என் மலர்
கிரிக்கெட் (Cricket)

தலைமை பயிற்சியாளர் பதவி.. இன்னும் கையெழுத்தே போடல.. டுவிஸ்ட் வைத்த ராகுல் டிராவிட்..
- ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்புவதாக பி.சி.சி.ஐ. தெரிவித்து இருந்தது.
- எவ்வளவு காலம் வரை நீட்டிக்கப்படும் என்ற தகவல் இல்லை.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இந்திய அணியுடனான தனது பயணத்தை நீட்டிப்பது தொடர்பாக இதுவரை எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என்று தெரிவித்து இருக்கிறார். முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் அவரது குழுவுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்புவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ஆணையம் (பி.சி.சி.ஐ.) தெரிவித்து இருந்தது.
இது தொடர்பாக பி.சி.சி.ஐ. வெளியிட்ட அறிக்கையில், "சமீபத்தில் நடைபெற்று முடிந்த சர்வதேச கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்-க்கான பதவிக்காலம் முடிந்தது. இதையொட்டி ராகுல் டிராவிட் உடன் நடத்தப்பட்ட ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அவருடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க ஒப்புக்கொள்கிறோம்," என்று தெரிவித்து இருந்தது.
எனினும், இந்த அறிக்கையில் ராகுல் டிராவிட் மற்றும் அவரது குழுவுடனான ஒப்பந்தம் எவ்வளவு காலம் வரை நீட்டிக்கப்படும் என்பது தொடர்பாக எந்த தகவலும் இடம்பெறவில்லை.
இந்த நிலையில், இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ராகுல் டிராவிட், "அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, ஆனாலும் நான் இதுவரை எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை. பி.சி.சி.ஐ.-இடம் இருந்து அதிகாரப்பூர்வமாக ஆவணங்கள் வரட்டும்," என்று தெரிவித்து இருக்கிறார்.






