என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சதம் அடித்த கோலி.. தலை வணங்கிய ஆர்சிபி வீரர்கள்.. வைரலாகும் வீடியோ
    X

    சதம் அடித்த கோலி.. தலை வணங்கிய ஆர்சிபி வீரர்கள்.. வைரலாகும் வீடியோ

    • கோலி, சிராஜ், பார்னல் ஆகியோர் ரொனால்டோவை போல வெற்றியை கொண்டாடினர்.
    • ஐதராபாத் அணியின் இளம் வீரர்கள் பலரும் கோலியிடம் ஆட்டோகிராஃப் மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் ஆர்சிபி - ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் விராட் கோலியின் அதிரடி சதத்தால் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல பெங்களூரு அணிக்கு வாய்ப்புக்கு உள்ளது.

    இந்நிலையில் விராட் கோலி சதம் அடித்த போது ரசிகர்கள் அனைவரும் கொண்டினர். அப்போது ஆர்சிபி வீரர்கள் விராட் கோலி நோக்கி தலை வணங்கி கொண்டாடினர். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்தப் போட்டிக்கு பின் விராட் கோலி ஐதராபாத் அணியின் இளம் வீரர்களுடன் சிறிது நேரம் செலவிட்டார். கிட்டத்தட்ட டோனியை போலவே எதிரணியின் இளம் வீரர்களுடன் செலவிடுவதை கோலி வழக்கமாக கொண்டுள்ளார். நேற்றும் ஐதராபாத் அணியின் இளம் வீரர்கள் பலரும் கோலியிடம் ஆட்டோகிராஃப் மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன்பின்னர் விராட் கோலி அவர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார்.

    மேலும் கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு ஆர்சிபி அணியில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஏற்கனவே விராட் கோலி மற்றும் சிராஜ் ஆகியோர் ரொனால்டோவின் தீவிர ரசிகர்கள் என்று அறிவித்துள்ள நிலையில், ஆர்சிபி அணியின் பார்னல்லும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.

    இவர்கள் மூவரும் இணைந்து ரொனால்டோவின் வெற்றிக் கொண்டாட்டத்தை ஆர்சிபி ஓய்வறையில் செய்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×