்கரையிலிருக்கிற சீரியாவிலிருந்து வருகிறார்கள். இதோ, அவர்கள் எங்கேதியாகிய ஆசாசோன் தாமாரில் இருக்கிறார்கள் என்று அறிவித்தார்கள்.’’ மிமி .நாளா.20:1,2
எனக்கன்பானவர்களே, உங்களைச் சுற்றிலும் பலவிதமான சத்ருக்கள் சூழ்ந்திருக்கலாம். இவ்வுலகத்தின் அதிபதியான சாத்தான் நீங்கள் சந்தோஷமாய் இருக்காதபடி பலவிதமான போராட்டங்களைக் கொண்டு வந்து உங்களை வேதனைப்படுத்திக் கொண்டிருக்கலாம். எல்லா சத்ருக்களின் வல்லமையைக் காட்டிலும் மாபெரும் பலத்த வல்லமை நம் ஆண்டவரிடத்தில் உள்ளது என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது.
நம்மில் அநேகர் கூறுவது தங்கள் வீட்டாரே எனக்கு சத்ருக்களாக இருக்கிறார்கள் என்றும், சிலருடைய அலுவலகத்தில் உள்ள உடன் வேலையாட்கள் சத்ருக்களாய் செயல்படுகிறார் கள் என்றும் மற்றும் தங்களுக்கு அருகாமையில் உள்ளவர்களாலும் உறவினர்கள் மூலமாகவும் சத்ருக்கள் கிரியை செய்கிறார்கள் என்றும் கூறுவதை அடிக்கடி கேட்டிருக்கிறேன்.
எனக்கன்பானவர்களே! ‘சத்ருக்கள் மத்தியில் தான் ஒரு பந்தி எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது’ என்று தாவீது கூறினது எத்தனை உண்மை. மேலும், உங்களுக்கு விரோதமாய் பில்லி சூனிய கட்டுகள் மற்றும் மந்திரவாதங்கள் மூலமாய் பிசாசுகளை ஏவி விட்டாலும், பிசாசின் கிரியைகளை அழிக்கும்படி வெளிப்பட்ட இயேசு ராஜா இன்றைக்கும் சர்வ வல்லமையோடு இருக்கிறார் என்பதை மறந்து போகாதீர்கள்.
‘‘அப்பொழுது யோசபாத் பயந்து, கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான்.’’ மிமி . நாளா. 20:3
ஆம், பிரியமானவர்களே! நம்முடைய கர்த்தர் நம்மை விடுவிக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதே வேளையில் ஒருமனப்பட்டு தேவனைத்தேட குடும்பமாய் அர்ப்பணியுங்கள். ஒருமனப்படும்போது அங்கு தேவன் இறங்கி வருவதற்கு எவ்வித தடையும் இல்லை. அவ்வாறே உபவாச நாளை நியமிக்கவும் மறவாதீர்கள்.

உபவாச ஜெபத்திற்கு மிஞ்சினது ஒன்றுமில்லை. பிசாசின் கிரியைகளை அழிப்பது உபவாச ஜெபம். ஆகவே உபவாசத்தோடு தேவனைத் தேடுங்கள். எல்லாவற்றிலும் மேலாக உங்கள் ஜெபம் மிகவும் முக்கியம். உங்களுக்கு ஜெபிக்கத் தெரியுமென்றாலும் எந்த சூழ்நிலையில் எந்த வார்த்தைகளைக் கூறி ஜெபிக்க வேண்டும் என்பது முக்கியம். இதற்கு உறுதுணையாய் இருப்பவர் நம்முடைய ஆவியானவரே. சத்ருக்களின் பிடியிலிருந்து யோசபாத் ராஜா தேவனை நோக்கி ஜெபித்த ஜெபத்தை பின்வரும் வசனங்களில் வாசித்துப் பாருங்கள்.
‘‘எங்கள் தேவனாகிய நீர் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முன்பாக இந்தத் தேசத்துக் குடிகளைத் துரத்திவிட்டு இதை உம்முடைய சிநேகிதனாகிய ஆபிரகாமுடைய சந்ததிக்கு என்றைக்குமென்று கொடுக்கவில்லையா?
