search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    எதிர்காலம் குறித்து டோனி எதுவும் பேசவில்லை- சி.எஸ்.கே.அணி தகவல்
    X

    எதிர்காலம் குறித்து டோனி எதுவும் பேசவில்லை- சி.எஸ்.கே.அணி தகவல்

    • பெங்களூரு அணியுடனான போட்டியின்போது அவர் ஆட்டம் இழந்த போது ஏமாற்றத்துடன் காணப்பட்டார்.
    • நாங்கள் அவர் மீண்டும் விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறோம்.

    ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு அணியிடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதால் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது.

    இந்தப் போட்டிதான் டோனியின் கடைசி ஐ.பி.எல் என்ற கருத்து பரவி வருகிறது. இந்த நிலையில் டோனி தனது எதிர்காலம் குறித்து எங்களிடம் எதுவும் பேசவில்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    எதிர்காலம் குறித்து டோனி எந்த முடிவையும் அணி நிர்வாகத்திடம் தெரிவிக்கவில்லை. நாங்கள் அதைப் பற்றி பேசவில்லை, நாங்கள் அவரிடம் கேட்க மாட்டோம். நாங்கள் அவரை முடிவு செய்ய அனுமதிப்போம் என்பது உங்களுக்கு தெரியும்.அவர் எங்களுக்குத் தெரிவிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சி.எஸ்.கே. அணியில் விளையாடிய முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு கூறியதாவது:-

    இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. அவ்வளவுதான். எனவே இதுவே டோனியின் கடைசி ஐ.பி.எல். போட்டியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவரது கிரிக்கெட் பயணத்தை இப்படி முடிப்பதைப் பார்க்க நான் விரும்பவில்லை.

    பெங்களூரு அணியுடனான போட்டியின்போது அவர் ஆட்டம் இழந்த போது ஏமாற்றத்துடன் காணப்பட்டார். பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என்று டோனி நினைத்தார். நாங்கள் அவர் மீண்டும் விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×