என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
டோனி மேலும் 2 ஆண்டு விளையாடுவார்- ஹஸ்சி நம்பிக்கை
- முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாட டோனியை போன்று வேறு யாரும் இல்லை.
- காயத்தில் இருந்து மீண்டு வந்து இருப்பதால் தான் இறுதியில் பேட்டிங் செய்ய வருகிறார்.
பெங்களூரு:
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான மைக் ஹஸ்சி அளித்த ஒரு பேட்டியில், 'டோனி தொடர்ந்து விளையாடுவார் என்று நாங்கள் நம்புகிறோம்.
அவர் தற்போதும் நன்றாக பேட்டிங் செய்து வருகிறார். பயிற்சி முகாமுக்கு முன்னதாகவே வந்து நிறைய பந்துகளை எதிர்கொண்டு தயாராகிறார்.
கடந்த ஐ.பி.எல். தொடருக்கு பிறகு அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து இருப்பதால் அவரது பணிச் சுமையை சரியாக நிர்வகிக்க வேண்டும். அவர் நடப்பு தொடரில் தொடக்கத்தில் இருந்து உடல் தகுதியை சரியாக கவனித்து விளையாடி வருகிறார்.
காயத்தில் இருந்து மீண்டு வந்து இருப்பதால் தான் அவர் இறுதி கட்டத்தில் பேட்டிங் செய்ய வருகிறார். முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாட டோனியை போன்று வேறு யாரும் இல்லை என்று நினைக்கிறேன். அவர் தனித்திறமை மிக்க வீரர். அவர் அடுத்த இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து விளையாடுவார் என்று நம்புகிறேன்.
ஆனால் நாம் அதனை காத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இந்த விஷயத்தில் அவர் மட்டுமே முடிவு எடுக்க முடியும். இது குறித்து அவர் உடனடியாக முடிவு எடுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை' என்று தெரிவித்தார்.