என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
மஹ்மதுல்லா அதிரடி சதம்.. தென் ஆப்பிரிக்காவிடம் போராடி தோற்ற வங்காளதேசம்
- வங்காளதேசம் அணி சார்பில் மஹ்மதுல்லா சிறப்பாகி விளையாடி சதம் அடித்தார்.
- தென் ஆப்பிரிக்கா சார்பில் கோட்ஸி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் ஹென்ரிக்ஸ் 12 ரன்களை எடுத்த போது அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இவரைத் தொடர்ந்து வந்த டுசென் 1 ரன்னில் நடையை கட்டினார். துவக்க வீரராக களமிறங்கிய டி காக் பொறுமையாக விளையாடி ரன் சேர்த்தார். இவர் 174 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
அதன்படி 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 382 ரன்களை குவித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணியின் டேவிட் மில்லர் 34 ரன்களுடனும், மார்கோ யென்சென் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். வங்காளதேசம் அணி சார்பில் ஹசன் 2 விக்கெட்டுகளையும், மெஹிடி ஹசன் மிராஸ், ஷொரிஃபுல் இஸ்லாம் மற்றும் ஷகிப் அல் ஹாசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய வங்காளதேசம் அணிக்கு ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் சுமாரான துவக்கத்தை கொடுத்தனர். இருவரும் முறையே 12 மற்றும் 22 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நஜ்முல் ஹூசைன் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷகிப் அல் ஹாசன் 1 ரன்னிலும், முஷ்ஃபிகுர் ரஹிம் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மஹ்மதுல்லா சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார். இவருடன் ஆடிய மெஹிடி ஹசன் மிராஸ் 11 ரன்களையும், நசும் அஹமத் 19 ரன்களையும், ஹசன் மஹ்முத் 15 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
கடைசி வரை தென் ஆப்பிரிக்காவுக்கு ஆட்டம் காட்டிய மஹ்மதுல்லா 111 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். 46.4 ஓவர்கள் முடிவில் வங்காளதேசம் அணி 233 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ஜெரால்ட் கோட்ஸி மூன்று விக்கெட்டுகளையும், ரபாடா, யென்சென் மற்றும் லிசாட் வில்லியம்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கேசவ் மகாராஜ் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்