எங்கள் தேவனே, அவர்களை நீர் நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை. நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக் கொண்டிருக்கிறது என்றான்.’’ மிமி .நாளா.20:7,12
மேற்கண்ட வசனத்தில் தேவன் அருளின வாக்குத் தத்தத்தைப் பிடித்து யோசபாத் ஜெபித்தான். மேலும், தேவனின் மூலமாய் விடுதலை பெற நம்முடைய பெலவீனங்களை முற்றிலுமாய் அறிக்கையிட்டு நம் கர்த்தர் நமக்கு அற்புதங்களைச் செய்கிற வரைக்கும் யோசபாத்தைப் போல நம்முடைய கண்களை கர்த்தர் மேல் பதிக்க வேண்டும். இவ்வாறு நம்முடைய சகல பெவீனங்களை தேவ சமூகத்தில் அறிக்கையிட்டு நீங்கள் ஜெபிக்கும்போது எந்த வித சத்ருவின் போராட்டமாக இருந்தாலும் எல்லாவற்றிலுமிருந்து கர்த்தர் உங்களை விடுவிக்க வல்லவராயிருக்கிறார்.
இப்போதுள்ள சூழ்நிலையை நீங்கள் முற்றிலுமாய் மறந்து உங்களுக்காக ஒரு புதிய பாதையைத் திறப்பார் என்பதில் மன உறுதியாயிருங்கள். சத்ருக்களுக்கு விரோதமாய் யோசபாத் ஏறெடுத்த ஜெபத்தின் வலிமையால் நடந்தது என்ன என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
மிமி.நாளா.20-ம் அதிகாரம் 22 சொல்லுகிறது, யோசபாத் ராஜாவிற்கு விரோதமாய் வந்த அம்மோன் புத்திரர், மோவாபியர், சேயீர் மலைத் தேசத்தார் ஆகியோரை ஒருவருக்கும் விரோதமாய் ஒருவரை கர்த்தர் எழும்பப் பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.
இதைப்போல உங்கள் வாழ்விலும் நீங்கள் உங்கள் சொந்த பெலத்தினால் யுத்தம் பண்ணாதபடி தேவனே உங்களுக்காக யுத்தம் பண்ணும்படி நிச்சயம் உங்களுக்கு உதவி செய்வார். இப்போதிருக்கிற சகல சூழ்நிலைகளையும் முற்றிலுமாய் மாற்றி புதிய சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நிச்சயம் கொடுப்பார். உங்கள் சூழ்நிலைகள் மாறும்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட மூன்றாம் நாளில், மீண்டும் உயிரோடு வந்ததை நினைவுகூரும் ஈஸ்டர் பெருவிழாவை உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் நாளை (16-ந்தேதி) கொண டாடுகின்றனர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட மூன்றாம் நாளில், மீண்டும் உயிரோடு வந்ததை நினைவுகூரும் ஈஸ்டர் பெருவிழாவை உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் நாளை (16-ந்தேதி) கொண டாடுகின்றனர். இயேசுவின் உயிர்த்தெழுதல் குறித்து பைபிள் தரும் நிகழ்வுகளை இங்கு காண்போம்.
இந்த உலகில் இறையரசை நிறுவும் நோக்கத்துடன் மனித உரிமையை நிலைநாட்ட குரல் கொடுத்த இறைமகன் இயேசுவை, ரோமானியரின் உதவியுடன் யூத சமய குருக்கள் சிலுவையில் அறைந்து கொன்றனர். உண்மையையும், உரிமைக்குரலையும் கொன்று புதைத்து விட்டதாக பெருமைப்பட்ட அவர்களால், ஒரு நாள் கூட நிம்மதியாக உறங்க முடியவில்லை. கல்லறையில் அடக்கப்பட்ட இயேசு மீண்டும் உயிரோடு வந்து விடுவாரோ என்ற பயம் அவர்களைத் தொற்றிக் கொண்டது.
