search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டதால் ராகுல் நீக்கப்படுவார்- ஹர்பஜன்சிங் சொல்கிறார்
    X

    துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டதால் ராகுல் நீக்கப்படுவார்- ஹர்பஜன்சிங் சொல்கிறார்

    • அணியின் துணை கேப்டனாக இல்லாத போது வெளியே உட்கார வைப்பது நிர்வாகத்துக்கும், தேர்வாளர்களுக்கு எளிதாகி விடும்.
    • கே.எல்.ராகுல் திறமையான வீரர்தான். ஆனால் அவர் திணறி வருகிறார்.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னனி பேட்ஸ்மேன்களில் ஒருவர் லோகேஷ் ராகுல். டெஸ்டில் அவரது ஆட்டம் மோசமாக இருக்கிறது. கடந்த 6 டெஸ்டில் அவர் ஒரு அரைசதம் மட்டுமே எடுத்தார்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் துணை கேப்டன் பதவி ராகுலிடம் இருந்து பறிக்கப்பட்டது.

    இதனால் வருகிற 1-ந் தேதி இந்தூரில் தொடங்கும் 3-வது டெஸ்டில் அவர் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    11 பேர் கொண்ட அணியில் அவருக்கு பதிலாக சுப்மன்கில் இடம் பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    இந்த நிலையில் துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டதால் லோகேஷ் ராகுல் 11 பேர் கொண்ட அணியில் இருந்து நீக்கப்படுவார் என்று முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அணியின் துணை கேப்டனாக இல்லாத போது வெளியே உட்கார வைப்பது நிர்வாகத்துக்கும், தேர்வாளர்களுக்கு எளிதாகி விடும். கே.எல்.ராகுல் திறமையான வீரர்தான். ஆனால் அவர் திணறி வருகிறார். ரோகித் சர்மாவுடன், சுப்மன்கில் தொடக்க வீரராக ஆடுவதை பார்ப்போம்.

    இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

    Next Story
    ×