search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஒருநாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா..? 270 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

    • ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 47 ரன்கள் எடுத்தார்
    • இந்தியா தரப்பில் ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    சென்னை:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    துவக்க ஜோடியான டிராவிஸ் ஹெட்- மிட்செல் மார்ஷ் சிறப்பான தொடக்கம் அளித்தனர். ஸ்கோர் 68 ஆக இருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. டிராவிஸ் ஹெட் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். மறுமுனையில் அரை சதத்தை நோக்கி பயணித்த மிட்செல் மார்ஷ் 47 ரன்னில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.

    லபுசங்கே (28), அலெக்ஸ் கேரி (38), மார்கஸ் ஸ்டாய்னிஸ் (25), சீன் அப்பாட் (26) ஆகியோரும் தங்கள் பங்களிப்பை வழங்க, 49 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இந்தியா தரப்பில் ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அக்சர் பட்டேல், சிராஜ் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

    ஏற்கனவே நடந்த இரண்டு போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சம நிலையில் உள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக உள்ளது.

    Next Story
    ×