search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    அயர்லாந்து போட்டியில் பும்ரா விளையாடுகிறார்?
    X

    அயர்லாந்து போட்டியில் பும்ரா விளையாடுகிறார்?

    • 20 ஓவர் உலக கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது.
    • இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழு அவரை கண்காணித்து வருகிறது.

    மும்பை:

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் ஜஸ்பிரித் பும்ரா. முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு அவர் சர்வதேச போட்டிகளில் ஆடவில்லை.

    கடைசியாக கடந்த செப்டம்பர் 25-ந் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐதராபாத்தில் நடந்த 20 ஓவர் போட்டியில் விளையாடினார்.

    பும்ரா இல்லாதது அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. 20 ஓவர் உலக கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இந்நிலையில் ஆபரேசனுக்கு பிறகு பும்ரா முழு குணமடைந்து வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர் பயிற்சி போட்டிகளில் விளையாடுகிறார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழு அவரை கண்காணித்து வருகிறது.

    இந்நிலையில் அயர்லாந்து தொடரில் பும்ரா விளையாடலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. முழு உடல் தகுதியை எட்டி வருவதால் அவர் அயர்லாந்து போட்டி யில் ஆடலாம்.

    இந்திய அணி ஆகஸ்டு மாதம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.

    இதேபோல விபத்தில் காயம் அடைந்த ரிஷப்பண்டும் குணமடைந்து உள்ளார். அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதேபோல விக்கெட் கீப்பிங் பயிற்சியும் மேற்கொண்டு உள்ளார். அவரது உடல் தகுதி தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு வருகிறது. இதேபோல காயத்தில் இருந்து குணமடைந்த கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே அயர்லாந்து தொடரில் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. சூர்யகுமார் யாதவ் கேப்ட னாக நியமிக்கப்படலாம் என்றும் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

    Next Story
    ×