இயேசு சிலுவையில் இறந்த வேளையில், எருசலேம் கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை, இரண்டாக கிழிந்தது யூத குருக்களின் மனதில் ஒரு திகிலை ஏற்படுத்தி இருந்தது. கடவுளையும் மனிதரையும் பிரித்துக் கொண்டிருந்த அந்த திரை கிழிந்தது, இயேசு இறைமகனாக இருப்பாரோ என்ற எண்ணத்தை அவர்கள் உள்ளத்தில் விதைத்தது. அவராக உயிர்த்தெழுந்து வரவில்லை என்றாலும், அவரது சீடர்களே உடலை மறைத்து வைத்துவிட்டு வதந்தியைப் பரப்பலாம் என்ற சந்தேகம் அவர்களுக்கு.
சனிக்கிழமை காலை ஆலோசனை நடத்திய யூத சமயத் தலைவர்கள்,இயேசுவின் கல்லறைக்கு முத்திரையிட்டு, காவல் வீரர்களைக் கொண்டு அதை கவனமாக காவல் காக்க ஏற்பாடு செய்தார்கள். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மின்னல் வடிவில் வந்த வானதூதர் இயேசுவின் கல்லறையைத் திறந்தார். இடி சத்தத்தில் மயங்கி விழுந்த காவல் வீரர்கள் எழுந்து பார்த்தபோது, கல்லறைக்குள் இயேசுவின் உடலை காணவில்லை. யூத சமயத் தலைவர்களுக்கும் இந்த தகவல் சென்றது. ஆனால் அவர்கள், இயேசுவின் உடல் திருடப்பட்டதாக வதந்தியைக் கிளப்பி விட்டனர்.
மறுபக்கம் இயேசுவின் உடலுக்கு நறுமணப் பொருட்கள் தடவி மரியாதை செலுத்த வந்த பெண் சீடர்கள், கல்லறையை மூடியிருந்த கல் அகற்றப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்களுக்கு தோன்றிய வானதூதர்கள், இயேசு மரணத்தை வென்று உயிர்த்தெழுந்து விட்டதாக அறிவித்தனர். இந்த செய்தியை அப்பெண்கள் இயேசுவின் மற்ற சீடர்களிடம் கூறியபோது அவர்கள் நம்பவில்லை. அவ்வேளையில் கல்லறை அருகில் நின்று அழுது கொண்டிருந்த மகதலேன் மரியாவுக்கு இயேசு காட்சி அளித்து, தாம் உயிரோடு இருப்பதை உறுதி செய்தார். இந்த நிகழ்வை,
“ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்,
எழுந்து யிர்த்தனன் நாள்ஒரு மூன்றில்;
நேசமா மரியாமக்த லேநா
நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள்”
என்று மகாகவி சுப்ரமணிய பாரதியார் பாடியுள்ளார்.

இதையடுத்து, யூத சமயத் தலைவர்களுக்கு பயந்து, பூட்டிய அறைக்குள் தஞ்சம் அடைந்து கிடந்த சீடர்களுக்கு முன்பும் இயேசு தோன்றினார். சிலுவையில் அறையப்பட்டதால், தமது கைகளிலும் கால்களிலும் விலாவிலும் ஏற்பட்ட காயங்களை அவர்களுக்கு காட்டினார். இதனால் அவர் உயிர்த்து எழுந்தது உண்மை என்பதை சீடர்கள் உணர்ந்து கொண்டனர். அவர்களுக்கு நாற்பது நாட்களாக பலமுறை காட்சி அளித்த இயேசு, அவர்களோடு பந்தியில் அமர்ந்து உணவு உண்டதாகவும், தமது நற்செய்தியை அறிவிக்க அவர்களைத் தயார் செய்ததாகவும் பைபிள் கூறுகிறது.
உயிர்த்தெழுந்த நாற்பதாம் நாளில் ஒலிவ மலைக்கு சீடர்களை அழைத்து சென்ற இயேசு, உலகெங்கும் சென்று தம்மைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க கட்டளையிட்டார். அவரை கடவுளாக நம்புவோருக்கு, தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் ஞானஸ்நானம் வழங்குமாறும் ஆணையிட்டார். உலகம் முடியும் வரை தமது சீடர்களோடு இருப்பதாக வாக்களித்த இயேசு, அவர்கள் கண் முன்பாகவே விண்ணகத்திற்கு ஏறி சென்றார். அப்போது அவர்களுக்கு தோன்றிய வானதூதர்கள், உலகின் முடிவில் மக்களுக்கு தீர்ப்பு வழங்கும் நீதியுள்ள அரசராக இயேசு மீண்டும் வருவார் என்று கூறி மறைந்தனர்.
