search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு டிப்ஸ் கொடுத்த முன்னாள் பாகிஸ்தான் வீரர்
    X

    இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு டிப்ஸ் கொடுத்த முன்னாள் பாகிஸ்தான் வீரர்

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோத உள்ளன.
    • கூடுதல் பவுன்சை தான் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விரும்புவார்கள்.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோத உள்ளன.

    இந்நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் சில டிப்ஸ்களை வழங்கியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். புதிய பந்தை அப்படியே கொண்டு செல்லக்கூடாது. முதல் 10 முதல் 15 ஓவர்களுக்கு பந்து அதிகளவில் ஸ்விங் ஆகும். அந்த குறிப்பிட்ட ஓவர்களில் கூடுதல் ரன்களை கொடுக்க வேண்டாம். அதேபோன்று பந்து கூடுதலாக பவுன்ஸ் ஆனால் மகிழ்ச்சி அடைய வேண்டாம். அமைதியாக இருங்கள்.

    ஏனெனில் கூடுதல் பவுன்சை தான் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விரும்புவார்கள். இந்த மைதானத்தின் தன்மை எப்போதுமே ஆசிய நாடுகளுக்கு சாதகமாகவே இருக்கும். ஆனால் இந்த மைதானத்தில் ஆகஸ்ட் மாதம் அல்லது செப்டம்பர் மாதம் தான் அந்த சூழல் ஏற்படும். ஆனால் நாம் ஜூன் மாதத்திலேயே இங்கு வந்துள்ளதால் மைதானத்தின் தட்பவெட்பமும் சரி, சூழலும் சரி வித்தியாசமாக இருக்கும்.

    எனவே பந்து ஸ்விங் மற்றும் பவுன்ஸ் ஆனால் மகிழ்ச்சி அடையாமல் விக்கெட்டை எடுக்கும் கட்டுக்கோப்புடன் தொடர்ச்சியாக பந்துவீச வேண்டும். எந்த ஒரு இடத்திலும் கவனக் குறைவு ஏற்படாமல் வெற்றி முனைப்புடன் பந்துவீச வேண்டும்.

    என வாசிம் அக்ரம் கூறினார்.

    Next Story
    ×