என் மலர்

  கிரிக்கெட்

  சென்னையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை மார்ச் 27ம் தேதி தொடங்கும்
  X

  போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானம்

  சென்னையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை மார்ச் 27ம் தேதி தொடங்கும்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டிக்கெட் விலை ₨1,500 முதல் ₨3,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • சிஎஸ்கே விளையாடும், உள்ளூர் போட்டிகளுக்கு என எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

  சென்னை:

  ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 31ம் தேதி தொடங்க உளள்து. அகமதாபாத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை, நான்கு முறை கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) எதிர்கொள்கிறது. இந்த தொடரில் உள்ளூர், வெளியூர் மைதானங்கள் என மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

  சென்னையில் 7 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 27ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 27ம் தேதி காலை 9.30 மணி முதல் ஆன்லைன் மற்றும் நேரடியாக டிக்கெட் விற்பனை நடைபெறும் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. டிக்கெட் விலை ₨1,500 முதல் ₨3,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  மற்ற போட்டிகளை விட சிஎஸ்கே விளையாடும், உள்ளூர் போட்டிகளுக்கு என எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. சிஎஸ்கே அணியின் முதல் உள்ளூர் ஆட்டம், ஏப்ரல் 3ஆம் தேதி நடக்கிறது.

  சென்னை எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை PAYTM மற்றும் www.insider.in மற்றும் சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள இரண்டு கவுண்டர்களில் முன்பதிவு செய்யலாம்.

  Next Story
  ×