என் மலர்

  கிரிக்கெட்

  மோசமான சாதனையில் ரோகித் சர்மாவுக்கும் தினேஷ் கார்த்திக்கும் தான் போட்டியே
  X

  மோசமான சாதனையில் ரோகித் சர்மாவுக்கும் தினேஷ் கார்த்திக்கும் தான் போட்டியே

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவுடன் தினேஷ் கார்த்திக் இணைந்துள்ளார்.
  • இவர்கள் இருவரும் 16 முறை டக் அவுட்டில் வெளியேறி உள்ளனர்.

  ஐபிஎல் தொடரில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. 3 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

  அதன்படி களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 171 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து விளையாடிய ராஜஸ்தான் அணி 59 ரன்னில் சுருண்டது.

  முன்னதாக முதல் பேட்டிங் செய்த பெங்களூர் அணியின் கீப்பர் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவுடன் தினேஷ் கார்த்திக் இணைந்துள்ளார். இவர்கள் இருவரும் 16 முறை டக் அவுட்டில் வெளியேறி உள்ளனர்.

  இவர்களுக்கு அடுத்தப்படியாக மந்தீப் சிங், சுனில் நரேன் (15 முறை) உள்ளனர்.

  Next Story
  ×