என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
அஸ்வின், ஜுரேல் நிதான ஆட்டம்: 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 388/7
- ஜடேஜா 112 ரன்னில் ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் 4 ரன்னில் அவுட்.
- அறிமுக வீரர் ஜுரேல் 31 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோரின் சதங்கள், சர்பராஸ் கான் அரைசதத்தால் இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது. ஜடேஜா 110 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா 112 ரன்னில் ஆட்டம் இழந்தார். குல்தீப் யாதவ் 4 ரன்னில் வெளியேறினார்.
8-வது விக்கெட்டுக்கு ஜுரேல் உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். ஜுரேல் முதலில் திணறினார். அதன்பின் சுதாரித்துக்கொண்டு சிறப்பாக விளையாட தொடங்கினார். அஸ்வின் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்த ஜோடி அரைசதம் ரன்களை கடந்தது.
மேலும், இன்றைய 2-வது நாள் உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இந்தியா தற்போது 7 விக்கெட் இழப்பிற்கு 388 ரன்கள் எடுத்துள்ளது. ஜுரேல் 31 ரன்னுடனும், அஸ்வின் 25 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.