search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஐ.பி.எல். 2023 சீசனில் இருந்து பேட் கம்மின்ஸ் விலகல்
    X

    ஐ.பி.எல். 2023 சீசனில் இருந்து பேட் கம்மின்ஸ் விலகல்

    • ஆஸ்திரேலியாவின் ஒருநாள், டெஸ்ட் அணி கேப்டனாக உள்ளார் கம்மின்ஸ்
    • அடுத்த 12 மாதங்கள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்த இருப்பதால் இந்த முடிவு எடுத்துள்ளார்.

    ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ். இவர் டெஸ்ட், ஒருநாள் அணி கேப்டனாக உள்ளார். தற்போது பிஞ்ச் ஓய்வு கேட்டுள்ளதால் வரவிருக்கும் தொடர்களில் ஒயிட் பால் அணியின் கேப்டன் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.

    டி20 உலகக் கோப்பை முடிந்துள்ள நிலையில், அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் கவனம் செலுத்த முன்னணி அணிகள் தொடங்கிவிட்டன.

    இதற்கிடையில் அடுத்த வருடம் ஐ.பி.எல். தொடருக்கான ஏலம் கேரளாவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன் இன்றுடன் 10 அணிகளும், தாங்கள் தக்கவைத்துக் கொள்ளும், ரிலீஸ் செய்யும் வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும்.

    இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் பேட் கம்மின்ஸ், 2023 ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ''அடுத்த வருட ஐ.பி.எல். தொடரை தவற விடுகிறேன் என்ற கடினமான முடிவை அறிவிக்கிறேன். அடுத்த வருடம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் வர இருக்கிறது. ஆஷஸ் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாட இருப்பதால் அதற்கு போதுமான அளவு ஓய்வு எடுக்க வேண்டியுள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், ''கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எனது சுமை குறித்து புரிந்து கொண்டதற்கு நன்றி. திறமையான வீரர்கள், ஸ்டாஃப்களை கொண்ட அணிக்கு மீண்டும் திரும்புவேன் என்று நம்புகிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    1. ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு எதிராக வருகிற 17-ந்தேதி முதல் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    2. அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டி, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

    3. பிப்ரவரி- மார்ச்சில் இந்தியாவுக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில விளையாடுகிறது.

    4. மார்ச்சில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

    5. ஜூன்-ஜூலையில் இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆஷஸ் தொடரில் விளையாடுகிறது.

    6. அதன்பின் தென்ஆப்பிரிக்கா சென்று ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    7. அதன்பின் இந்தியாவில் மூன்று ஒருநாள், ஐந்து டி20 களில் விளையாடுகிறது.

    8. அதனைத் தொடர்ந்து உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.

    Next Story
    ×