search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டோனி சிக்சர் அடிக்க வேண்டும் என்பதற்காக பாண்ட்யா பந்து வீசினார்- சுனில் கவாஸ்கர்
    X

    டோனி சிக்சர் அடிக்க வேண்டும் என்பதற்காக பாண்ட்யா பந்து வீசினார்- சுனில் கவாஸ்கர்

    • எங்கே பந்து வீசினால் டோனி சிக்சர் அடிப்பார் என்று தெரிந்து கொண்டு ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டது போல் தெரிந்தது.
    • பாண்ட்யா அவருடைய ஹீரோவின் அரவணைப்பை பெறுவதற்காக வேண்டுமென்றே பந்து வீசியதுபோல் தெரிந்தது.

    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை- சென்னை அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 29-வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 206 ரன்கள் சேர்த்தது.

    19 ஓவரில் சிஎஸ்கே 180 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரை பாண்ட்யா வீசினார். முதல் பந்தில் விக்கெட் கிடைத்தது. அடுத்து வந்த டோனி ஹாட்ரிக் சிக்சர் விளாசினார். இதனால் 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே 206 ரன்கள் குவித்தது. இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் எங்கே பந்து வீசினால் டோனி சிக்சர் அடிப்பார் என்று தெரிந்து கொண்டு ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டது போல் தெரிந்தது என சுனில் கவாஸ்கர் கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது நீண்ட காலத்திற்குப் பின் நான் பார்த்த மோசமான பந்து வீச்சாகும். அது பாண்ட்யா அவருடைய ஹீரோவின் அரவணைப்பை பெறுவதற்காக வேண்டுமென்றே பந்து வீசியதுபோல் தெரிந்தது.

    எங்கே பந்து வீசினால் டோனி சிக்சர் அடிப்பார் என்று தெரிந்து கொண்டு ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டது போல் தெரிந்தது. ஒரு சிக்சர் அடிக்கவிட்டால் பரவாயில்லை ஆனால் தொடர்ந்து லென்த் பாலாக வீசி டோனி சிக்ஸர் அடிப்பதற்கு ஏற்ற வகையில் ஹர்திக் பாண்டியா பந்து வீசி இருக்கிறார். மூன்றாவது பந்து, அதைவிட மோசம். லெக்சைடில் பந்து ஃபுல் டாஸ் ஆக வந்தது.

    அதை டோனி எளிதாக சிக்சருக்கு விரட்டினார். இது நிச்சயம் ஒரு மோசமான பந்துவீச்சு. ஒரு மோசமான கேப்டன்சி. என்னை கேட்டால் ருதுராஜ், ஷிவம் துபேவின் அதிரடிக்கு பின்பு சென்னை அணியை 185 - 190 ரன்களுக்குள் மும்பை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

    சுனில் கவாஸ்கரின் இந்த கருத்து பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது.

    Next Story
    ×