search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சையத் முஷ்டாக் அலி டிராபி: ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்கள்- பிசிசிஐ
    X

    சையத் முஷ்டாக் அலி டிராபி: ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்கள்- பிசிசிஐ

    • இதற்கு முன்பாக ஒரு ஓவருக்கு ஒரு ஷாட்பால் தான் வீச வேண்டும் என்ற நிலை இருந்தது.
    • ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பவும் பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

    மும்பை:

    சையத் முஷ்டாக் அலி டிராபியில் பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு இரண்டு பவுன்சர்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ இன்று அறிவித்தது.

    அபெக்ஸ் கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் இதுவும் ஒன்று. இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நடப்பாண்டு முதல் சையது அலி முஸ்தாக் டி20 தொடரில் ஒரு ஓவருக்கு இரண்டு ஷாட் பாலை வீச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சையது முஸ்தாக் அலி தொடரில் பேட்டிற்கும் பந்திற்கும் சரிசமமான நிலையை இந்த ஷாட் பால் உருவாக்கும். பேட்ஸ்மேன் நன்றாக அடித்துக் கொண்டு இருந்தால் இனி பவுலர்கள் இரண்டு ஷாட் பாலை வீசி அவர்களை கட்டுப்படுத்தலாம்.

    இதற்கு முன்பாக ஒரு ஓவருக்கு ஒரு ஷாட்பால் தான் வீச வேண்டும் என்ற நிலை இருந்தது. இதேபோன்று சையது அலி முஸ்தாக் தொடரை அக்டோபர் 16ஆம் தேதி நடத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன் பிறகு விஜய் ஹசாரே கோப்பையை பிசிசிஐ நடத்தும். இதேபோன்று இந்தக் கூட்டத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பவும் பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

    மேலும் வரும் உலகக் கோப்பை தொடருக்கு மைதானங்களை புனரமைக்க இந்த கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக இரண்டு மைதானங்களில் நிலையை மாற்றவும் உலகக்கோப்பை தொடர் முடிந்த பிறகு அனைத்து மைதானங்களையும் நவீனப்படுத்தவும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் வீரர்கள் வெளிநாட்டு டி20 தொடரில் பங்கேற்கவும் சில விதிமுறைகள் வகுக்கப்பட உள்ளது.

    Next Story
    ×