search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ராஜஸ்தானை எலிமினேட்டரில் சுற்றில் ஆர்சிபி வீழ்த்தும்- அம்பத்தி ராயுடு
    X

    ராஜஸ்தானை எலிமினேட்டரில் சுற்றில் ஆர்சிபி வீழ்த்தும்- அம்பத்தி ராயுடு

    • சமீபத்தில் ஆர்சிபி-யின் செயல்பாடுகளை பார்க்கும் போது நிச்சயம் அவர்களுக்கான வெற்றி வாய்ப்பு தான் அதிகமாக உள்ளது.
    • ராஜஸ்தான் அணியானது அடுத்தடுத்து நான்கு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது.

    17-வது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது. லீக் சுற்றின் முடிவின் அடிப்படையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

    இந்நிலையில் எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபி அணி வெற்றி பெறும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    என்னைப் பொறுத்தவரை எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபி அணி வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளது என நம்புகிறேன். ஏனெனில் சமீபத்தில் அவர்களின் செயல்பாடுகளை பார்க்கும் போது நிச்சயம் ஆர்சிபி அணிக்கான வெற்றி வாய்ப்பு தான் அதிகமாக உள்ளது. அதேசமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது அடுத்தடுத்து நான்கு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது.

    மேலும் அவர்களுக்கு இருந்த கடைசி போட்டியும் மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இதனால் ஆர்சிபி அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஏனெனில் ஆர்சிபி அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கு தங்கள் பணி என்ன என்பது நன்றாக தெரியும். அவர்களும் அதனை சிறப்பாக செய்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு தான் வெற்றிக்கான வாய்ப்பு அதிகம்.

    இவ்வாறு ராயுடு கூறினார்.

    Next Story
    ×