search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டோனி போலவே ரோகித் சர்மாவும் பாராட்டுகுரியவர்- காரணத்துடன் கூறிய சுனில் கவாஸ்கர்
    X

    டோனி போலவே ரோகித் சர்மாவும் பாராட்டுகுரியவர்- காரணத்துடன் கூறிய சுனில் கவாஸ்கர்

    • ரோகித் தலைமையில் மும்பை அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
    • டோனியைப் போல் ரோகித் சர்மாவுக்கு கேப்டன்ஷிப்புக்கான பாராட்டு கிடைப்பதில்லை.

    மும்பை:

    ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியானது, ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை அகமதாபாத்தில் இன்று நடைபெறும் போட்டியில் எதிர்கொள்ள இருக்கிறது. இதில், வெற்றிபெறும் அணி, இறுதிப் போட்டியில் சென்னையுடன் மோதும்.

    இந்நிலையில் டோனியை போல் ரோகித் சர்மாவுக்கும் கேப்டன்ஷிப்புக்கான பாராட்டு கிடைப்பதில்லை என்று கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவாஸ்கர் கூறியதாவது:-

    ஒரு கேப்டனாக ரோகித் சர்மா குறைவாக மதிப்பிடப்படுகிறார். ரோகித் தலைமையில் மும்பை அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. டோனியைப் போல் ரோகித் சர்மாவுக்கும் கேப்டன்ஷிப்புக்கான பாராட்டு கிடைப்பதில்லை. உதாரணத்துக்கு ஒன்றைக் கூறுகிறேன்.

    ரோகித் சர்மா லக்னோவுடனான போட்டியில் ஆகாஷ் மத்வாலை பயன்படுத்தியதன் மூலம் பதோனி- பூரான் இருவரும் ஓரே ஓவரில் தங்கள் விக்கெட்டை இழந்தனர். ஆனால் ரோகித்தின் இந்த முடிவுக்காக அவர் பரவலாக பாராட்டப்படவில்லை. இதையே டோனி சிஎஸ்கே அணிக்காக செய்திருந்தால் டோனி சிறப்பாக திட்டம் போட்டார் என பலரும் பாராட்டி இருப்பார்கள்.

    என்று அவர் கூறினார்.

    Next Story
    ×