எருசலேமுக்கு திரும்பிய சீடர்கள், இயேசு கிறிஸ்து விண்ணகத்தில் இருந்து வந்த இறைமகன் என்றும், மரணத்தை வெற்றி கொண்ட ஆண்டவர் என்றும் மக்களிடம் போதித்தனர். சீடர்களின் வார்த்தைகளைக் கேட்ட யூதர்கள் பலரும் இயேசுவை கடவுளாகவும், தங்கள் மீட்பராகவும் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் அனைவரும், நட்புறவுடன் வாழ்வதிலும், உடைமைகளை பொதுவாக கொண்டு பிறரது துயர் துடைப்பதிலும் ஆர்வமாக செயல்பட்டனர். சீடர்கள் வழியாக ஆண்டவர் இயேசு பல்வேறு அற்புதங்களை செய்தார். இதனால், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது.
இந்த வேகமான வளர்ச்சி யூத சமயத் தலைவர்களின் கண்களை உறுத்தியது. சீடர்களை பிடித்து, அடித்து உதைத்த அவர்கள், உயிர்த்த இயேசுவின் பெயரால் போதிக்கக்கூடாது என்று கட்டளையிட்டனர். அப்போதும், யூத குருக்களால் இயேசு உயிர்த்தெழவில்லை என உறுதியாக கூற முடியவில்லை. பலவித துன்பங்களை சந்தித்தாலும், இயேசுவுக்கு சான்று பகர்வதை சீடர்கள் நிறுத்தவில்லை. இயேசுவின் பெயரால் அதிக அளவில் அற்புதங்கள் நிகழ்ந்ததால், பாலஸ்தீன் நாட்டில் இருந்து மற்ற நாடுகளுக்கும் கிறிஸ்தவம் விரைந்து பரவியது. இயேசுவின் சீடரான புனித தோமா அந்த காலத்திலேயே தமிழகத்திற்கு வந்து பலரையும் கிறிஸ்தவர்களாக மனந்திருப்பினார்.
இதனிடையே, பாலஸ்தீன் நாட்டில் கிறிஸ்தவ சமயத்தை தீவிரமாக எதிர்த்த சவுல் என்ற இளைஞர், கிறிஸ்தவர்களை அழித்தொழிக்க கொலை வெறியுடன் செயல்பட்டார். இயேசுவை கடவுளாக ஏற்றுக்கொண்ட பலரையும் கைது செய்து சிறையில் அடைக்க செய்தார். ஸ்தேவான் என்ற கிறிஸ்தவரின் கொலைக்கு உடந்தையாக இருந்தார். தாமாஸ்கஸ் நகருக்கு செல்லும் வழியில், திடீரென வானத்தில் இருந்து வீசிய பேரொளியால் அவர் குதிரையுடன் தடுமாறி விழுந்தார்.
அப்போது, “சவுலே, சவுலே ஏன் என்னை துன்புறுத்துகிறாய்?” என்ற குரல் ஒலித்தது. “ஆண்டவரே நீர் யார்?” என்று திருப்பிக் கேட்டார் சவுல். “நீ துன்புறுத்தும் இயேசு நான்தான்” என பதில் வந்தது. அத்துடன் கிறிஸ்தவர்கள் மீதான அவரது கொலைவெறி அடங்கியது. பவுல் என்ற பெயருடன் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று, “இயேசுவே ஆண்டவர்” என்று போதித்தார்.

ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்த காரணத்தாலே, கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்கு பின் என்று உலக வரலாறு பிரிக்கப்பட்டுள்ளது. நரபலி உள்ளிட்ட கொடூரங்கள் கிறிஸ்தவ சமயத்தின் பரவல் காரணமாகவே முடிவுக்கு வந்தன. உலகெங்கும் அடிமை முறை ஒழிந்ததற்கும், ஆண் - பெண் சமத்துவம் ஏற்படவும், தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை கேட்டு பெறவும் கிறிஸ்தவ போதனைகளே வித்திட்டன. இவ்வாறு, இயேசுவின் உயிர்ப்பு இந்த உலகில் கொண்டு வந்த மாற்றங்கள் ஏராளம். இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்போர் அனைவருக்கும் மாற்றமும், புதுவாழ்வும் கிடைப்பது உறுதி என்று பைபிள் கூறுகிறது. அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்!
