என் மலர்

  கிரிக்கெட்

  டி20 தொடரை வெல்லுமா இந்தியா? டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார் பாண்ட்யா
  X

  டி20 தொடரை வெல்லுமா இந்தியா? டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார் பாண்ட்யா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன
  • இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

  ராஜ்கோட்:

  தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 2 ரன்னில் வெற்றி பெற்றது. புனேயில் நடந்த 2-வது போட்டியில் இலங்கை அணி 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

  இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில், இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

  இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இலங்கை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பனுகா ராஜபக்சேவுக்கு பதில் அவிஷ்கா பெர்னாண்டோ சேர்க்கப்பட்டுள்ளார்.

  இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும். தொடரை கைப்பற்றப்போவது இந்தியாவா? இலங்கையா? என்பது இன்று இரவு தெரிந்துவிடும்.

  இந்திய அணி சொந்த மண்ணில் 20 ஓவர் தொடரை இழந்து நீண்ட காலம் ஆகிறது. இதனால் அதை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி கடுமையாக போராடும். அதே நேரத்தில் இலங்கை அணி இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லும் வேட்கையில் உள்ளது.

  Next Story
  ×