search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    லைவ் அப்டேட்ஸ்: 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது இந்தியா
    X
    LIVE

    லைவ் அப்டேட்ஸ்: 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது இந்தியா

    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்துவருகிறது.
    • பெங்களூருவில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

    பெங்களூரு:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் உலக கோப்பை தொடரின் 45-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.

    Live Updates

    • 12 Nov 2023 1:24 PM GMT

      நெதர்லாந்து அணி 8.1 ஓவர்களில் 50 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.

    • 12 Nov 2023 1:07 PM GMT

      சிராஜ் ஓவரில் வெஸ்லி பாரேசி கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

    • 12 Nov 2023 12:20 PM GMT

      இந்திய அணி 50 ஓவர் முடிவில் 410 ரன்கள் குவித்துள்ளது. கேஎல் ராகுல் 104 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    • 12 Nov 2023 12:13 PM GMT

      ஷ்ரேயாஸ் அய்யரை தொடர்ந்து கேஎல் ராகுல் சதம் விளாசினார்.

    • 12 Nov 2023 12:02 PM GMT

      முதல் 4 வீரர்கள் அரை சதம் விளாசிய நிலையில் கேஎல் ராகுலும் அரை சதம் விளாசினார். 


    • 12 Nov 2023 11:54 AM GMT

      முதல் 3 வீரர்கள் அரை சதத்துடன் அவுட் ஆன நிலையில் ஷ்ரேயாஸ் அய்யர் சதம் விளாசினார்.

    • 12 Nov 2023 11:16 AM GMT

      ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல் 4 வீரர்கள் அரை சதம் விளாசி சாதனை படைத்துள்ளனர்.


    • 12 Nov 2023 10:57 AM GMT

      கில், ரோகித், விராட் கோலி ஆகியோரை தொடர்ந்து 4-வது வீரராக ஷ்ரேயாஸ் அரை சதம் விளாசினார். 

    • 12 Nov 2023 10:37 AM GMT

      கில் 51 ரன்களில் அவுட் ஆனதை தொடர்ந்து விராட் கோலி 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    • 12 Nov 2023 10:31 AM GMT

      நிதானமாக விளையாடி கோலி 53 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார்.


    Next Story
    ×