என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    லைவ் அப்டேட்ஸ்: நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா
    X

    லைவ் அப்டேட்ஸ்: நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
    • தரம்சாலாவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

    தரம்சாலா:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இமாசல பிரதேசத்தின் தர்மசாலாவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்குகிறது.

    இந்திய அணியில் முகமது ஷமி, சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    Live Updates

    • 22 Oct 2023 5:35 PM IST

      குல்தீப் யாதவின் கடைசி ஓவரில் பிலிப்ஸ் 23 ரன்னில் அவுட்டானார்.


    • 22 Oct 2023 5:20 PM IST

      சராசரியாக 85 முதல் 90 கிமீ வேகத்தில் வீசக்கூடிய குல்தீப் யாதவ் மிட்செல் பேட்டிங் செய்த போது 113 கிமீ வேகத்தில் வீசினார்.

    • 22 Oct 2023 5:17 PM IST

      சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மிட்செல் சதம் அடித்து அசத்தினார்.

       


    • 22 Oct 2023 5:02 PM IST

      நியூசிலாந்து அணியின் கேப்டன் விக்கெட்டை குல்தீப் யாதவ் வீழ்த்தினார்.

    • 22 Oct 2023 4:34 PM IST

      3 -வது கேட்ச் மிஸ் செய்த இந்திய அணி. ரச்சின் ரவீந்திராவுக்கு ஜடேஜா கேட்ச் மிஸ் செய்தார். பும்ரா, கேஎல் ராகுல் மிட்செலுக்கு கேட்ச் மிஸ் செய்துள்ளனர்.

    • 22 Oct 2023 4:29 PM IST

      ஜடேஜாவை தொடர்ந்து மிட்செல் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கேஎல் ராகுல் தவறவிட்டார்.

    • 22 Oct 2023 4:23 PM IST

      குல்தீப் யாதவ் 5 ஓவர்கள் வீசிய நிலையில் 48 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார்.

    • 22 Oct 2023 3:52 PM IST

      ரச்சின் ரவீந்திரா- மிட்செல் ஜோடி 102 பந்துகளில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகின்றனர்.

    • 22 Oct 2023 3:51 PM IST

      கேட்ச் மிஸ் செய்யப்பட்ட ரச்சின் ரவீந்திரா அரை சதம் அடித்து அசத்தினார்.


    • 22 Oct 2023 3:39 PM IST

      நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

    Next Story
    ×