search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டோனியின் நிழலில் இருந்து டுபிளிசிஸ் போல வெளியேறுங்கள்.. ஜடேஜாவுக்கு வலை விரிக்கும் ஆர்சிபி ரசிகர்கள்
    X

    டோனியின் நிழலில் இருந்து டுபிளிசிஸ் போல வெளியேறுங்கள்.. ஜடேஜாவுக்கு வலை விரிக்கும் ஆர்சிபி ரசிகர்கள்

    • டோனி களம் காண வேண்டுமென என்னை வெளியேற சொல்கிறார்கள் என்று ஜடேஜா கூறியிருந்தார்.
    • டோனியின் நிழலில் இருந்து டுபிளிசிஸ், அஸ்வின் போல வெளியேறுங்கள் என சிலர் கருத்து தெரிவித்தனர்.

    சென்னை:

    நடப்பு ஐபிஎல் சீசனில் 53 ஓவர்கள் வீசி 19 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ரவீந்திர ஜடேஜா. ஐபிஎல் கிரிக்கெட்டில் மொத்தம் 151 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். சென்னை அணியின் அனைத்து போட்டியிலும் அவரது பங்கு அதிகமாகவே உள்ளது.

    சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் ஜடேஜாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த சீசனில் சென்னை அணியில் இருந்து ஜடேஜா வெளியேறிவிட்டார் என்ற தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. அதுபோலவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிஎஸ்கே குறித்த புகைப்படம் எல்லாவற்றையும் அவர் நீக்கி இருந்தார். ஒருவழியாக டோனி சமரசம் பேசி சென்னை அணிக்கு மீண்டும் வந்தார் என்றும் கூறப்படுகிறது.

    இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜடேஜா அவ்வப்போது சிஎஸ்கே ரசிகர்களை தனது கருத்துகளால் மறைமுகமாக சாடி வருகிறார்.

    ஒரு பேட்டியில் டோனி களம் காண வேண்டுமென என்னை வெளியேற சொல்கிறார்கள் என்று கூறியிருந்தார். அதன்பிறகு சில நாட்களுக்கும் முன்னர் இன்ஸ்டாவில், உங்கள் கர்மா நிச்சயம் உங்களை தேடி வரும் என்று பதிவிட்டிருந்தார். இன்று அவர்களுக்குத் தெரிகிறது... ஆனால், சில ரசிகர்களுக்கு அது தெரியவில்லை என சர்ச்சைக்கூறிய வகையில் டுவீட் செய்துள்ளார்.

    இப்படிப்பட்ட சூழலில் ஆர்சிபி ரசிகர்கள் ஜடேஜாவை ஆர்சிபி அணிக்கு விளையாட வருமாறு சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சிவாஜி படத்தில் 'நம்ம வீட்டுக்கு வாங்க' என சாலமன் பாப்பையா சொல்வது போல 'ஆர்சிபி-க்கு வருக' என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரசிகர்கள் ஜடேஜாவுக்கு வலை விரிக்கின்றனர்.

    இதில் சில ரசிகர்கள் அப்போ அடுத்த வருஷம் ஜட்டு (ஜடேஜா) ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்றும் மீண்டும் சிஎஸ்கே vs ஜடேஜா என்று கூறினார். மற்றோரு ரசிகர் ஆர்சிபி-க்கு வாங்க ஜட்டு. ஆர்சிபி-க்கு வாங்க. சேர்ந்தே தோற்போம்.

    டோனியின் நிழலில் இருந்து டுபிளிசிஸ், அஸ்வின் போல வெளியேறுங்கள். ஆர்சிபி-க்கு வாங்க. ராஜாவை போல பாத்துக்குறோம் என சில டுவிட்டுகள் வலம் வருகின்றன.

    Next Story
    ×