தமிழகத்திற்கு வந்த இயேசுவின் சீடர் :
உயிர்த்த இயேசு முதல் முறை தம் சீடர்களுக்கு தோன்றியபோது, பன்னி ருவரில் ஒருவரான தாமஸ் அங்கு இல்லை. “ஆண்டவரை கண்டோம்“ என்று மற்ற சீடர்கள் கூறியபோது, “அவ ருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும் பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட் டாலன்றி நான் நம்பமாட்டேன்” என்று தாமஸ் பதில் கூறினார். ஒரு வாரத்துக்கு பிறகு, தாமசும் இருந்தபோது இயேசு தம் சீடர்கள் முன்பு தோன்றினார்.
அப்போது அவர் தாமஸைப் பார்த்து, “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. சந்தேகப்படாமல் நம்பிக்கைகொள்” என்றார். உடனே தாமஸ் இயேசுவைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்று கூறி அவரை பணிந்து வணங்கினார். இயேசு அவரிடம், “நீ என் னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார். இந்த நிகழ்வு இயேசுவின் உயிர்ப் புக்கு உறுதியான சான்றாக அமைந்தது.
அப்போது தாமஸ் பெற்ற நம்பிக்கையே, பல ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து இந்தியாவுக்கு வந்து இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும் ஆர்வத்தை அவருக்கு வழங்கியது. கி.பி.52ல் கேரளாவுக்கு வந்திறங்கி ஏராளமான மக்களை மந்திருப்பிய தாமஸ், ஏழு இடங்களில் திருச்சபையை நிறுவினார். பின்னர் தமிழகத்தின் பல இடங்களில் இயேசுவைப் பற்றி போதித்த தாமஸ், இறுதியாக சென்னைக்கு வந்ததாக வரலாறு கூறுகிறது. சைதாப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் நற்செய்தி அறிவித்த தாமஸ், இங்குள்ள பலரையும் இயேசுவை கடவுளாக ஏற்கச் செய்ததாக அறிகிறோம்.
கி.பி.72ல் செயின்ட் தாமஸ் மவுன்டில் செபம் செய்து கொண்டிருந்த அவரை, கிறிஸ்தவத்தின் எதிரிகள் சிலர் ஈட்டியால் குத்தி கொலை செய்தனர். தாமஸின் உடல், சாந்தோம் பேராலயம் உள்ள இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள அவரது கல்லறையை தரிசிக்க உலகம் முழுவதும் இருந்து கிறிஸ்தவர்கள் வருகின்றனர். இயேசுவின் சீடர்களை அவருக்காக உயிரைக் கொடுக்கும் அள வுக்கு தூண்டியது அவரது உயிர்த் தெழுதலே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
-டே.ஆக்னல் ஜோஸ்.

ஆண்டவர் ஏசுவின் வழியில் உலக மீட்புக்கான சிலுவையை சுமக்க வேண்டும். அங்கு பிறர் அன்பு, மன்னிப்பு, அமைதி மற்றும் தாழ்ச்சி நம்முடன் நடைபோட வேண்டும்.
ஆண்டவர் ஏசு தன்னை பின்பற்ற விரும்புகிறவர்களுக்கு ஒரு நிபந்தனையை வைக்கிறார். சீடராய் வாழ விரும்புகிறவர் தன்னலம் துறக்க வேண்டும், சிலுவையை சுமக்க வேண்டும். அவர் அனைவரையும் நோக்கி, “ என்னை பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு என்னை பின்பற்றட்டும்“ (லூக் 9:23) இன்று சிலுவை என்பது நமக்கு மீட்பின் சின்னம், வாழ்வின் பாதை, ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டவர் ஏசு கூறியபோது, அது அவமானத்தின் சின்னம். சிலுவை என்று அவர் கூறியவுடன் அவர்கள் எண்ணத்தில் மரண வலிகளுடன் கூடிய சாவு, பொது வெளியில் நிர்வாணமாக்கப்பட்டு நடத்தப்படுதல், மற்றும் அவமானங்களும் தான் நினைவுக்கு வந்திருக்க முடியும்.
