search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பெங்களூரு அணிக்கு எதிராக புதிய சாதனை படைத்த பும்ரா
    X

    பெங்களூரு அணிக்கு எதிராக புதிய சாதனை படைத்த பும்ரா

    • பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • மும்பை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 4 ஓவர்களில் 21 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

    மும்பை:

    10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 196 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 53 ரன்களுடன் (23 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 4 ஓவர்களில் 21 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

    இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி அதிரடியாக விளையாடி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 69 ரன்கள் எடுத்தார்.

    இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் பும்ரா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். பெங்களூருவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கபளீகரம் செய்த முதல் பவுலர் என்ற பெருமையை பும்ரா பெற்றார். பும்ரா 21 ரன் வழங்கி 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

    Next Story
    ×