search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி: இறுதி நாளில் வெற்றி பெறுவது விதர்பாவா, மும்பையா?
    X

    ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி: இறுதி நாளில் வெற்றி பெறுவது விதர்பாவா, மும்பையா?

    • விதர்பா முதல் இன்னிங்சில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • 4-வது நாள் முடிவில் விதர்பா 2வது இன்னிங்சில் 248 ரன்கள் எடுத்துள்ளது.

    மும்பை:

    ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்துவருகிறது. இதில் மும்பை, விதர்பா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற விதர்பா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய மும்பை முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் ஷர்துல் தாகூர் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 75 ரன்னில் ஆட்டமிழந்தார். பிரித்வி ஷா 46 ரன்னும், லால்வாணி 37 ரன்னும் எடுத்தனர்.

    விதர்பா சார்பில் யாஷ் தாகூர், ஹர்ஷ் துபே தலா 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய விதர்பா அணி முதல் இன்னிங்சில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக யாஷ் ரத்தோட் 27 ரன்கள் எடுத்தார்.

    மும்பை சார்பில் தவால் குல்கர்னி, தனுஷ் கோட்யான், ஷாம்ஸ் முலானி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    119 ரன்கள் முன்னிலை பெற்ற மும்பை அணி 2வது இன்னிங்சில் 418 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முஷீர் கான் 136 ரன்னும், ஷ்ரேயஸ் அய்யர் 95 ரன்னும், ரகானே 73 ரன்னும், ஷம்ஸ் முலானி 50 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    விதர்பா சார்பில் ஹர்ஷ் துபே 5 விக்கெட்டும், யாஷ் தாகூர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 538 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விதர்பா அணி களமிறங்கியது. 4வது நாள் ஆட்டத்தில் விதர்பா அணி நிதானமாக ஆடியது.

    அதர்வா டைட் 32 ரன்னும், துருவ் ஷோரே 28 ரன்னும், அமன் மொகாடே 32 ரன்னும், யாஷ் ரதோட் 7 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    5வது விக்கெட்டுக்கு கருண் நாயருடன், அக்ஷய் வடேகர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. 90 ரன்கள் சேர்த்த நிலையில் கருண் நாயர் 74 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து ஆடிய வடேகர் அரை சதமடித்தார்.

    நான்காம் நாள் முடிவில் விதர்பா 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்துள்ளது. வடேகர் 56 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    கடைசி நாளான நாளை 290 ரன்களை எடுத்து விதர்பா வெற்றி பெறுமா அல்லது மீதமுள்ள 5 விக்கெட்டுகளை எடுத்து மும்பை அணி வெற்றி பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    Next Story
    ×