என் மலர்
கிரிக்கெட் (Cricket)

லைவ் அப்டேட்ஸ்: 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது இந்தியா
- உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்துவருகிறது.
- பெங்களூருவில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
பெங்களூரு:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் உலக கோப்பை தொடரின் 45-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.
Live Updates
- 12 Nov 2023 3:52 PM IST
ஸ்ரேயாஸ் மற்றும் கோலி ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகிறது.
- 12 Nov 2023 3:22 PM IST
ஒரு ஆண்டில் அதிக சிக்சர்கள் விளாசிய டி வில்லியர்ஸ் (58) சாதனையை ரோகித் (59) முறியடித்துள்ளார்.
- 12 Nov 2023 2:50 PM IST
அதிரடியாக விளையாடிய கில் 32 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்திய அணி 11.5 ஓவர்களில் 100 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.
- 12 Nov 2023 2:31 PM IST
ரோகித் மற்றும் சுப்மன் கில்லின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 6 ஓவர் முடிவில் 53 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரோகித் 25 ரன்களுடனும் கில் 26 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.






