search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஹர்திக் பாண்ட்யா டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன்- சவுரவ் கங்குலி
    X

    ஹர்திக் பாண்ட்யா டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன்- சவுரவ் கங்குலி

    • டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஐபிஎல் தொடரை அடிப்படையாக வைத்து தேர்வு செய்யக்கூடாது.
    • ஜெய்ஸ்வால், படிதார், அபிமன்யு ஈஸ்வரன் போன்றவர்கள் நிறைய ரன்களை அடித்துள்ளனர்.

    இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதிப்போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. அதனால் 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் தோல்வியை சந்தித்த இந்தியா வெறும் கையுடன் நாடு திரும்பியது.

    கடந்த வருடம் இதேபோல இருதரப்பு தொடர்களில் அசத்தி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தும் முக்கியமான ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கு சொதப்பலாக செயல்பட்ட சீனியர் வீரர்கள் முக்கிய காரணமாக அமைந்தனர்.

    அதன் காரணமாக அதிருப்தியடைந்துள்ள ரசிகர்கள் இவர்களை வைத்துக் கொண்டு எப்போதும் கோப்பையை வெல்ல முடியாது என்று கொந்தளிப்பதுடன் டி20 கிரிக்கெட்டை போலவே புதிய கேப்டன் தலைமையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

    இந்நிலையில் 4-வது பவுலர் இடத்திற்கு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா விளையாட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வெறும் ஒரு போட்டியில் சந்தித்த தோல்வியை வைத்து நாம் முடிவுக்கு வந்து விடக்கூடாது. இந்தியாவில் எப்போதும் சிறப்பான திறமை இருக்கிறது. அதே சமயம் நான் திடீரென விராட் கோலி அல்லது புஜாரா ஆகியோரை தாண்டி இந்திய அணியை பார்க்க விரும்பவில்லை. குறிப்பாக விராட் வெறும் 34 வயதை மட்டுமே நிரம்பியுள்ளார். அதே சமயம் இந்தியாவுக்கு விளையாட ஏராளமான வீரர்கள் தயாராக இருக்கின்றனர். அதற்கு சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தும் வீரர்களை நாம் பார்க்க வேண்டும்.

    டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஐபிஎல் தொடரை அடிப்படையாக வைத்து தேர்வு செய்யக்கூடாது. எனவே உள்ளூர் தொடர்களில் மட்டுமே நீங்கள் சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அந்த வகையில் ஜெய்ஸ்வால் அல்லது படிதார், பெங்கால் அணியில் விளையாடும் அபிமன்யு ஈஸ்வரன் போன்றவர்கள் நிறைய ரன்களை அடித்துள்ளனர். சுப்மன் கில், ருதுராஜ் கைக்வாட் ஆகியோர் மிகவும் இளமையானவர்கள்.

    அதை விட என்னுடைய கருத்தை ஹர்திக் பாண்டியா கேட்பார் என்று நம்புகிறேன். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறிப்பாக இங்கிலாந்து போன்ற கால சூழ்நிலைகளில் இந்தியாவுக்காக கண்டிப்பாக விளையாட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×