search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இறுதிபோட்டியில் 3 முறை சேசிங்கில் தோல்வி.. வரலாற்றை மாற்றுமா ஆர்சிபி மகளிர் அணி
    X

    இறுதிபோட்டியில் 3 முறை சேசிங்கில் தோல்வி.. வரலாற்றை மாற்றுமா ஆர்சிபி மகளிர் அணி

    • ஆண்கள் ஆர்சிபி அணி மூன்று முறை இறுதிபோட்டிக்கு முன்னேறியது.
    • அந்த மூன்று முறையும் சேசிங்கில் தோல்வியை தழுவியது.

    புதுடெல்லி:

    2-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. 5 அணிகள் இடையிலான இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோதின. லீக் சுற்று முடிவில் முதலிடத்தை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    உ.பி.வாரியர்ஸ் (6 புள்ளி) 4-வது இடமும், குஜராத் ஜெயன்ட்ஸ் (4 புள்ளி) கடைசி இடமும் பிடித்து வெளியேறின.லீக் முடிவில் 3-வது இடத்தை பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெளியேற்றுதல் சுற்றில் 2-வது இடம் பெற்ற நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சை வென்று முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டியது.

    இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணி பேட்டிங் ஆடி வருகிறது.

    இந்நிலையில் ஆர்சிபி-யின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் இறுதிப்போட்டியில் 4-வது முறையாக சேசிங் செய்கிறது. ஆண்கள் ஆர்சிபி அணி மூன்று முறை இறுதிபோட்டிக்கு முன்னேறியது. அந்த மூன்று முறையும் சேசிங்கில் தோல்வியை தழுவியது.

    ஆடவர் ஆர்சிபி அணி 2009 இறுதிபோட்டியில் டெக்கான் ஜார்ஜஸ் அணியுடனும் 2011 சிஎஸ்கே அணியுடனும் 2016 சன்ரைசர்ஸ் அணியுடனும் தோல்வியடைந்தது.

    இந்த இறுதிபோட்டிக்கு தோல்விக்கு மகளிர் ஆர்சிபி அணி முற்றுப்புள்ளி வைக்குமா என ஆர்சிபி ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ஆனால் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நடந்த 4 போட்டிகளிலும் ஆர்சிபி அணி டெல்லியுடன் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×