search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஒரு நல்ல போட்டியை பார்க்கவிருக்கிறோம்: மும்பை - குஜராத் போட்டி குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து
    X

    ஒரு நல்ல போட்டியை பார்க்கவிருக்கிறோம்: மும்பை - குஜராத் போட்டி குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து

    • இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
    • குஜராத் டைட்டன்ஸ் அணியும் மிகச்சிறந்த அணி. எனவே அதை வீழ்த்துவது மும்பை இந்தியன்சுக்கு எளிதாக இருக்காது.

    ஐபிஎல் 16-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் தகுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி சிஎஸ்கே அணி நேரடியாக இறுதிபோட்டிக்கு முன்னேறியது.

    எலிமினேட்டரில் லக்னோவை வீழ்த்திய மும்பை இந்தியன்சும், முதல் தகுதிப்போட்டியில் தோல்வியடைந்த குஜராத் டைட்டன்சும் 2-வது தகுதிப்போட்டியில் மோதுகின்றன. இன்று அகமதாபாத்தில் நடக்கும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் 28-ம் தேதி நடக்கும் இறுதிபோட்டியில் சிஎஸ்கேவை எதிர்கொள்ளும்.

    5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும் 2-வது தகுதிப்போட்டியில் மோதுகின்றன. இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

    இந்நிலையில், இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் 50 சதவீதம் வாய்ப்புள்ளது என ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா:-

    குஜராத் டைட்டன்ஸ் அணியும் மிகச்சிறந்த அணி. எனவே அதை வீழ்த்துவது மும்பை இந்தியன்சுக்கு எளிதாக இருக்காது. இந்த சீசன் முழுவதும் முதலிடத்தில் இருந்த அணி குஜராத். எனவே குஜராத் அணியை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த போட்டி மிக அழுத்தம் நிறைந்ததாக இருக்கும்.

    இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் 50-50 வாய்ப்புள்ளது. ஒரு நல்ல போட்டியை பார்க்கவிருக்கிறோம். முகமது ஷமியை மும்பை இந்தியன்ஸ் தொடக்க வீரர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்

    என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×