search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    களத்தில் அச்சமின்றி, மகிழ்ச்சியுடன் விளையாட வீரர்களுக்கு அறிவுரை கூறினேன்- சூர்ய குமார் யாதவ்
    X

    களத்தில் அச்சமின்றி, மகிழ்ச்சியுடன் விளையாட வீரர்களுக்கு அறிவுரை கூறினேன்- சூர்ய குமார் யாதவ்

    • இந்திய வீரர்கள் அனைவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
    • களத்தில் அச்சமின்றி, மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும் என்று தெளிவாக இருந்தோம்.

    பெங்களூரு:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்தது.

    ஷ்ரேயாஸ் அய்யர் 37 பந்தில் 53 ரன்னும் ( 5 பவுண்டரி, 2 சிக்சர்), அக்ஷர் படேல் 21 பந்தில் 31 ரன்னும் ( 2 பவுண்டரி, 1 சிக்சர்), ஜிதேஷ் சர்மா 16 பந்தில் 24 ரன்னும் ( 3 பவுண்டரி, 1 சிக்சர்), எடுத்தனர். பென் துவர் ஷிஸ், பெகரன்டார்ப் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பென் மெக்டர்மட் 36 பந்தில் 54 ரன்னும் ( 5 சிக்சர்) டிரெவிஸ் ஹெட் 18 பந்தில் 28 ரன்னும் ( 5 பவுண்டரி, 1 சிக்சர்) கேப்டன் மேத்யூ வேட் 15 பந்தில் 22 ரன்னும் ( 4 பவுண்டரி ) எடுத்தனர். முகேஷ் குமார் 3 விக்கெட்டும், அர்ஸ்தீப் சிங், பிஷ்னோய் தலா 2 , அக் ஷர் படேல் 1 விக்கெட டும் வீழ்த்தினார்கள்.

    இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி யது. ஏற்கனவே முதல், 2-வது மற்றும் 4-வது போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. ஆஸ்திரேலியா 3-வது ஆட்டத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது;-

    இந்த 20 ஓவர் தொடர் சிறப்பான ஒன்றாக அமைந்தது. இந்திய வீரர்கள் அனைவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதேபோல் களத்தில் அச்சமின்றி, மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும் என்று தெளிவாக இருந்தோம்.

    எங்கள் வீரர்களிடம், உங்களுக்கு எது சரியென்று தெரிகிறதோ, அதை செய்து மகிழ்ச்சியுடன் ஆட்டத்தை ஆடுங்கள் என்று கூறினோம். அவர்களும் அதனை தான் செய்தார்கள். அதுதான் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.

    வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தால் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். தீபக் சாஹர் அவசர மருத்துவ பரிசோதனைக்காக சென்றதால் அவர் இடத்தில் அர்ஸ்தீப் சிங்குக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×