யாரும் விரும்பக்கூடிய ஒரு அடையாளம் அல்ல. அவர்களால் நம்மைப்போல் ஒரு ஆன்மிக பார்வையில் சிலுவையை பார்த்திருக்க முடியாது. அவர்களை பொறுத்தவரை சிலுவை ரோமானியர்கள் அடிமைப்படுத்திய நாட்டு மக்களை அடக்க பயன்படுத்திய ஒரு அடக்குமுறை கருவி. ஆதிக்க சமூகத்தின் ஆணவத்தை காட்டும் கருவி, ஒரு கொடூரனின் கையில் இருந்த கொடிய ஆயுதம்.

சிலுவை என்றாலே சாட்டையடி, சுத்தில், ஆணி மற்றும் தொங்கவிடப்படுகின்ற மரம் தான் நினைவுக்கு வந்திருக்க முடியும். அதைதான் ஆண்டவர் தன்னுடைய சீடர்களுக்கு நிபந்தனையாய் வைக்கிறார். அது ஒரு பயங்கரமான நிபந்தனை. ஆணவத்தை, கயமையை, அநியாயத்தை, சுயநலத்தை வெளிப்படுத்தும் கருவியாக இருந்த அந்த சிலுவையில் அவற்றை எல்லாம் அறைந்துவிட்டு தாழ்ச்சியுடன் என்னை பின்பற்றுங்கள் என்கிறார்.
இன்று நம்முடைய வாழ்க்கை நம்முடைய ஆணவம், நம்முடைய தேவைகள், நம்முடைய திட்டம் மற்றும் நம்முடைய விருப்பு வெறுப்புகளை சுற்றியே சுழன்று கொண்டுள்ளது. அவைகளை சிலுவையில் அறையவேண்டும். ஆண்டவர் ஏசுவின் வழியில் உலக மீட்புக்கான சிலுவையை சுமக்க வேண்டும். அங்கு பிறர் அன்பு, மன்னிப்பு, அமைதி மற்றும் தாழ்ச்சி நம்முடன் நடைபோட வேண்டும். அதுதான் ஏசுவின் சீடராய் இருப்பதன் பெருமை.
- அருட்தந்தை தேவதாஸ், கும்பகோணம்.

வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ஏசுகிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட நாளை புனித வெள்ளி என்றும் பெரிய வெள்ளி என்றும் அழைக்கின்றனர். இந்த நாளை கிறிஸ்தவர்கள் துக்க நாளாக கடைப்பிடிக்கிறார்கள். அதன்படி நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்திப்பெற்ற புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் நேற்று புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றன.
இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். புனித வெள்ளியையொட்டி நேற்று மாலை பேராலயத்தின் அருகே உள்ள கலையரங்கத்தில் சிலுவையில் அறையப்பட்ட ஏசுவின் சிலை வைக்கப்பட்டு இருந்தது.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெற்ற புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்ட பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.
கலையரங்கத்தில் இறைவார்த்தை வழிபாடு, பொது மன்றாட்டுக்கள் நடைபெற்றன. இதையடுத்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அப்போது பேராலய அதிபர் பிரபாகர் மற்றும் பங்குதந்தைகள் சிலுவையில் உள்ள ஏசுவின் பாதத்தில் முத்தமிட்டனர். பின்னர் ஏசுவின் சிலை பேராலயத்தை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அப்போது பேராலயத்தில் கூடியிருந்த பக்தர்கள் ஏசு சிலையின் பாதத்தில் முத்தமிட்டனர்.
பின்னர் ஏசுவின் சிலை சிலுவையில் இருந்து இறக்கப்பட்டு பவனியாக எடுத்துச்செல்லப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேராலய பங்கு தந்தை சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பாராஜரத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் ஜோதிநல்லப்பன், ஆரோக்கியசுந்தரம் மற்றும் அருட்சகோதரர்கள், அருள்சகோதரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.